சிவகங்கையில் இருந்து 23 கி.மீ., தூரத்தில் உள்ளது ஏரியூர். இங்குள்ள மலை மருந்தீஸ்வரர், முனிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. மலையை சுற்றி அரிய மூலிகைகள் இருப்பதால், மருந்தீஸ்வரர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இதன் வரலாறு குறித்து பல கருத்துக்கள் உண்டு. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் போது, அதில் இருந்து விழுந்த சிறு துண்டு தான் இந்த மலை என்றும்;அந்த மலை மீது ஈஸ்வரன் குடிகொண்டதால், இக்கோயிலில் மலைமருந்தீஸ்வரராக காட்சியளிக்கிறார். இரவு ஒளிரும் ஜோதி விருட்சக தலம் என போற்றப்படுகிறது. இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பு. இக்கோயில், மருதுபாண்டியர்கள் காலத்தில் திருப்பணி நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில், 1978ல் கும்பாபிஷேகம் நடந்தது. பார்வையற்ற ஒருவர், சுயம்பாக இருந்த மருந்தீஸ்வரரை மிதித்து விட்டதாகவும், அந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்ததாகவும், மிதித்தது இறைவன் என தெரிந்து வருந்திய அவருக்கு, சுவாமி காட்சி கொடுத்து, பார்வை அளித்ததாகவும் கூறுகின்றனர்இங்கு சுவாமி சிலைகள் அனைத்தும் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. மலையை சுற்றி பல நீர்நிலைகள் உண்டு. இதில் சேங்காய் தெப்பம் புனிதம் மிக்கது. கோயில், கிராமத்தின் முக்கிய விழாக்களுக்கு இங்கிருந்து தான் நீர் எடுக்கின்றனர். இக்கிராமத்திற்கு திருமணம் ஆகி வரும் பெண்கள், இங்கு நீர் எடுத்து, முதல் சமையலை துவங்குகின்றனர். மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட, தெப்பத்தை யாரும் அசுத்தம் செய்வது இல்லை. இரவில் சித்தர்கள் வந்து மலையில் உள்ள மூலிகைகளை எடுத்து செல்வதாக நம்பப்படுகிறது.காரைக்குடி நகரத்தார்களின் கண்காணிப்பில் இந்த கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது .இங்கு தற்போது கிரிவலப்பாதை அமைக்கப்பட்டு கிரிவலமும் செல்லப்படுகிறதுநாமும் ஒருமுறை இந்த கோவில் சென்று அந்த ஈசனின் அருள்பெறுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில...
-
திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாத...
அருமையான விளக்கம் நானும் ஏரியூர் பக்கம்தான் ! இப்பொது நல்ல ரோடு போட்டு இருக்கு !
ReplyDeleteஅன்புடன்
சசி.இராஜசேகர்