சுமார் 3வருடங்களுக்கு முன் நான் சில மனத்துயரங்களில் ஆழ்ந்திருந்தபோது சக்தி விகடனில்
தொடராக வந்து பின்பு புத்தகமாக வந்த விகடன் பிரசுரத்தின் சதுரகிரி யாத்திரை என்ற புத்தகத்தை இராமநாதபுரத்தில் உள்ள ஒரு புத்தகக்கடையில் வாங்கினேன்சதுரகிரி யாத்திரை - புத்தகம் -(E-Book - with download option) http://www.ziddu.com/download/15343557/Sathuragiri.pdf.html
திரு சீனிவாசன்
அவர்கள் எழுதிய புத்தகம் அது. ஏற்கனவே அந்த மலையின் அமானுஷ்யங்களும் 18 சித்தர்களும்
அங்கே அரூபமாக வாழ்கிறார்கள் என்ற தகவல்களையும் சிலர் சொல்லி ஓரளவுக்கு கேள்விப்பட்டு இருக்கிறேன்.எனக்கு அரைகுறையாக தெரிந்த தகவல்களை இந்த புத்தகம் முழுதாக விளக்கியது.அந்த புத்தகம் படித்தவுடன் சதுரகிரி சென்றே ஆக வேண்டும் என்று முழு
மூச்சாக இறங்கினேன்.எங்கள் வீட்டில் இதை சொன்னபோது என்னை சிறுவயதில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லாமலும் தனிமையிலும் வளர்த்துவிட்டார்கள் அதனால் எனக்கு
வயதானாலும் வீட்டில் அனுமதி வாங்காமல் செல்ல முடியவில்லை.சாதாரண கோவில் என்றால் ஒத்துக்கொள்வார்கள் அது மலைக்கோவில் கடினமான பாதை என்றுசிலர் என் வீட்டரை பயம் காட்டி வைத்துஇருந்ததாலும் என் வீட்டில் மிகவும் பயந்தார்கள் அதனால் எனக்கு
ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் வேறு சிவன் கோவிலுக்கு சென்று வா அங்கு வேண்டாம்
அங்கு நமது ஊரில் இருப்பவர்களில் யாராவது இருந்தால் அவரின் துணையோடு சென்று வா அதுவரை அங்கு செல்லவேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டனர்.நான் எப்படியும் அந்த
மலையையும் சுந்தரமகாலிங்கத்தையும் பார்த்துவிடவேண்டும் என்று வெறியில் இருந்தேன்
ஒருநாள் எங்களது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் அவர் பெயர் தவமணி.அவரின் வீட்டில் நான்
பேசிக்கொண்டு இருந்தபொழுது சதுரகிரி மலை பற்றி ஒரு டி.வி.டி இருந்தது இது உங்களுக்கு
எப்படி வந்தது என நான் கேட்டபோது நம்மூரில்தான் ஒருவர் வனக்காவலராக சதுரகிரி மலையில் வேலை செய்கிறாரே அவர் கொடுத்தார் என சொன்னார் .அவர் யார் என விசாரித்து
அவர் மூலமாக சதுரகிரி மலைக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.வீட்டிலும் சதுரகிரி
மலையிலே வேலை செய்பவர் சொந்த ஊரில் இருந்ததாலும் எங்கள் வீட்டில் குடியிருப்பவர்
அவர் நண்பர் என்பதாலும் நான் சொல்லும் தவமணி என்பவர் என்னோடு வருகிறேன் என சொன்னதாலும் என் வீட்டில் ஒரு வழியாக அனுமதிகொடுத்தனர்.இறைவன் சதுரகிரிக்கு நான்
வரும் எண்ணத்திலே இருப்பதை அறிந்துகொண்டு எப்படி கனெக்சன் கொடுக்கிறார் பாருங்கள்
நான் கனவிலும் நம்மூரை சேர்ந்தவர் சதுரகிரி மலையிலே வனப்பாதுகாவலராக இருப்பார்
என நினைத்துப்பார்க்கவில்லை.இறைவனின் திருவிளையாடல் அது.ஒரு வழியாக கடினமான
செங்குத்தான மலைப்பாதைகளில் ஏறி சதுரகிரி மலையில் பயணம் செய்தோம்.வழியில் ஒரு அதிசயநாவல் ஊற்று உள்ளது.அந்த தண்ணீரை பருகினால் சர்க்கரை நோய் குணமாகி விடும்
என்று கூறப்படுகிறது தண்ணீரின் சுவையோ அலாதியாக இருந்தது.ஒரு வழியாக மலை உச்சியை அடைய 3மணிநேரம் ஆனது மாலை 6 மணிக்கு நாங்கள் சென்றபோது இரவு பூஜை
சாமிக்கு நடந்துகொண்டிருந்தது நான்,வனக்காவலர்.தவமணிமாமா,என் இளையசகோதரன்
நண்பர் சண்முகம்,பூமிநாதன் ஆகியோர் சென்றுஇருந்தோம்.மலையில் நடந்து சென்ற களைப்பு இருந்ததாலும் நாங்கள் சென்ற போது பூஜை முடிந்து விட்டதாலும் காலையில்
சாமிகும்பிடலாம் என்று அங்கு இருந்த கஞ்சிமடத்தில் படுத்துவிட்டோம்.கஞ்சி மடம் என்பது
காளிமுத்து சுவாமிகள் என்பவரால் தொடங்கப்பட்டு எந்த நேரம் சதுரகிரி யார் சென்றாலும்
அவர்களுக்கு சுடசுட அன்னம் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் எந்தவித உணவகங்கள் கடைகளோ இல்லாத மலையாதலால் அங்கு வரும் பயணிகளுக்கு இது ஒரு
வரப்பிரசாதம் இந்த திட்டத்தை ஆரம்பித்த மகான் காளிமுத்து சுவாமிகள் போற்றுதலுக்குரியவர்.
