நாடி ஜோதிடத்திற்க்கு சிறப்பான இடமாக கருதப்படுவது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் ஆகும்.இங்கு சிறப்பாக நாடி ஜோதிடம் பார்த்த பெரியவர்கள் சிலர்
இருந்தனர்.அவர்களில் பலர் மறைந்துவிட்டனர்.தற்போது எல்லா தொழிலிழும் போலிகள்
மலிந்துவிட்டதை போல் இதிலும் போலிகள் பெருகிவிட்டனர்.இருந்தாலும் வைத்தீஸ்வரன்கோவில்,திருச்சி திருவானைக்கோவில் போன்ற இடங்களில் நாடி ஜோதிடம்
குடிசைத்தொழில் போல வேகமாக வளர்ந்து இதில் போலி யார் உண்மை யார் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை.இருந்தாலும் தமிழ்நாட்டில் சென்னையில் அய்யா ஹனுமத்தாசன்
என்பவர் நாடிஜோதிடத்தில் மிகத்துல்லியமாக பலன்களை சொல்லி வரும் வாடிக்கையாளர்களை அசத்தி வந்தார்.சென்னை துறைமுகத்தில் வேலை செய்துகொண்டே
நாடி ஜோதிடம் பார்த்து வந்தார்.பழகுவதற்க்கு இனிமையானவர்.இவர் தன்னிடம் நாடி பார்க்க
வந்தவர்களின் கதையை வைத்து நாடி ஜோதிட கதைகள் என்ற பெயரில் தினத்தந்தி இதழில்
வெளிவந்ததுஇந்த கதைகளை அம்மன் ப்
பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது.அந்த புத்தகத்தையோ தினத்தந்தி
கதைகளையோ படிக்காதவர்களுக்காக நட்பு எனும் வலைதளத்தில் அனைத்து கதைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த கதைகளை படிக்கhttp://www.natpu.in/?category_name=josiamசொடுக்குக
