Skip to main content

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.நல் அறிவு,நல்ல பழக்கங்கள்,நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்விதான் இது எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து முக்கியமான பாவகங்களில் நின்றால் இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் இந்நிலை அமையப்பெற்றோர் நிலை மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய அமைப்பு இருக்கிறதா என ஓவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை பார்க்கவும்.தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற்பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் பயப்படதேவையில்லை
 இதற்க்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த
பரிகார ஸ்தலமாக உள்ளது.பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது  சிவபெருமான் மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவர் கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படுகிறது.இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்


குறிப்பு; பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய காலை மட்டுமே நல்ல நேரம் இரவில் எந்த தோஷபரிகாரமும் இக்கோவிலில் செய்வது கிடையாது. இது செய்ய முடியாதவர்கள் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி நீங்க ராமன் ராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில்கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற்றான்.இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம்.ராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்

இது வசதியுள்ளவர்களால் செய்யப்படும் பரிகாரம் இதற்க்கு மாற்றாக எளிய பரிகாரத்தை சிவ சேதுபாண்டியன் என்ற ஜோதிடர் எழுதி இருந்தார் இதோ அந்த பரிகாரம்
நல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய்,இழுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்
பழமையான சிவாலயத்திற்க்கு சென்று பலிபீடம்,கொடிமரம்,கொடிமர நந்தி,துவாரபாலகர்,வாயில் கணபதி,அதிகார நந்தி,சூரியன்,சந்திரன்,சமயக்குறவர்கள்,சப்த கன்னிமார்கள்,சுரதேவர்,தட்சிணாமூர்த்தி,கன்னிமார் அருகில் உள்ள கணபதி,சாஸ்தா பீடம்,வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன்,சனீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்
காலபைரவர்,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்

Comments

Popular posts from this blog

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2