Thursday, December 29, 2011

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்

ராமாயணத்தின் பெரும்பகுதி நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் ஏற்படுத்திய நவக்கிரஹம் நவபாஷாணம் என அழைக்கப்பட்டு
தேவிபட்டினத்தில் உள்ளது.கடலின் நடுவில் உள்ள நவபாஷாணத்தில் வழிபட்டால் நவக்கிரகதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ராமர் இலங்கைக்கு செல்லும்போது திருப்புல்லணை என்ற இடத்தில் தங்கி சென்றார் அதாவது இவர் தங்கியபோது தர்ப்பைபுல்லில்
படுத்துறங்கினார் அதனால் திருப்புல்லணை எனப்பெயர் ஏற்ப்பட்டு காலப்போக்கில் திருப்புல்லாணி எனப்பெயர் மாறியது.இந்தக்கோவில் ராமவதாரத்துக்கு முந்தைய கோவில்
தசரதசக்கரவர்த்தி இங்குள்ள ஆதிஜெகநாதரை வணங்கிய பாயாச நைவேத்யம் செய்தார் அதற்கு
பிறகே ராமர் பிறந்தார்.அதனால் பிள்ளையில்லாதவர்கள் இங்கு உள்ள பத்மாசனித்தாயாரையும்
ஜெகநாதபெருமாளையும் வணங்கினால் குழந்தைபிறக்கும் என்பது ஐதீகம்.சேதுக்கரையில் இருந்து ராமர் இலங்கைக்கு சென்றார் இங்கிருந்து செல்வதற்க்கு ஆஞ்சநேயர் பாலம் அமைக்க‌
உதவினார்.அதனால் சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது.இந்த சேதுக்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது.மேலும் இலங்கை சென்று விட்டு சீதாப்பிராட்டியை மீட்டபிறகு ராமேஸ்வரம் வந்த ராமர் சிவலிங்கத்தை பூஜித்து வணங்கினார்
அதுவே ராமேஸ்வரம் என இந்துக்களின் புனிதத்தலமாக போற்றப்படுகிறது.எந்த ஒரு செயலுக்கும் விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே கோவில்களில் இருக்கும் அனைத்து கடவுளையும் வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போட்டே அனைத்து வேலைகளையும் தொடங்குகிறோம்.அப்படி ராமபிரான் இலங்கைக்கு
செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் இங்கு சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும்
ஒரு முக்கிய காரணம் விழாக்காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு.இதுகோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரைஇல்லாமல்
வெயில்படும்படி அமைத்திருப்பது சிறப்பு.கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.எந்த ஒரு பெரியகாரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம்தான் ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.கேதுவால் அவஸ்தைக்குள்ளாவோர் இவரை வணங்கினால் விநாயகர் கேது தோஷத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்.
கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.

செல்லும் விபரம்:ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி,பட்டுக்கோட்டை,நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் சென்று தேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில் இறங்கவேண்டும்
அங்குதான் இந்த விநாயகர் கோவில் உள்ளது.

Wednesday, December 28, 2011

அருள்மிகு ரத்தினகிரி முருகப்பெருமான்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 1960களில் இப்பகுதிக்கு வந்த ஒரு மின்வாரிய ஊழியர் ஒருவர் இங்கிருந்த சிறு முருகன் சிலையை வணங்கி
விட்டு தீபாராதனை காண்பிக்க சொன்னார்.அர்ச்சகர் சொன்னார் இந்த கோவில் சிறு கோவிலாக‌
இருப்பதால் யாரும் சூடம்,பத்தி போன்றவைகளை வாங்கி வருவதில்லை எனச்சொன்னார் முருகா உனக்கே இந்த நிலைமையா என யோசித்தவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார் விழுந்தவர் முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான் என இங்கேயே உட்கார்ந்து விட்டார்
கோவில் திருப்பணிகள் செய்து பெரியகோவிலாக மாற்றிவிட்டார்.அவர் தற்போது பாலமுருகனடிமை என அழைக்கப்படுகிறார்.அவராக விரும்பும் பக்தர்களை அழைத்து அவரின்

பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிக்காட்டி முருகனின் அருளால் தீர்த்து வைக்கிறார் முருகன் ஆட்கொண்டதில் இருந்து மெளனச்சாமியாராக வலம் வருகிறார்.இந்த கோவிலில் முன்னாள் பிரதமர் வி.வி கிரி உட்பட பலர் வந்துள்ளனர்.நீங்களும் ஒருமுறை சென்று ரத்தினகிரி
முருகனின் அருள்பெற்று வாருங்கள்

Saturday, December 17, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள்

இந்த பாரதநாடு பல ஆன்மிகவாதிகளையும் ரமணமஹரிஷி,யோகிராம்சுரத்குமார்,காஞ்சிப்பெரியவர்,கிருபானாந்தவாரியார்,போன்ற மகான்களை கொடுத்தது.தற்காலத்திலும்
 போலி ஆன்மிகவாதிகள் மத்தியில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் போன்ற நல்ல ஆன்மிகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.கடந்து போன 20ம்நூற்றாண்டில் மதுரை அருகே வாழ்ந்த ஒரு உயர்ந்த மகானை பற்றிப்பார்க்கவே இந்த பதிவு


மதுரை ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் உள்ள திருப்பாச்சேத்தி அருகே உள்ள கட்டிக்குளம்
என்ற ஊரில் ஒரு மண்பாண்டம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள்
பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.இவரிடம் சூடான கம்பி ஒன்று
இருக்கும் இதை சூட்டுக்கோல் எனக்கூறுவர்.தம்மிடம் குறைகளை கூறவருபவரிடம் கைகளை
நீட்டச்சொல்லி தொடச்சொல்வார்.நியாயம் அவர் பக்கத்தில் இருந்தால் அந்தக்கம்பி சுடாது
அவர் அநியாயம் செய்பவராக இருந்தால் கம்பி சுடும்.சூடு தாங்க முடியாமல் அலறும் பக்தர்களை
பார்த்து என்ன அப்பு உண்மை சுடுதா என சிலேடையாக இவர் கேட்பதுண்டு.பின்பு அவரை மன்னித்து அவரின் குறைகளை விளக்கி அவரின் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார்.மதுரையில் இவரை வழிபடும் பக்தர்கள் அதிகம் இவருக்கு ஒரு வழிபாட்டு மன்றம்
வைத்து வணங்கி வருகின்றனர்

இவரின் அற்புதங்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காதகுறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை.ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை.என்ன செய்வதென்று தெரியாமல்.இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் தான் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.இதேபோல் காரைக்குடி அருகே குன்றக்குடி முருகன் கோவிலில் தேர்த்திருவிழாவில் இவர் இருக்க இவர் யாரென்று தெரியாமல் இவரை சிலர் தேரில் இருந்து
இறக்கிவிட்டு இருக்கின்றனர்.இவரை இறக்கியவுடன் தேர் அசையவில்லைதன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன்தேர் சென்றுள்ளது இப்படி பல சித்து
விளையாட்டுக்களை புரிந்தவர் இவர்


திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து  கொண்டவர், கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தாராம். கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம். அது போல வெகு காலம் ஆண் குழைந்தையே இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினருக்கு அவர்களுக்குப் பிறக்க உள்ள பத்தாவது குழைந்தையே ஆண் குழந்தையாக இருக்கும் எனக் கூற அப்படியே அது நடந்ததாம்.
அதன்பின் ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பியவண்ணம் பக்தர்களுக்கு அருளாசி தந்து அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை தமது சக்தியினால் தீர்த்து வைத்தார் . பல இடங்களில் வழிபாட்டு மன்றங்களை நிறுவினார்..
 மாயாண்டி  ஸ்வாமிகள் சன்னதி
இப்படியாகப் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது.