காலையில் எழுந்தோம் குளித்தோம் சுந்தரமகாலிங்கத்தையும்,சந்தன மகாலிங்கத்தையும்
தரிசித்தோம்.சுந்தரமகாலிங்கம் சன்னதியில் இருந்த ஆன்மிகமும் அமைதியும் அங்கு இருந்த ஊதுபத்தியின் வாசனையும்
என்னை ஏதோ செய்தது. மலை இறங்க ஆரம்பித்தோம் இறங்கும் வழியில் கோரக்கசித்தர் பாறையில்
அமர்ந்து அவரையும் தரிசித்துவிட்டு அரூபமாக அந்த மலையில் வாழும் அனைத்து மகான்களையும் நினைத்துக்கொண்டு கீழே இறங்கினோம் இங்கு சித்தர்கள் நாய் ரூபத்தில்
இருப்பதாகவும் இங்கு வரும் பயணிகளுக்கு பின்னால் ஏதாவது ஒரு நாய் கூடவே வருவது
அதிகம் பேருக்கு நடக்கும் விஷயம்.ஒரு வழியாக கீழே இறங்கினோம் மாருதி ஓம்னி வண்டியில் ஏறியவுடன் பழைய கதைகள்,குடும்ப,சினிமாகதைகள் என்று பேசிக்கொண்டே
சென்றோம் அருப்புக்கோட்டை தாண்டி ஒரு காட்டுப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது சுற்றிலும் வயற்காடு திடீரென்று காலையில் சுந்தரமகாலிங்கம்
சன்னதியில் சாமி தரிசனம்செய்தது நினைவுக்கு வந்தது நினைவு வந்ததுதான் தாமதம் குப் குப் என்று காலையில் என்ன ஊதுபத்தியின் வாசனையில் மனதை தொலைத்தேனோ அதே
ஊதுபத்தியின் மணம் சுற்றிலும் வீடோ கடையோ மனிதர்களோ எதுவும் கிடையாது அப்புறம்
எப்படி இந்த மணம் நமக்கு வருகிறது என்று புரியவில்லை பக்கத்தில் இருந்த மாமா,நண்பர்கள்
என அனைவரிடமும் கேட்டேன் எங்களுக்கு எந்த மணமும் வரவில்லை எனசொல்லி விட்டனர் ஒரு 5 நிமிடம் தொடர்ந்து அடித்த அந்த மணம் அப்புறம் மறைந்து விட்டது
இந்த அமானுஷ்ய சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை ஏற்கனவே நான் படித்த
புத்தகத்தில் சுந்தரமகாலிங்கம்,சந்தனமகாலிங்கம்,18சித்தர்கள் சதுரகிரி சென்று வந்தவர்களின்
வாழ்க்கையில் நடத்திய திருவிளையாடல்களை நான் படித்திருக்கிறேன் ஊருக்கு வந்தவுடன்
முதல் வேளையாக அது என்ன பத்தி என்பதை கண்டறிந்து அது சுகந்த சுவர்ணா என்ற அகர்பத்தி என்பதை கண்டறிந்து அதைத்தான் வீடு அலுவலகம் போன்றவற்றிற்க்கு பயன் படுத்திவருகிறேன் அவ்வளவு ஒரு ஆன்மிகமணம் அந்தப்பத்தியில் இருப்பதை மறுக்கமுடியாது இறைவன் நடத்திய அந்த பத்தி விளையாட்டையும் மறுக்கமுடியாது
இதை படிப்பதால் என்னை பைத்தியக்காரன் உளருகிறான்,பத்திக்கு விளம்பரம் கொடுக்கிறான்
என தவறாக நினைக்காதீர்கள் நான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.மற்றுமொருமுறை
நான் சதுகிரி சென்று வந்ததை பற்றி அடுத்து ஒரு பதிவில் எழுதுகிறேன்