Showing posts with label Anjaneyar. Show all posts
Showing posts with label Anjaneyar. Show all posts
Thursday, January 3, 2013
கடந்த 200 வருடங்களில் கடவுள் மக்களுக்கு காட்சி கொடுத்த வரலாறு ஒரு பார்வை
தினகரன் நாளிதழ் துணுக்கு செய்திகளாக வெளியிட்டுள்ள இந்த கட்டுரை அற்புதமாக உள்ளது
இதைபார்க்க இங்கு செல்லுங்கள்
Tuesday, November 20, 2012
நம் தலையெழுத்தை மாற்றியெழுதும் திருப்பட்டூர் பிரம்மன் ஆலயம்
இங்கு ஜாதகம் வைத்து வழிபடுவது சிறப்பு பிரதோஷ நாட்கள் வழிபாடும்
கையின் பிரச்சினைகளையும் அவர்கள் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் வந்து அதிலிருந்து மீண்டதையும் பலரின் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார்கள் பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
விகடன் பிரசுரம் இக்கோவிலைப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளது
தினமலரில் வெளிவந்த மற்றொரு கட்டுரை
பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.நன்றி : தினமலர்
Thursday, October 25, 2012
சட்டை முனி சித்தர் அற்புத வரலாறு
மனிதன் முயன்றால், சித்தர்
வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி
இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த
சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி
வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின்
அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.
ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக்
கொள்ளுதல் மிக அவசியம்
தியானச் செய்யுள்
சித்த வேட்கை கொண்டு
சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள்
பெற்ற
அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம்
அருள்வாய்
ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!
இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம்
மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி
இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்
சட்டைமுனி எனும் இந்த சித்தர்
சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய
விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம்
வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க
வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி
வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில்
தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல
கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து
சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார்.
முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ
செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும்
மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.
சட்டைமுனி மன மகிழ்ச்சிக்
கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல்
விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று
தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு
திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார்.
தினம் கோயில் சென்று சிவனை வழிபடத் தவறவில்லை.
ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய
முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய்
போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘
சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார்.
எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’
என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த
சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். இவரை ‘கயிலாயச்
சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி
என்றும் அழைக்கப்படுகிறார்.. சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக
ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து
வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ
இது போகப்போக விளங்கும்” என்றார்.
அம்முனிவரின் உபதேசங்களைக்
கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில்
தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார்
போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து,
ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின்
தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்...
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி
வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம்
கொண்டார்.
இக்கோவில் நடைசாத்துவதற்குள்
அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள்
அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா!
அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக்
கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன.
சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின்
சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.
சட்டைமுனி இயற்றிய நூல்கள்:
சட்டைமுனி நிகண்டு –
1200
சட்டைமுனி வாதகாவியம் –
1000
சட்டைமுனி சரக்குவைப்பு
– 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு
– 500
சட்டைமுனி வாகடம் – 200
சட்டைமுனி முன் ஞானம் பின்
ஞானம் – 200
சட்டைமுனி கற்பம் – 100
சட்டைமுனி உண்மை விளக்கம்
– 51
சித்தர்களுக்கு மனிதனிடம்
எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை,
அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல்,
நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல;
பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை
வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது.
பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர்
என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது.
ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி,
இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக்
காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான
வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
Monday, October 15, 2012
கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க
சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.நல் அறிவு,நல்ல பழக்கங்கள்,நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்விதான் இது எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து முக்கியமான பாவகங்களில் நின்றால் இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் இந்நிலை அமையப்பெற்றோர் நிலை மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய அமைப்பு இருக்கிறதா என ஓவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை பார்க்கவும்.தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற்பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் பயப்படதேவையில்லை
இதற்க்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த
பரிகார ஸ்தலமாக உள்ளது.பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது சிவபெருமான் மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவர் கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படுகிறது.இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்
குறிப்பு; பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய காலை மட்டுமே நல்ல நேரம் இரவில் எந்த தோஷபரிகாரமும் இக்கோவிலில் செய்வது கிடையாது. இது செய்ய முடியாதவர்கள் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி நீங்க ராமன் ராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில்கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற்றான்.இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம்.ராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்
இது வசதியுள்ளவர்களால் செய்யப்படும் பரிகாரம் இதற்க்கு மாற்றாக எளிய பரிகாரத்தை சிவ சேதுபாண்டியன் என்ற ஜோதிடர் எழுதி இருந்தார் இதோ அந்த பரிகாரம்
நல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய்,இழுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்
பழமையான சிவாலயத்திற்க்கு சென்று பலிபீடம்,கொடிமரம்,கொடிமர நந்தி,துவாரபாலகர்,வாயில் கணபதி,அதிகார நந்தி,சூரியன்,சந்திரன்,சமயக்குறவர்கள்,சப்த கன்னிமார்கள்,சுரதேவர்,தட்சிணாமூர்த்தி,கன்னிமார் அருகில் உள்ள கணபதி,சாஸ்தா பீடம்,வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன்,சனீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்
காலபைரவர்,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்
Subscribe to:
Posts (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...
-
சிவகங்கையில் இருந்து 23 கி.மீ., தூரத்தில் உள்ளது ஏரியூர். இங்குள்ள மலை மருந்தீஸ்வரர், முனிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. மலையை சுற்றி அரிய...
-
நாடி ஜோதிடத்திற்க்கு சிறப்பான இடமாக கருதப்படுவது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் ஆகும்.இங்கு சிறப்பாக நாடி ஜோதிடம் பார்த்த பெரியவர்கள் சி...
-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...





