தினமும் கோவில்களில் ஆடு வெட்டுதல்.கோழி வெட்டுதல் என்று தற்போதைய காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது.தனக்கு ஒரு பிரச்சினை என்றால் கருப்பசாமிக்கோ ,மாடசாமிக்கோ
கிடா வெட்டுகிறேன் என்று வேண்டிகொள்கின்றனர்.உண்மையில் எந்தச்சாமியும் எனக்கு ஆடு வெட்டு என்றும் கோழிவெட்டு என்றோ யாரையும் கேட்பதில்லை.இவர்களாக வலிய சென்று இது போலசெயல்களில் ஈடுபட்டு மேலும் மேலும் பாவத்தை தேடி பிரச்சினையை பெரிதாக்கி கொள்கின்றனர்,மகாத்மா காந்தி,வள்ளலார்,அன்னை தெரசா போன்ற அஹிம்சாவாதிகள் வாழ்ந்த நாடு ஒரு ஜீவனை வதைத்தால் அடுத்த பிறவியில் மிக மோசமான தெருநாயாகவோ பன்றியாகவோ பிறந்து குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்படுவோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை மனித உயிர்போல அனைத்து உயிர்களும் உயிர்களே உயிரினங்களை வதைத்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம் என கருடபுராணம் எச்சரிக்கிறது.இந்துக்களின்
புனிதமான மஹாலட்சுமியின் அம்சமான பசுமாட்டை சிலர் கொல்கின்றனர். அழகிய பொன்னாக்குடி என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பிரதோஷ நேரத்தில் அம்மா என்றழைத்த நந்தி என்ற தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளேன் முடிந்தால் அனைவரும் பாருங்கள்.இனி விஷயத்திற்க்கு வருகிறேன்
சாண்டோ சின்னப்பா தேவர் மிகச்சிறந்த சினிமா தயாரிப்பாளர் யானை குதிரை பாம்பு என விலங்குகளை வைத்து தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் படமெடுத்த சிறந்த படைப்பாளி.எல்லாவற்றுக்கும் மேல் இவர் நல்ல மனிதர் முருகபக்தர். மருதமலை முருகன் மீது அளவு கடந்த பிரியமுள்ளவர்.புலால் உண்பதை வெறுத்தவர்.இவரின் தெய்வம்,திருவருள்,வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்கள் முருகனின் சிறப்புக்களையும்
இறை நம்பிக்கையை வளர்ப்பதாகவும் வந்தன.இவர் மறைந்த பிறகு ஆவிகள் உலக பயிற்சி பெற்ற மீடியங்கள் இவர் ஆன்மாவை அழைத்து பேசுவர்.ஒருமுறை தனது சகோதரிக்கு திருமணம் நடப்பது விசயமாக ஆவிகள் பயிற்சி பெற்றவரிடம் வந்திருந்தார் ஒரு அன்பர். சின்னப்பாதேவரின் ஆன்மாவை கூப்பிட அவரும் வந்தார் தங்கை திருமணம் தடைபடுவதற்க்கு உரிய சில காரணங்களை சொல்லி சில கோவில்களின் பெயரையும் அங்கு சென்று வரசொன்னார்
அதோடு நீ இறைச்சிசாப்பிடுபவன். என்று புலால் உண்பதை நிறுத்துகிறாயோ அன்றே உனக்கு உன் பிரச்னைகள் தீரும்.அது வரை உன் பிரச்னைகள் உன்னை வாட்டிகொண்டே இருக்கும் என்றார்.அன்றே அந்த நண்பர் புலால் உண்பதை நிறுத்திவிட்டார்.ஒரு காலத்தில் இறைநம்பிக்கையே இல்லாத மனிதர் அவர். சாண்டோ சின்னப்பா தேவரின் சொல் கேட்டு
இன்றுவரை இறைச்சியை கையால் தொடுவதில்லை.தேவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நடந்தே மருதமலை முருகன் கோவிலுக்கும் செல்கிறார்.அவரின் சகோதரியும் இப்போது
கல்யாணமாகி நல்ல நிலையில் உள்ளார்.இது போல இன்றும் தன்னை அழைத்து மீடியத்திடம்
தன் பிரச்னைகளுக்கு விபரம் கேட்பவர்களை புலால் உண்ணாமையின் மகத்துவம் குறித்து
எடுத்துசொல்லி வருகிறார் சின்னப்பா தேவர் அவர்கள். வாழும்போது மட்டும் அல்லாமல் வாழ்ந்து முடிந்த பின்னரும் நற்சேவை செய்யும் சின்னப்பா தேவர் போற்றுதலுக்குரியவர்.
No comments:
Post a Comment