Skip to main content

கோரக்கசித்தரின் ஜீவசமாதி

கோரக்கசித்தரின் ஜீவசமாதி நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கை நல்லூரில் உள்ளது.மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.குறிப்பாக பெளர்ணமி தினங்களில் கட்டுக்கடங்காமல் அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.இன்றும் பலருக்கு இங்குள்ள கோரக்கர் அருளால் பலவித நோய்கள்,குடும்பபிரச்சினைகள் குறைவதாக நம்பிக்கையுடன் வந்து இவரை மனமுருக வழிபடுகிறார்கள்.ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று மிக கோலாகலமாக கோரக்கருக்கு விழா நடப்பது
குறிப்பிடத்தக்கது.பழனிமுருகன் சிலையை போகர் செய்தபோது அதற்க்கு உறுதுணையாய் இருந்த சித்தர்களில் கோரக்கரும் ஒருவர்.கோரக்கர் துறவியாதலால் அன்னக்காவடி எடுத்து யாசகம் பெற்று உண்பவர் ஒருமுறை இந்த ஊரில் உள்ள செட்டியாரின் மனைவி தன் கணவருக்கு உணவு எடுத்துசென்றார்.செல்லும்போது கோரக்கமுனிவர் அன்னக்காவடி சுமந்து வந்து கொண்டிருந்தார் தனக்கு உணவிடுமாறுகேட்டுகொண்டார் மனமிரங்கிய செட்டியாரின் மனைவி தன் கணவருக்கு கொண்டு சென்ற உணவை கோரக்கருக்கு கொடுத்தார்.சிறிதளவு உணவை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்ற செட்டியாரின் மனைவி தன் கணவருக்கு சரியான அளவு உணவில்லையே என எண்ணிக்கொண்டு பாத்திரங்களை திறந்தார் உள்ளே ஆச்சரியப்படும் வகையில் பாத்திரங்கள் நிறைய உணவு இருந்தது.தன் கணவரிடம் வரும் வழியில் ஒரு துறவிக்கு பாதி உணவை கொடுத்துவிட்டதாகவும் எவ்வாறு இவ்வளவு உணவு வந்ததென்று தெரியவில்லையென தன் கணவர் செட்டியாரிடம் கூறினார்.இருவரும் துறவிக்கு உணவுகொடுத்த இடத்திற்க்கு வந்து பார்த்தனர் ஆனால் ஆச்சரியப்படும் வகையில் கோரக்கர் மறைந்துவிட்டார்.இந்த இடத்தில் கோரக்கருக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபாடு நடத்தி வரும் இடமே இதுவாகும்.கோரக்கர் அன்னக்காவடி எடுத்து சாப்பிடுவதன் பொருட்டு இங்கு
தினமும் இரண்டு சாமியார்கள் அன்னக்காவடி எடுத்து வருகின்றனர்.அதாவது இரவு எட்டு மணிக்கு வெளியில் பல வீடுகளில் பலவித உணவுகளை பெறுகின்றனர் அவற்றை கொண்டு வந்து கோரக்கருக்கு இரவு பூஜைக்கு படைக்கின்றனர்.படைத்த உணவை வாங்கி சாப்பிட்டால் குழந்தைபேறு இல்லாதவர்கள்,பலவித நோய்கள் பிரச்சினைகளால் துன்பப்படுபவர்களுக்கு
அனைத்தும் பிரச்சினைகளும் தீர்ந்து நலமுடன் வாழ்வதாக நம்பப்படுகிறது.

Comments

 1. Please make a link to facebook and twitter... then we can share this wonderful article to the world.... thanks

  ReplyDelete
 2. வணக்கம்

  கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80


  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  Video link
  http://sagakalvi.blogspot.in/2013/06/2013.html


  Thanks


  இறைவன் ஒருவர்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2