Thursday, October 20, 2011

சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகானை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்
இவரை பற்றி அறிந்திராத நான் இரண்டு வருடங்களுக்கு முன் திரு வித்யாதரன் அவர்கள்
குங்குமம் இதழில் எழுதிய எந்த நட்சத்திரக்காரர்கள் யாரை வணங்க வேண்டும்
என்ற கட்டுரையில் எனது நட்சத்திரமான கேட்டை நட்சத்திரம் பற்றி பார்த்தேன்
கரூரில் இருந்து 10கிமீ தூரத்தில்
இருக்கும் நெருரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி யில் வணங்கினால்
துன்பங்கள்,மனக்கவலைகள்
அனைத்தும் பகலவனை கண்ட பனி போல மறையும் எனக்குறிப்பிட்டு இருந்தார்



காலப்போக்கில் இங்கு செல்வோம் என்று நினைத்தேனே தவிர இது வரை அங்கு செல்லவில்லை
அந்த கட்டுரையையும் மறந்துவிட்டேன் சுமார் 6மாதத்திற்க்கு முன் ஒரு
கடுமையான பிரச்சினை
எதிர்க்கொள்ளவேண்டி இருந்தது ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி
உட்கார்ந்து சதாசிவ பிரம்மேந்திரையும் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தையும்
நினைத்துக்கொண்டே பேருந்தில் சென்றேன்.மதுரை சென்று இறங்கியவுடன் நான்
என்ன நினைத்து பயந்து பயந்து மதுரை சென்றேனோ அந்த பிரச்சினை பகலவனை கண்ட
பனி போல‌
நான் எதிர்பார்க்காத வகையில் தீர்ந்தது



இவரை வணங்கினால்
அடுத்த ஒரு மணி நேரத்தில் எதை நினைத்து நாம் சஞ்சலப்படுகிறோமோ அதை உடனே தீர்த்து
வைக்கிறார் நாம் இவரை வேண்டி அடுத்த ஒரு மணி நேரத்திலோ இரண்டு மணி நேரத்திலோ
நம் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.நாம் தொடர்ந்து வேண்ட வேண்டும் என்பது முக்கியம்
இவரை பற்றி விகடன் பதிப்பகம் வெளியிட்டு உள்ள
புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்
மேலும் இணையத்தில் இவரது பெயரை தமிழில் தட்டச்சு செய்து தேடினால்
ஏகப்பட்ட கட்டுரைகள் படிக்கலாம்.
குறிப்பு;குறிப்பாக விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
மன நிம்மதி இல்லாமல்
தவிப்போர் இவரை வணங்கினால் உடனடி பலன் அடையலாம் என்பது எனது கருத்து

ஒரு கட்டுரையின் லிங்க் கீழே
http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_1007.html

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...