Friday, February 24, 2012

ஓம் சிவ சிவ ஓம் சொல்லியதால் இறைவன் எனக்கு வழங்கிய பரிசு

ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல்ல முடியவில்லை.சமீபத்தில் சிவராத்திரியன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றிருந்தேன் சிவராத்திரியன்று ஏதாவது சித்தர்கள் மகான்களின் ஜீவசமாதியில் உட்கார்ந்து ஓம் சிவ சிவ ஓம்
சொல்லுவதால் உண்டாகும் நன்மைபற்றி வீரமுனி அண்ணன் பல கட்டுரைகளில் விளக்கியிருந்தார்.சிவராத்திரியன்று வெளியிடப்பட்ட சிறப்புக்கட்டுரையிலும் விளக்கியிருந்தார்
சிவராத்திரியன்று சங்கரன்கோவில் அருகே பாம்புகோவிலுக்கு வந்து ஓம்சிவ சிவ ஓம் சொல்லும்படி கேட்டிருந்தார்.நான் அங்கு செல்வது தூரம் என்பதால் என் ஊருக்கு மிக அருகில் உள்ள ராமேஸ்வரத்திலே சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என முடிவுசெய்து
கோவிலுக்கு சென்றிருந்தேன்.கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.கூட்டத்தில் வரிசையில் சாமி
தரிசனம் செய்தேன் ராமநாதருக்கு பல வித அபிசேகங்கள் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தது
நான் கையோடு கொண்டு சென்று இருந்த ஓம்சிவ சிவ ஓம் நோட்டிஸ்களை வந்திருந்த அனைவருக்கும் வழங்கினேன்.அப்படியே அருகிலிருந்த பர்வதவர்த்தினியம்மனையும் வணங்கிவிட்டு நேராக நடராஜர் சன்னதிக்கு பின்புறமுள்ள பதஞ்சலி முனிவர் பீடத்திற்க்கு
சென்றோம்.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி இது.இங்கு உட்கார்ந்து ஓம் சிவ சிவ ஓம் சொல்வது என முடிவு செய்து மஞ்சள் துண்டு விரித்து மஞ்சள் ஆடை அணிந்து உட்கார்ந்து சொல்லதுவங்கினேன்.அரைமணிநேரம் சொல்லி முடித்தேன் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார் நீங்கள்தானே அங்கு நோட்டீஸ் கொடுத்தது என பேச்சை ஆரம்பித்தார் .ஆமாம் என்றேன் அவரும் ஆன்மிகக்கடல் படிப்பேன் ஓம் சிவ சிவ ஓம்


நானும் தினமும் சொல்லிகொண்டுவருகிறேன் எனவும் சொன்னார்.அந்த நண்பருக்கு ஒரு 28 வயதே இருக்கும்.அந்த இளைஞர் திருச்சூரை பூர்விகமாக கொண்ட மலையாளி.தாங்கள் மூன்று தலைமுறைக்கு முன் வந்து ராமேஸ்வரத்தில் டீக்கடை நடத்திவருவதாக குறிப்பிட்டார்.அந்த அன்பருக்கு ஆன்மிகத்தில் அளவுக்கதிகமாக ஈடுபாடு உண்டு.ராமேஸ்வரத்தில் பொய் சொல்லி
காசு பார்க்கும் ஆட்டோக்காரர்களையும்,யாத்திரை பணியாளர்களையும்,இல்லாதவர்களிடம் கூட காசைபிடுங்கி ஹோமம் நடத்தி ஒரு நாளைக்கு 10ஆயிரம் 15 ஆயிரம் சம்பாதிக்கும் இரக்கமற்ற அர்ச்சகர்களையும் நினைத்து மிகவும் கோபப்பட்டு வருந்தினார் அந்தக்காலத்தில்
காய்கறிகளையும் சிறிதளவு பணத்தையும் வாங்கிகொண்டு ஹோமம்,திதி முதலியவற்றை
சிறப்பாக செய்துகொடுத்தனர் இன்றோ கலிமுத்தி விட்டதால் காசுக்காக கடமைக்கு மந்திரம்
சொல்பவர்கள் பெருகிவிட்டார்கள்.அவர்கள் மந்திரம் சொல்லும்போதேஇறை சிந்தனையை விட‌ காசு சிந்தனைதான் அவர்களுக்கு மேலோங்குகிறது.எப்பொழுது ஹோமம்  செய்து விட்டு
வீட்டிற்க்கு காசு வாங்கி செல்வது என்றே அவர்கள் நினைக்கின்றனர்.இதனால் ராமேஸ்வரத்திற்க்கு கஷ்டப்பட்டு வந்து முன்னோர் திதி தர்ப்பணம் செய்பவர்கள் முழுமன திருப்தி இல்லாமல் செல்கின்றனர்.மேலும் அவர்கள் திதி கொடுத்த ஆத்மாக்கள் சரியாக மனச்சாந்தி அடையாமல் அவர் குடும்பம் துன்பத்தில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது என வருத்தப்பட்டார்.இறை சிந்தனையுடைய நல்ல பிராமணர்களும்சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
எனவும் குறிப்பிட்டார்.