இவரது ஜீவசமாதி திருக்கூடல்மலை என்ற காகபுஜண்டர் மலையில் உள்ளது இது திருப்பரங்குன்றத்தில் உள்ளது. சமாதிக்கு செல்ல விரும்புவோர் இங்குள்ள தியாகராஜா கல்லூரியில் இருந்து எட்டும் தூரத்தில் இந்தமலை உள்ளது நடந்தே சென்றுவிடலாம்

Saturday, December 10, 2011

சனி தோஷம் சங்கடம் தீர்க்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்



எங்கள் ஊரான ராமநாதபுரம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தக்கோவில் மிக அருகில் உள்ளது சனிதோஷம் சனியால் அவதிக்குள்ளாவோர் இக்கோவிலின் ஸ்தலவிருட்சமாக உள்ள இந்தசாயா மரம் வேறு எங்கும் கிடையாது.இந்த மரம் சனீஸ்வரபகவானின் தாய் சாயாதேவி என்பவளாவாள். சனீஸ்வரனின் தாய் சாயாதேவியே இந்தமரமாக சொல்லப்படுகிறது

பொதுவாக கருணைவடிவானவர்களாக பெண்களை சொல்வதுண்டு .சாயாதேவியிடம் தன் கஷ்டங்களை சொல்லிவேண்டும்போது அவள் இரக்கப்பட்டு தன் மகனான சனீஸ்வரனிடம் சொல்வதுண்டு.சனீஸ்வரனும் தாய்மீது உள்ள மரியாதையால் பக்தர்கள் கிரக பலன்களை
குறைப்பார் என்றும் நம்பப்படுகிறது

எந்த கோவிலிலும் காணாத வகையில் விநாயகரும் முருகனும் சேர்ந்தே இந்தக்கோவிலில் இருப்பது சிறப்பு .முன்பு இந்த இடத்தில் சாயாமரத்தடியில் சிறியகோயிலாக முருகனும் விநாயகரும் இருந்து அருள்புரிந்தார்கள் இந்த இடத்திற்கருகே நீதிமன்றம் அமைந்திருந்தது
கோர்ட்டிற்க்கு செல்பவர்கள் இங்குள்ள முருகனை வழிபட்டு செல்வார்கள் கோர்ட்டில்  அவர்
பக்கம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.அதனால் மகிழ்ந்த ஒருவர் சிறியகோவிலாக எழுப்பினார்
பலரது முயற்சியால் இன்று பெரியகோவிலாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள முருகனை வழிபடுவர்களுக்கு துணையாக நல்ல காரியங்களுக்கு வழிஅமைத்து கொடுப்பதால்
வழிவிடும் முருகன் கோவில் எனப்பெயர் வந்தது.

