கோவில்கள்தான் ஒவ்வொருமனிதனின் மனநிம்மதிக்கு மருந்தாக உள்ளது கோவில்களில் போய் சாமிகும்பிடுவதோடு மட்டுமல்லாமல் கோவில்களை சிறப்பாக பராமரித்தால்தான்
கோவில்களில் தெய்வ வழிபாடு சிறப்பாக இருக்கும் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களுக்கு நான் சென்றபொழுது கோவில் கோவில் திருப்பணி கல்வெட்டை பார்ப்பேன்
நான் பார்த்த பெரும்பாலான கோவில்களில் திருப்பணி கல்வெட்டில் முதலமைச்சராக எம்.ஜி.ஆரும்.அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம் வீரப்பன் அவர்களும் அறநிலையத்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக திரு.ஆளுடையபிள்ளை அவர்கள் இவர்கள் மூவரின்
பெயர்தான் ஒவ்வொரு கோவில் கல்வெட்டிலும் பளிச்சிடுகிறது. இவர்கள் காலத்திற்க்கு பிறகு
நிறையக்கோவில்கள் திருப்பணிகள் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது.இது வருத்ததிற்குரிய விஷயமாகும்.தமிழக அரசு பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோவில்கள் பற்றி
ஒரு கணக்கெடுத்து திருப்பணிகள் செய்ய முயற்சி எடுக்கவேண்டும்.தனியார்களை எடுத்துக்கொண்டால் திருவாவடுதுறை ஆதினம்,தருமபுரம் ஆதினம், போன்ற ஆதினத்திற்க்கு
சொந்தமான கோவில்கள் சிறப்பாக பராமரிக்கபடுகின்றன தஞ்சாவூர்.நாகை மாவட்டங்களில் பெரும்பாலான கோவில்கள் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது
நகரத்தார்கள் என்று சொல்லகூடிய செட்டியார்கள் காரைக்குடி.தேவகோட்டை பகுதிகளில் அதிகம்.கவிஞர் கண்ணதாசன்,எஸ்.பி முத்துராமன்,பஞ்சுஅருணாசலம்,ராமநாராயணன்
தமிழ்வாணன்,ஏ.வி.எம்.லேனாதமிழ்வாணன் என்று இந்த இனத்தை சேர்ந்த வி.ஐ.பிகள்
அதிகம்.இவர்கள் காரைக்குடி.தேவகோட்டையை சுற்றிலும் கோவில்கள் அதிகம் கட்டி
திருப்பணிகள் செய்துள்ளனர்.இவர்கள் கோவில்களை சிறப்பாக பராமரிக்கின்றனர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் தேவகோட்டையில் முருகன் கோவில் கட்டி உள்ளார் கோவில்கள் அதிகம் கட்டி இந்து ச்முதாயத்தை வளர்ப்பதிலும் கோவில்களை சிறப்பாக
பராமரிப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து நான் சொல்வதை விட இப்பகுதியில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்த்தால் அப்படி ஒரு தெய்வாம்சம் இருப்பதை உணரமுடியும்.அவ்வளவு சிறப்பான நிர்வாகம்.திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்க்கு அடுத்து தேவகோட்டை சிவன் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா மிக
பிரசித்தம் விழா 10 நாட்கள் சிறப்பாக நடக்கும் சூலமங்களம் சகோதரிகள்,எம்.எஸ் சுப்புலட்சுமி,
கே.பி சுந்தராம்பாள்,கிருபானந்த வாரியார்,சீர்காழி கோவிந்தராஜன் என இக்கோவில் கந்தசஷ்டி விழாவிற்க்கு வராத வி.ஐ.பிக்களே இல்லை பாரம்பரியமான விழாவாக இன்றும்
நடந்து வருகிறது.ராமேஸ்வரம் கோவில் உட்பட பல புகழ்பெற்ற கோவில்களுக்கு கூட இவர்கள்தான் பரம்பரை அறங்காவலர்களாக இருந்துவருகின்றனர்.இவ்வினத்தை சேர்ந்த
நீதியரசர் லட்சுமணன் கட்டிய சாய்பாபா கோவில் கட்டி இரண்டுவருடந்தான் ஆகிறது
இந்த கோவில் தேவக்கோட்டையில் படு பிரசித்தம்.காரைக்குடி கொப்புடையம்மன்,பிள்ளையார்பட்டி போன்ற கோவில்களில் இவர்களின் திருப்பணிகள் அதிகம்.ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரியகோவில்கள் அதிகம் தெரியாத சிறு கோவில்கள் முதலியவற்றுக்கு ஒரு விசிட் அடித்து வாருங்கள் தெய்வீக அனுபவத்தை நேரில் புரிந்து கொள்வீர்கள்.
No comments:
Post a Comment