Showing posts with label rameshwaram temple. Show all posts
Showing posts with label rameshwaram temple. Show all posts

Thursday, February 28, 2013

கிருஷ்ணர் துவாரகையில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்




5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!

ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.


துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.


நன்றி மாதவன் அவர்கள் என்றென்றும் சித்தர்கள் வழியில் முக நூல் நண்பர் 


Tuesday, April 17, 2012

கோவிலுக்கு வருபவர்களுக்கு மயில்தோகை மூலம் சாமரம் வீசும் முதியவர்

படத்தில் இருப்பவர் பெயர் நடராஜன் என்பதாகும்.வயது 82இவர் கோவில்களில் மயிலிறகை வைத்து வந்துள்ள பக்தர்களுக்கு சாமரம் வீசுகிறார்.இவரிடம் பிள்ளையார்பட்டி கோவிலில் முதல் முதல் சாமரக்காத்து வாங்கினேன் பக்தர்களாக பார்த்து பிரியப்பட்டு கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்கிறார்.இவர் 12 வயதில் இருந்து இப்படி சாமரம் வீசி வருகிறார்.ஒரு முறை கோவிலில் விசிறி வைத்து வீசும் ஒரு முதியவர் வராததால் தான் இப்படி ஒரு மயில்தோகை விசிறி தயார்செய்து வீசி வருவதாக கூறுகிறார்.அம்பானி முதல் அத்வானி வரை பல பிரபலங்களுக்கு சாமரம் வீசி அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்காந்தி,நேரு,போன்றவர்களுக்கும் வீசியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவரை அடிக்கடி இவரை பார்க்கலாம்.10 வருடங்கள் மீனாட்சி கோவிலிலேயே வீசியவர்.திங்கள் செவ்வாய்களில் திருப்பரங்குன்றத்திலும், புதன்கிழமை பழனி,
வியாழன் திருச்செந்தூர்,வெள்ளி மற்றும் ஞாயிறு மீனாட்சி அம்மன் கோவில் சனிக்கிழமை திருச்செந்தூர்,அமாவாசையன்று ராமேஸ்வரத்திலும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையிலும் இவர் மயில் சாமரம் வீச வந்து விடுகிறார் என் உயிர் இருக்கும்வரை இந்த வேலையை செய்வேன் கடவுள் கிருபையால் நன்றாக இருக்கிறேன் என்கிறார்.இவரின் தெய்வசேவை போற்றுதலுக்குரியது.இவர் 5 ராமேஸ்வரம் கோவில் கும்பாபிசேகத்தையும்
5 மீனாட்சி கோவில் கும்பாபிசேகத்தையும் பார்த்தாக சொல்கிறார்.இவர் போல மனிதர்களால்தான் கொஞ்சமாவது நல்ல மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.

Tuesday, February 14, 2012

சிவராத்திரிஅன்னதானம் சிறப்புக்கட்டுரை

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர் சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானின் அக்னித்தலமான நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். மற்ற ஊர்களில் இல்லாத அளவிற்க்கு திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வர் அதற்க்கு ஒரு சிறப்புக்காரணம் இருக்கிறது

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் என்பவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தோன்றியவர்.அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்றவர் ஸ்தம்பனம்,மோகனம்,வசியம்,உச்சாடனம்,மாரகம்,உத்வேஷணம்,கல்பம்,மகா உத்தி போன்ற எட்டுவித உத்திகளின்படி பல அரியமருந்துகளை தயாரித்து மக்களின் தீராத நோய்களை போக்கியவர்.அந்த வகையில் இவர் கிரிவலம் வரும்போது தூல,சூக்கும,பாவன்,அரூப வடிவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வருகிறார் கிரிவலத்தின்போது பக்தர்கள் காலில் விழுந்து நசுங்கிய எறும்புகளுக்கும் சிகிச்சை செய்தவர் இவர்.ஒருமுறை சிவபெருமான் கிரிவலத்தின்போது மானிடவடிவில் வந்து தனக்கு அடங்கா கோரபசி ஏற்படுவதாகவும் இந்த வியாதியை தாங்கள் போக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.சித்தர் மானிட வடிவில் வந்திருக்கும்
சிவனின் கைநாடியை பிடித்து பார்த்தார் கோடியில் ஒருவருக்கே வரும் வாள[நாடி]துடிப்பு அது.இந்த வாளத்துடிப்பால் அடங்காத பசி ஏற்படும். இதை தீர்க்கவேண்டுமென்றால் அண்ணாமலையில் பல கோடி பேர்களுக்கு அன்னதானம் பண்ணியவரின் கரங்களால் உணவு சமைத்து எடுத்து வந்தால் அதில் நான் தரும் பெருவாளபஸ்பத்தினை கலந்து மருந்தாக சாப்பிட்டல் இந்த நோய் தீரும் என்கிறார்.உடனே சிவபெருமான் கோடிபேருக்கு அன்னதானம் இட்டவர் பற்றிய விவரம்பைரவரிடம் கேட்கவே அக்னி பகவான் ஒருவரே மனிதவடிவில் கிரிவலம் வந்து
பல கோடிபேர்களுக்கு அன்னம் இட்டவர் என்று அவரை அங்கு அழைத்து வந்து விட்டார்.


