Saturday, March 17, 2012

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை

திங்களூர்

சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம்.

நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்
அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்
குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான்  தகுந்த ஜோதிட ஆலோசகர்களின்  ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்தது
அதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் .

தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பல கோவில்களை கட்டினர் அவற்றில் தஞ்சை பகுதிகளை ஆண்ட சோழமன்னர்களும் சரபோஜி மன்னர்களும் பலவிதமான சிவாலயங்களை கட்டினர்.ஓவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு தஞ்சை மாவட்டத்தை சுற்றித்தான்
அனைத்து நவக்கிரககோவில்களும் உள்ளது அவை என்ன என்ன என்று பார்ப்போம்

குருபகவான்

இவருக்கு கோவில் கும்பகோணத்தில் இருந்து  17 கிமீ தூரத்தில் ஆலங்குடி என்னும் கிராமத்தில்
அமைந்துள்ளது.இங்குள்ள சிவன்கோவிலில் தனிசன்னதி உள்ளது.குருபெயர்ச்சியன்று இக்கோவிலில் கூட்டம் அலைமோதும் குருபகவானை வியாழக்கிழமையன்று இங்கு வழிபட்டால் மிகுந்த நலம் பயக்கும் கும்பகோணம் நகரத்திற்க்கு வந்து அங்கிருந்து செல்வது
சிறந்தது

சனீஸ்வரர்

சனீஸ்வரருக்கு சன்னதி காரைக்கால் அருகே திருநள்ளாறுவில் அமைந்துள்ளது நளமகராஜாவுக்கு சனிதோஷம் நீங்கிய இடமிது.பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து
அருகில் உள்ளது.கும்பகோணம் அல்லது நாகப்பட்டினத்தில் இருந்து செல்வது சிறந்தது

ராகு


ராகு தோஷம் மிககொடிய தோஷம் சிலருக்கு சீக்கிரம் திருமணமாகாது திருமணமானாலும்
குழந்தை உண்டாவதில் சிக்கல்.மேலும் கால சர்ப்பதோஷம் எனசொல்லக்கூடிய தோஷமானது ஒருவரை ஆயுள் வரை நிம்மதி இழக்கவைத்து விடும் இப்படிப்பட்ட துன்பங்கள்
உடையோர் ராகு கேது தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் ஒவ்வொரு ராகு காலத்திலும் குறிப்பாக வெள்ளி ஞாயிறு அன்று ராகு காலத்தில் நடக்கும் சிறப்புபூஜையில் கலந்து கொண்டால் ராகுதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.ராகுவுக்கு கும்பகோணத்தில் இருந்து ஆறு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் சிறப்பான தலமாகும்.



கேது

கேதுவுக்கு உரிய பரிகாரம் மேற்கொள்வோர் நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழ்பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள கேது ஸ்தலத்தில் வழிபாடு செய்வது கேதுவினால்
ஏற்படும் கடும் துன்பங்களை குறைக்கும்

புதன்

பூம்புகார் அருகிலேயே திருவெண்காடு அமைந்துள்ளது இங்குதான் புதன் ஸ்தலம் உள்ளது
குழந்தையில்லாதவர்கள்.சரியாக படிக்காத குழந்தைகள் இங்கு வேண்டிக்கொள்வது சிறப்பு

சூரியன்

சூரியனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டிய‌
சூழ்நிலை வரும் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் மிக வீக்காக இருந்தால் இங்கு சென்று வ்ழிபடலாம்.கும்பகோணம் அருகே ஆடுதுறை என்ற இடத்தில் சூரியனார் கோவில் உள்ளது

சுக்கிரன்

ஒருவர் ஜாதகத்தில் வறுமை நிலை தாண்டவமாடுபவர்கள் செல்வசெழிப்பை பெறுவதற்காக‌
சுக்கிரவ்ழிபாடு செய்யப்படுகிறது சூரியனார் கோவிலில் இருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது


செவ்வாய்

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வீக்காக இருந்தால் இரண்டு மனைவிகள் அமைவதற்க்கு கூட‌
வாய்ப்புண்டு அப்படிப்பட்டவர்கள் கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில்
உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய்க்கு உள்ள தனி சன்னதியில் வழிபாடு செய்யவேண்டும்


குறிப்பு:அனைவரும் கும்பகோணம் சென்று அங்கிருந்து இந்த கோவில்களுக்கு செல்வதே
சிறந்தது.குருபகவானுக்கு இங்குள்ள சுவாமிமலையிலும் ராகு பகவானுக்கு இங்குள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் வழிபட்டாலும் இவர்களை வணங்கிய பலன் கிடைக்கும் கும்பகோணத்திற்க்கு மிக அருகில் உள்ளதால் இங்கும் சென்று வரலாம்.

1 comment:

  1. நல்ல பதிவு. விளக்கங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. நன்றி.

    ReplyDelete

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...