அப்போது சிலர் ராமநாதசுவாமிக்கு அபிசேகம் செய்வதற்காக குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.அவர்களையும் நினைத்து அந்த நண்பர் பரிதாபப்பட்டார்,ராமேஸ்வரத்தில் அட்டகாசம் செய்பவர்களில் இவர்கள் நம்பர் ஒன் .பல வித தொழில்கள் செய்து பணக்காரர்களாக உள்ளதால் இவர்களுக்குத்தான் கோவிலில் முதல் மரியாதை என வருத்தப்பட்டார்.நான் அந்த நண்பரிடம் சொன்னேன் இறைவனுக்கு யாருக்கு எப்போது
எதைகொடுக்கவேண்டும் என்று தெரியும் இதுபோல அநியாயங்கள் பல செய்து சிவராத்திரி அன்று மட்டும் சுவாமிக்கு அபிசேகம் செய்வதால் எந்த பலனும் இல்லை அவரவர்களுக்குரிய‌
பலன்களை நேரம் காலம் வரும்போது அவரவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறினேன்.தாம்
ஒரு இஞ்சினியரிங் பட்டதாரி என்றும் தனக்கு நிறைய சிவன் கோவில்களை தரிசிக்கும் எண்ணம் இருப்பதாகவும் சரியான வேலை இல்லாமல் அப்பாவிடம் பணம் கேட்டு தன்னால்
சிவஸ்தலங்களை தரிசிக்கமுடியாமல் சொந்த ஊரான ராமேஸ்வரம் கோவிலிலேயே கிடப்பதாக வருத்தப்பட்டார்.ராமேஸ்வரம் அருகில் உள்ள ஊர் என்பதால் நான் அடிக்கடி செல்வதுண்டு சென்றவுடன் அங்கு
முதலில் இருக்கும் ஆஞ்சனேயர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விநாயகர்,ராமநாதர்.பைரவர்,முருகர்,பர்வதவர்த்தினியை தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு பஸ் ஏறிவிடுவேன்.