சிவனுக்கு ஆகுதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் வேள்விக்கு ஆதாரமாய் நின்று பங்கு கொண்டமையால் தன்னுடைய அக்னிப்பிரகாசம் குறைந்ததால் அதற்க்கு பரிகாரம் தேடி கிரிவலம் செய்து கோடிக்கணக்காணவர்களுக்கு அன்னதானம் செய்துவருவதாக அக்னிபகவான்
கூற பைரவரும் மானிடராக வந்த சிவ்னை யாரென சொல்லாமல் அவருக்கு உணவாக்கிதரும்படி சொல்ல அக்னி பகவானும் ஒப்புக்கொண்டார்.அன்னபூரணி அரிசி வார்க்க‌





சாகம்பா தேவி பொருட்களை அரிந்து தர பிரம்மா வேதாக்னி தந்திட உணவு தயாராயிற்று
தயாராக இருந்த பஸ்பத்தை உணவில் சிவப்பெருவாளர் கலந்து சிவனின் பசி என்னும் கொடியநோயை தீர்த்துவைத்தார். அப்போது அருணாசலப்பெருமான் அசரீரியாய் சித்தரை நோக்கி எமை ஜோதியாய் அடைவீர் அருளி அவரை ஆட்கொண்டார். மிக அபூர்வமான கிடைத்தற்கரிய சிவனின் திருவடியில் மாதா அன்னபூரணியே சிவப்பெருவாளரை ஆசிர்வதித்த கிரிவலப்பாதையில் மஹா சிவராத்திரி அன்று அன்னதானம் செய்தால் கல்வி
வேலை,பதவி,ஆரோக்கியம்,குடும்ப நன்மை,வழக்கு,திருமணம் இவற்றில் இருந்த பிரச்சினை
நீங்கி சுபம் உண்டாகும்.மேலும் ஊழ்வினைப்பயனால் சாப்பிடமுடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் நோய் உள்ளோர் ஹோட்டல்,காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு
மிகச்சிறப்பாக இருக்கும் நாமும் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை செல்ல முடியாவிட்டாலும் உள்ளூரில் இருக்கும் சிவன்கோவிலிலாவது அன்னதானம் செய்து அந்த சிவனருள் பெறுவோம். நாளை சிவராத்திரியின் சிறப்புக்களை பார்ப்போம்

Wednesday, December 28, 2011

அருள்மிகு ரத்தினகிரி முருகப்பெருமான்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 1960களில் இப்பகுதிக்கு வந்த ஒரு மின்வாரிய ஊழியர் ஒருவர் இங்கிருந்த சிறு முருகன் சிலையை வணங்கி
விட்டு தீபாராதனை காண்பிக்க சொன்னார்.அர்ச்சகர் சொன்னார் இந்த கோவில் சிறு கோவிலாக‌
இருப்பதால் யாரும் சூடம்,பத்தி போன்றவைகளை வாங்கி வருவதில்லை எனச்சொன்னார் முருகா உனக்கே இந்த நிலைமையா என யோசித்தவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார் விழுந்தவர் முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான் என இங்கேயே உட்கார்ந்து விட்டார்
கோவில் திருப்பணிகள் செய்து பெரியகோவிலாக மாற்றிவிட்டார்.அவர் தற்போது பாலமுருகனடிமை என அழைக்கப்படுகிறார்.அவராக விரும்பும் பக்தர்களை அழைத்து அவரின்

பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிக்காட்டி முருகனின் அருளால் தீர்த்து வைக்கிறார் முருகன் ஆட்கொண்டதில் இருந்து மெளனச்சாமியாராக வலம் வருகிறார்.இந்த கோவிலில் முன்னாள் பிரதமர் வி.வி கிரி உட்பட பலர் வந்துள்ளனர்.நீங்களும் ஒருமுறை சென்று ரத்தினகிரி
முருகனின் அருள்பெற்று வாருங்கள்

Saturday, December 17, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள்

இந்த பாரதநாடு பல ஆன்மிகவாதிகளையும் ரமணமஹரிஷி,யோகிராம்சுரத்குமார்,காஞ்சிப்பெரியவர்,கிருபானாந்தவாரியார்,போன்ற மகான்களை கொடுத்தது.தற்காலத்திலும்
 போலி ஆன்மிகவாதிகள் மத்தியில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் போன்ற நல்ல ஆன்மிகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.கடந்து போன 20ம்நூற்றாண்டில் மதுரை அருகே வாழ்ந்த ஒரு உயர்ந்த மகானை பற்றிப்பார்க்கவே இந்த பதிவு


மதுரை ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் உள்ள திருப்பாச்சேத்தி அருகே உள்ள கட்டிக்குளம்
என்ற ஊரில் ஒரு மண்பாண்டம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள்
பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.இவரிடம் சூடான கம்பி ஒன்று
இருக்கும் இதை சூட்டுக்கோல் எனக்கூறுவர்.தம்மிடம் குறைகளை கூறவருபவரிடம் கைகளை
நீட்டச்சொல்லி தொடச்சொல்வார்.நியாயம் அவர் பக்கத்தில் இருந்தால் அந்தக்கம்பி சுடாது
அவர் அநியாயம் செய்பவராக இருந்தால் கம்பி சுடும்.சூடு தாங்க முடியாமல் அலறும் பக்தர்களை
பார்த்து என்ன அப்பு உண்மை சுடுதா என சிலேடையாக இவர் கேட்பதுண்டு.பின்பு அவரை மன்னித்து அவரின் குறைகளை விளக்கி அவரின் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார்.மதுரையில் இவரை வழிபடும் பக்தர்கள் அதிகம் இவருக்கு ஒரு வழிபாட்டு மன்றம்
வைத்து வணங்கி வருகின்றனர்

இவரின் அற்புதங்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காதகுறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை.ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை.என்ன செய்வதென்று தெரியாமல்.இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் தான் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.இதேபோல் காரைக்குடி அருகே குன்றக்குடி முருகன் கோவிலில் தேர்த்திருவிழாவில் இவர் இருக்க இவர் யாரென்று தெரியாமல் இவரை சிலர் தேரில் இருந்து
இறக்கிவிட்டு இருக்கின்றனர்.இவரை இறக்கியவுடன் தேர் அசையவில்லைதன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன்தேர் சென்றுள்ளது இப்படி பல சித்து
விளையாட்டுக்களை புரிந்தவர் இவர்


திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து  கொண்டவர், கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தாராம். கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம். அது போல வெகு காலம் ஆண் குழைந்தையே இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினருக்கு அவர்களுக்குப் பிறக்க உள்ள பத்தாவது குழைந்தையே ஆண் குழந்தையாக இருக்கும் எனக் கூற அப்படியே அது நடந்ததாம்.
அதன்பின் ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பியவண்ணம் பக்தர்களுக்கு அருளாசி தந்து அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை தமது சக்தியினால் தீர்த்து வைத்தார் . பல இடங்களில் வழிபாட்டு மன்றங்களை நிறுவினார்..
 மாயாண்டி  ஸ்வாமிகள் சன்னதி
இப்படியாகப் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது.

இவரது ஜீவசமாதி திருக்கூடல்மலை என்ற காகபுஜண்டர் மலையில் உள்ளது இது திருப்பரங்குன்றத்தில் உள்ளது. சமாதிக்கு செல்ல விரும்புவோர் இங்குள்ள தியாகராஜா கல்லூரியில் இருந்து எட்டும் தூரத்தில் இந்தமலை உள்ளது நடந்தே சென்றுவிடலாம்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...