Wednesday, December 7, 2011

மேலுலகத்தில் சரஸ்வதிபூஜை கொண்டாடப்படும் விந்தை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவே இந்த தளம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கடவுள் நம்பிக்கை அரைகுறையாக உள்ளவர்கள் முருகன்,விநாயகர்
அம்மன் போன்றோர் உள்ளனரா என நினைப்போரும் ஆவியுலகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை
படிப்பதால் ஓரளவிற்க்கு கடவுள் பற்றிய தெளிவு பெறலாம்.சிஎம் .ரத்தினசாமி அவர்கள் எழுதிய‌
ஆவிகளுடன் நாங்கள்,நர்மதா பதிப்பகம் வெளியிட்டு ஆவியுலகத்தொடர்பும் ஆறுமுகக்கடவுளும்,முருகபெருமான் உரைக்கும் பூர்வஜென்மங்கள் இந்த புத்தகமெல்லாம்
வக்கீல் ஞானவேல் என்பவர் முருகக்கடவுளிடம் ஆட்டோ ரைட்டிங் முறையில் பேசி முருககடவுளுடனான அனுபவங்களை புத்தகமாகவெளியிட்டார் படித்தால் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிடுவீர்கள்.இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் ஒரு புத்தகம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது இந்த புத்தகத்தை சிறுவயதில் நான் எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன் அப்போது இதைபற்றி எதுவும் தெரியாமல் விட்டுவிட்டேன்.சமீபத்தில்
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் பேட்டியை படிக்க நேர்ந்தது அதில்
அவருக்கு இந்ததுறையில் இன்ஸ்பிரேசனாக அமைந்த சில விஷயங்களை சொல்லியபோது
மதுரை முன்னாள் ஆதினம் 291வது குருமகா சன்னிதானம் ஞானசம்பந்த தேசிகபரமாச்சர்யார்
அவர்கள் எழுதிய இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற புத்தகத்தை பற்றி
சொன்னார்அவர் சொன்னவுடன் அந்தபுத்தகத்தை நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் இருந்த ஞாபகம் வந்தது
ஆவியுலகம் சம்பந்தமாக தமிழில் வந்த முதல் புத்தகமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்
அந்தபுத்தகத்தை மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தபுத்தகம் எனக்கு கிடைத்தது எங்கும் கிடைக்காத புத்தகம் அது.1976ல் ஆறாவதுபதிப்பாக அந்த புத்தகம் வெளிவந்துள்ளது அந்த புத்தகத்தில் உள்ள விஷயங்கள் என்னை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டுசென்றன‌
அதில் மேலுலகத்தில் இறந்தவர்கள் சிவபூஜை செய்வதும் முதலில் ஆவிலோகமும் அதன்பிறகு
பிரம்மலோகமும்,அதன்பிறகு விஷ்ணுலோகமும்.அதன்பின்பு சிவலோகமும் உள்ள விஷயத்தை ஒரு சிறுமியின் ஆன்மா கூறும் விஷயத்தை கேட்டு ஆச்சரியமடைந்தேன் மேலும்
மேலோகத்தில் ஆயுதபூஜை கொண்டாடும் முறைபற்றியும் கூறியுள்ளார் உங்களுக்காக அந்த பகுதியை மட்டும் தருகிறேன்.பிக்சராகdouble click seydhu சேவ் செய்து ஜூம் செய்து படியுங்கள்

Monday, December 5, 2011

தமிழக கோவில்களும் அவற்றை சிறப்பாக பராமரிப்பவர்களும்



கோவில்கள்தான் ஒவ்வொருமனிதனின் மனநிம்மதிக்கு மருந்தாக உள்ளது கோவில்களில் போய் சாமிகும்பிடுவதோடு மட்டுமல்லாமல் கோவில்களை சிறப்பாக பராமரித்தால்தான்
கோவில்களில் தெய்வ வழிபாடு சிறப்பாக இருக்கும் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களுக்கு நான் சென்றபொழுது கோவில் கோவில் திருப்பணி கல்வெட்டை பார்ப்பேன்
நான் பார்த்த பெரும்பாலான கோவில்களில் திருப்பணி கல்வெட்டில் முதலமைச்சராக எம்.ஜி.ஆரும்.அறநிலையத்துறை அமைச்சராக  ஆர்.எம் வீரப்பன் அவர்களும் அறநிலையத்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக திரு.ஆளுடையபிள்ளை அவர்கள் இவர்கள் மூவரின்
பெயர்தான் ஒவ்வொரு கோவில் கல்வெட்டிலும் பளிச்சிடுகிறது. இவர்கள் காலத்திற்க்கு பிறகு
நிறையக்கோவில்கள் திருப்பணிகள் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது.இது வருத்ததிற்குரிய விஷயமாகும்.தமிழக அரசு பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோவில்கள் பற்றி
ஒரு கணக்கெடுத்து திருப்பணிகள் செய்ய முயற்சி எடுக்கவேண்டும்.தனியார்களை எடுத்துக்கொண்டால் திருவாவடுதுறை ஆதினம்,தருமபுரம் ஆதினம், போன்ற ஆதினத்திற்க்கு
சொந்தமான கோவில்கள் சிறப்பாக பராமரிக்கபடுகின்றன தஞ்சாவூர்.நாகை மாவட்டங்களில் பெரும்பாலான கோவில்கள் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

