இவர் வள்ளலார் வழிவந்தவர் தனது வாழ்நாளில் எண்ணற்ற முறை சதுரகிரி வந்து சென்றிருக்கிறார் என்கின்றனர் இவரது பக்தர்கள்.சதுரகிரியில் சிதம்பர சுவாமிகள் பார்க்காத மரமே இல்லை.அவர் கால் படாத பகுதி இல்லை அங்கு வசிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது அலாதிப்பிரியம் உண்டு இவருக்கு.இவர் சமாதியாகி 27வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.இவரது சமாதி திருநெல்வேலி தூத்துக்குடி வழித்தடத்தில் வல்லநாட்டில் உள்ளது.வருடந்தோறும் வைகாசிமாதம் இவருக்கு குருபூஜை நடக்கும் இதில் லட்சக்கணக்கானோர் கலந்ந்துகொள்கின்றனர் கணத்த சரீரம் தீட்சண்யமான கண்களுடன் வேட்டியை துண்டுபோல இடுப்புக்கு மேலே கட்டியிருப்பார்.ஒரு மனிதரை பார்த்தவுடன் அவருக்கு என்ன சிக்கல் என அந்த வினாடியே உணர்ந்து சொல்வார் அதற்கான தீர்வையும் சொல்வார் .இவர் எப்போது மலைக்கு வந்தாலும் மலைவாழ் மக்களுக்கும் சேர்த்தே உணவுப்பொருட்கள் முதலியவற்றை எடுத்துவருவார் இவருடன் இவரது சீடர்களும் வருவர்
இவர் இந்த மலைக்கு வந்தால் ஒரு மண்டலம் இரண்டு மண்டலம் என நீண்டநாட்கள் தங்கித்தான் செல்வார்.சதுரகிரி மலையில் அன்னதானத்தை தொடங்கிவைத்த பெருமையும் முதலில் இவரையே சேரும்.இவர் வள்ளலார் வழிவந்தவர் ஆதலால் ஜோதிதரிசனத்தை பெரிதும் விரும்புவார்.வித்தியாசமாக நவக்கிரக பூஜை செய்வார்.அனைவரையும் சாமி சாமி என்று மரியாதையாக அழைப்பார் மரியாதைக்குறைவாக யாரையும் அழைக்கமாட்டார்.
விலங்குகளிடத்தில் மிகுந்த அன்புகொண்டவர்.இவர் இங்கு இருந்த காலத்தில் இங்கு ஒரு ஒற்றைக்கொம்புடன் கூடிய யானை ஒன்று இருந்தது சிதம்பரசுவாமியும் யானையும் சந்தித்துக்கொள்ளும் காட்சி அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்.விநாயகரின் அம்சமாக இந்த யானையை சுவாமி கருதினார் சுவாமி சொல்லும் செயலை அப்படியே அந்த யானை செய்யும் நடனம் கூட ஆடும்.சில காட்டுவிலங்குகளை வேட்டையாடும் சில கயவர்களுக்கு இந்த விசயங்கள் பிடிக்கவில்லை.அதற்க்கு காரணம் சில சாதுவான மிருகங்களை வேட்டையாடுவது சாமியை போலவே யானைக்கும் பிடிக்காது வேட்டையாடும் சிலரை யானை குறிவைத்து துரத்துமாம் .இதனால் இந்த யானையை கொன்று தந்தத்தை எடுத்து
விட வேண்டும் என்று உறுதியாய் இருந்தனர் அவர்கள் ஒர் நாள் சுவாமிகளின் பிரியமான ஒற்றைக்கொம்பனை குறிவைத்து கொன்றுவிட்டனர்.சுவாமி அவர்கள் வேதனையில் மனம் வாடினார்.மூன்று நாட்கள் உணவின்றி மிகவும் வருந்தினார்.யானையை கொன்ற கயவர்கள்
சுவாமிகள் தான் தந்தத்திற்க்கு ஆசைப்பட்டு கொன்றார் எனப்பழிபோட்டனர்.சுந்தரமகாலிங்கத்தின் அருளால் காவல்துறை விசாரணையில் உண்மையான குற்றவாளிகளை பிடித்தனர்.சுவாமிகளின் முயற்சியினால் அந்த ஒற்றை கொம்பு தந்தம் அங்கேயே 1971ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுஇன்றளவும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.