Tuesday, January 24, 2012

கஷ்டங்களை கலையும் தெய்வீக மந்திரங்கள்



இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் துன்பப்பட்டுகொண்டு தான் இருக்கின்றோம்.இவை அனைத்திற்க்கும் ஆன்மிக ரீதியிலான விஷயங்கள் .கடவுள் வழிபாடு
மட்டுமே உயர்வைத்தரும்.அந்த வகையில் கடுமையான ராகுதோஷம்,கேதுதோஷம் உள்ளவர்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.அப்படிப்பட்டவர்கள் தினமும் கோளறு பதிகம் பாராயணம் செய்தால் ராகுதோஷம் கேதுதோஷம் விலகுவது மட்டுமின்றி நவக்கிரஹதோஷமும் விலகுவது அனுபவத்தில் கண்ட உண்மை .
“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்)

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து
எல்லாம் வல்ல ஈசனை நினைத்தோ உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்தோ கோளறு பதிகம் தினமும் பாடி வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்


இதே போல இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஆன்மிகக்கடல் வீரமுனி அவர்களின் இணையதளத்தில் வெளியான தாரித்ரிய சிவஸ்தோத்ரம் என்ற மந்திரத்தை அவருக்கு தெரிந்த அர்ச்சகர் கொடுத்திருக்கிறார்.இவற்றை தினமும் ஒருமுறையாவது வாசித்து வந்தால் ஒரு மாதத்தில் கடுமையான முன்னேற்றம் தெரியும் எனச்சொல்லப்படுகிறது.இதை வாசித்தவுடன்
எனக்கு சில பணவரவுகள் வர ஆரம்பித்திருக்கிறது சிவபெருமானை நினைத்து தினமும் சொல்லி வாருங்கள் நல்ல பலனை நிச்சயம் அடைவீர்கள்

கோளறு பதிகம்

"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."

Sunday, January 22, 2012

திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள்

இவர் 1870ம் ஆண்டு பிறந்தார் இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார்.இவரின் வரலாறை கேட்டால் வித்தியாசமானது.இவர் தங்கக்கை சேஷாத்ரி என்றும் அழைக்கப்பட்டார்
இதற்க்கு காரணம் இவர் சிறுவயதாக இருந்தபோது இவர் ஊரில் இருந்த கண்ணன் கோவிலில்
விழா நடந்தது.அந்தகோவில் விழாவிற்க்கு இவர் தன் தாயுடன் சென்று இருந்தார் அந்தநேரமாக‌
அந்தக்கோவிலில் ஒருவன் பொம்மை விற்றுகொண்டிருந்தான் சிறு குழந்தையான சேஷாத்ரி

பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்க தாய் வேண்டாம் என்றார்.இதை பார்த்த பொம்மை விற்றவன் அம்மா சிறு குழந்தை கேட்கிறது உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு பொம்மை நான் சும்மா தருகிறேன் என்று சேஷாத்ரியிடம் ஒரு பொம்மையை கொடுத்தான்
சிலமணிநேரங்களுக்கு பிறகு சேஷாத்ரியை தேடி பொம்மை விற்பவன் வந்தான் அம்மா இது சாதாரண குழந்தை இல்லை ஞானக்குழந்தை என்றான்.ஏனென்றால் சற்றுமுன் என்னிடம் நிறைய பொம்மைகள் இருந்தன பலநாட்களாக அந்தபொம்மைகள் விற்கவில்லை இப்போது
விற்றுதீர்ந்துவிட்டது இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை இது சாதாரணகை இல்லை தங்கக்கை என்று பாராட்டினான் அதனாலேயே இந்தபெயர் வந்தது

ஞானமார்க்கத்தை தேடிய சேஷாத்ரி தனது இளமைப்பருவத்தில் திருவண்ணாமலை வந்தார்
அங்கேயே சுற்றிதிரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில் சிலர் மீது மட்டும் [கடும் தோஷம் உடைய]
பக்தர்கள் மீது தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார் பலருக்கு பல்வேறு விதமான நோய்கள் தீர்ந்துஇருப்பதாக இதனால் நம்பப்படுகிறது பலருக்கு பல்வேறுவிதமான தோஷங்கள்
விலகிஉள்ளது.இவர் திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும் அழைக்கப்பட்டார் அதற்க்குகாரணம் இவர் ஊரை சுற்றி வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது.திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார் கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார் கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும் வியாபாரிகளும் இவர் பார்வை நம் மீது படாதா என ஏங்குவர்.ஆனால் சரியான நபருக்கு மட்டுமே இவரின் கருணைப்பார்வை படும். ஒருமுறை ஒரு சவஊர்வலம் சென்று
கொண்டிருந்தது அதன் பின்னே சென்ற இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள் சென்றார்
சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில் வைத்து இருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை தட்டிவிட்டார். ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென் ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள் ஒரு நாகம் இறந்து கிடந்தது சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை கையெடுத்து வணங்கினர் மக்கள் அனைவரும்.இப்படி இவரின் வரலாறு அதிகம். ஒரு முறை ஊரில் அம்மை நோய் அதிகம் இருந்தது யாரும் வெளியில் வரக்கூடாது என்ற ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவை மீறி வெளியில் வந்தார் இவரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு விழுப்புரம் செல்வதற்க்கு நீதிபதி காரில் சென்று கொண்டிருந்தபோது
நீதிபதியின் கண்களுக்கு சாலையோரத்தில் இவர் தெரிந்தார் அப்படியே தன் உதவியாளரை அனுப்பி ஜெயிலில் சேஷாத்ரி உள்ளாரா எனப்பார்த்து வரச்செய்தார் அவர் அங்கு பத்திரமாக‌
உள்ளார் என உதவியாளர் வந்து தகவல் சொன்னார் .நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை அவர் ஒரு மகான் எனப்புரிந்துகொண்டார் தன் தவறை உணர்ந்து அவரை விடுதலை செய்தார்.இப்படி பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமிகள் 1929ம் ஆண்டு மறைந்தார் அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.

Wednesday, January 4, 2012

விஷ்ணு சகஸ்ரநாமம்

தீயபாதிப்புகள்,ஜாதக ரீதியான கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்வதற்கு கடவுள் வழிபாடே


சிறந்தது.விஷ்ணு சகஸ்ரநாமம் பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியில் தனது உயிரை  துறந்தார். இதுவே பீஷ்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது . பீஷ்மாஷ்டமி அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாடினால் மிகவும் புண்ணியம்.இன்று வைகுண்ட ஏகாதசி நாள் ஆகும் இன்றும் இப்பாடலை பாடி
விஷ்ணு பெருமானின் அருள்பெறுவோம்    விஷ்ணு சகஸ்ரநாமம் டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும்    விஷ்ணு சகஸ்ரநாமம் பாடல் வரிகளை பார்த்து படிக்க இங்கு சொடுக்குக‌.



கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...