நகரத்தார்கள் என்று சொல்லகூடிய செட்டியார்கள் காரைக்குடி.தேவகோட்டை பகுதிகளில் அதிகம்.கவிஞர் கண்ணதாசன்,எஸ்.பி முத்துராமன்,பஞ்சுஅருணாசலம்,ராமநாராயணன்
தமிழ்வாணன்,ஏ.வி.எம்.லேனாதமிழ்வாணன் என்று இந்த இனத்தை சேர்ந்த வி.ஐ.பிகள்
அதிகம்.இவர்கள் காரைக்குடி.தேவகோட்டையை சுற்றிலும் கோவில்கள் அதிகம் கட்டி
திருப்பணிகள் செய்துள்ளனர்.இவர்கள் கோவில்களை சிறப்பாக பராமரிக்கின்றனர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் தேவகோட்டையில் முருகன் கோவில் கட்டி உள்ளார் கோவில்கள் அதிகம் கட்டி இந்து ச்முதாயத்தை வளர்ப்பதிலும் கோவில்களை சிறப்பாக‌
பராமரிப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து நான் சொல்வதை விட இப்பகுதியில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்த்தால் அப்படி ஒரு தெய்வாம்சம் இருப்பதை உணரமுடியும்.அவ்வளவு சிறப்பான நிர்வாகம்.திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்க்கு அடுத்து தேவகோட்டை சிவன் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா மிக‌
பிரசித்தம் விழா 10 நாட்கள் சிறப்பாக நடக்கும் சூலமங்களம் சகோதரிகள்,எம்.எஸ் சுப்புலட்சுமி,
கே.பி சுந்தராம்பாள்,கிருபானந்த வாரியார்,சீர்காழி கோவிந்தராஜன் என இக்கோவில் கந்தசஷ்டி விழாவிற்க்கு வராத வி.ஐ.பிக்களே இல்லை பாரம்பரியமான விழாவாக இன்றும்
நடந்து வருகிறது.ராமேஸ்வரம் கோவில் உட்பட பல புகழ்பெற்ற கோவில்களுக்கு கூட இவர்கள்தான் பரம்பரை அறங்காவலர்களாக இருந்துவருகின்றனர்.இவ்வினத்தை சேர்ந்த
நீதியரசர் லட்சுமணன் கட்டிய  சாய்பாபா கோவில் கட்டி இரண்டுவருடந்தான் ஆகிறது
இந்த கோவில் தேவக்கோட்டையில் படு பிரசித்தம்.காரைக்குடி கொப்புடையம்மன்,பிள்ளையார்பட்டி போன்ற கோவில்களில் இவர்களின் திருப்பணிகள் அதிகம்.ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரியகோவில்கள் அதிகம் தெரியாத சிறு கோவில்கள் முதலியவற்றுக்கு ஒரு விசிட் அடித்து வாருங்கள் தெய்வீக அனுபவத்தை நேரில் புரிந்து கொள்வீர்கள்.

Thursday, December 1, 2011

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்



சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து  நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில்
உள்ளது இந்த கோவில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்

உக்கிரமான இந்த காளியம்மனை வழிபட்டால் நம் துன்பங்கள் அகழும். குறிப்பாக செய்வினை
செய்தோர்,அடுத்தவருக்கு துன்பம் கொடுப்பவர் முதலியவர்களுக்கு எதிராக நாம் வேண்டிக்கொண்டு இங்கு நமக்கு எதிரானவர்களுக்கு நம் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில்
காசுவெட்டிப்போட்டுவிட்டு வருவதை தென்மாவட்டமக்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்
காசுவெட்டிபோட்டுவிட்டு வந்தால் அவர்களுடனான உறவும் முறிந்து நமக்கு எதிராக தீங்கு
செய்தவர்களை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியில் அவர்களை துவம்சம் செய்து
விடுவாள் இந்தக்காளி செயிவினை,பில்லி,சூனியம் போன்றவற்றை பொடிபொடியாக்கிவிடுவாள் இந்த அம்மன்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...