அன்று நான் சந்தித்த அன்பர் நான் கோவிலை சுற்றிக்காட்டுகிறேன் என்றார்.நான் நினைத்தேன்
நாம் பலமுறை சுற்றிப்பார்த்த ராமேஸ்வரம் கோவில்தானே எல்லா இடமும் நாம் அறிந்ததுதானே என தவறாக நினைத்தேன்.அந்த அன்பரின் அழைப்பை ஏற்று அவருடன் சென்றேன். நீங்கள் திருவண்ணாமலையிலோ.ராமேஸ்வரத்திலோ பிரகாரங்களில் சுற்றி வருப்போது நிறைய லிங்கங்கள் இருக்கும் சில லிங்கங்களை கேட்பாரற்று கோவில் நிர்வாகம்
போட்டிருக்கும் அப்படி உள்ள லிங்கங்களை சுத்தம் செய்வதை ஒரு பணியாக செய்து வருகிறார்
அந்த இளைஞர்.அன்றும் அப்படித்தான் ஒரு லிங்கம் இருக்கும் சன்னதிக்கு கூட்டிசென்றார் நீலேஸ்வரர் எனப்பெயரிடப்பட்ட இந்த லிங்கம் பல நூறு வருடங்கள்  பராமரிப்பு இல்லாமல்
தூசி பிடிக்கப்பட்டு கிடந்தது.இந்த நண்பரின் சொந்த முயற்சியில் சிவராத்திரியன்றாவது
அதை சரி செய்யவேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் அந்த சின்ன சன்னதிக்குரிய‌
சாவியை கொடுங்கள் என்று அந்த சன்னதியை சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வைத்திருந்தார்.இன்னொரு சிறப்புத்தகவல் ஒன்றையும் சொன்னார் இந்த லிங்கத்தை இவ்வளவு சிறப்பாக நான் கவனிக்கவேண்டும் நினைத்ததற்க்கு காரணம் இந்த லிங்கம்தான் பல வருடங்களுக்கு முன் தற்போதுள்ள ராமநாதர் சிலைக்கு பதிலாக‌
இருந்த மூலவர் லிங்கம் இவர்தான்.இதை இந்த ஊரிலே இருந்தாலும் யாரும் தரிசித்தது இல்லை
அதற்குரிய பிராப்தம் இருந்ததனால் உங்களுக்கும் எனக்கும் அந்த யோகம் கிடைத்துள்ளது என்றார்.இவ்வளவு பழமையான லிங்கத்தை தரிசித்ததற்க்கு ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்ததுதான் காரணம் என்று நிறைவான ஒரு காரணத்தை சொன்னார்.மேலும் ஒரு பழமையான உப்புக்கல்லால் செய்யப்பட்ட லிங்கத்தையும் காண்பித்தார்.பல வருடங்களாக அந்த உப்புலிங்கம்
அப்படியே கரையாமல் உப்புக்கல்லாகவே இருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.
அங்கு யாருக்குமே சரியாக தெரியாத சேதுமாதவர் சன்னதிக்கு கூட்டிசென்றார் கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவரை வணங்கினால் கடுமையான பிதுர்தோஷத்தை நீக்குகிறார் எனக்குறிப்பிட்டார்.

எப்போதும் நான் முதலில் வணங்கி விட்டு செல்லும் ஆஞ்சனேயரை கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியில் இருந்து சிலையை பார்க்காமல் மனதில் நினைத்து கும்பிட்டுவிட்டு
திரும்பும்போது கும்பிடலாம் என நினைத்தேன்.விடிய விடிய கோவிலில் ஆஞ்சனேயரை வணங்காமல், அதை மறந்து விட்டு தூங்காமல் இருந்ததால் காலையில் ஊருக்கு கிளம்பி விட்டேன்.அடுத்த நாள் தூங்கும்போது ஒரு கனவு ராமாயணக்கதைக்கும் இந்த ராமநாதர் கோவில் உருவாவதற்க்கு
நானும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்டாயே என்னை வணங்காமல் வந்துவிட்டாயே என்று
கனவில் அசரீரி போன்ற ஒரு குரல் என்னால் நம்பவே முடியவில்லை .ஆஞ்சனேயரின் சக்தியை நினைத்து அளவற்ற ஆச்சரியமடைந்தேன் இரண்டொரு நாட்களில் அங்கு மறுபடியும் செல்லலாம் என நினைத்துள்ளேன்

3 comments:

  1. _/\_Om SivaSiva Om_/\_
    Ellam Avan Seyal

    ReplyDelete
  2. ayya ramadevar peyaril blogspot vaithulleer,aanaal sambanthar perumaan,appar perumaan cheramaan perumaan akiyor solliya panchatchra manthirame uyarnthathu. athai mattume sollavendum ,samanyarkalaal sollappadavendum.athaivittu thaniyaa per vaaanganumnu rajapalayam group kooda ippdi kelampitingelayya,pala per parppanga thappaa vali kaattatheerkal,ANJELUTHU& ETTALUTHU manthirathai surukka yaarukkum rights kidaiyathu

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் ,

    தங்கள் இணைய பக்கம் பார்த்து நானும் சுமார் இரண்டு மாத காலமாக சொல்லி வருகேரன் .

    ஓம் சிவ சிவ ஓம்

    நன்றி,வணக்கம்

    இராஜசேகர் ,துபாய்.

    ReplyDelete

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...