Wednesday, February 29, 2012

அனைவரும் எளிமையான முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ள எளிய வழி



ஜோதிடக்கலை என்பது ஒரு அரிய கலையாகும்.ஒரு காலத்தில் மிகப்பெரிய பண்டிதர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த கலை தற்போதைய நவீன யுகத்தில் அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் வந்துவிட்டது.பல ஜோதிட பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.இவற்றிர்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே ஜோதிடம் பயில்வதற்காக இணையத்தில் சுப்பையா வாத்தியார் என்பவர் ஓவ்வொரு பிரிவாக பிரித்து பாடத்தொகுப்பாக வைத்துள்ளார்.இதை படித்து புரிந்து நீங்களும் ஜோதிடராக வாழ்த்துக்கள்

குறிப்பு: முன் ஜென்ம நல்ல காரியம் செய்தவர்களால் தான் இந்த ஜோதிடக்கலையை பயில முடியும்.ஜாதகத்தில் இக்கலையை பயில்வதற்க்கு உரிய யோகமும் இருக்க வேண்டும் அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்



Tuesday, February 28, 2012

கருடபுராணம் படிக்க‌




நடிகர் விக்ரம் நடித்த அன்னியன் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.அதில் கொலை செய்தவருக்கு,அடுத்தவருக்கு உதவி செய்யாமல் சென்றவருக்கு வித விதமான தண்டனைகளை தருவார்.கும்பிபாகம் என்றும் கிருமிபோஜனம் என்றும் ஓவ்வொரு தண்டனைகளுக்கும் விதவிதமான பெயர் இருக்கும்.இந்து தர்மத்தில் இறந்தவுடன் ஒருவர் எங்கே செல்கிறார் நரகம் சொர்க்கம் அங்கு தரும் தண்டனைகள் பற்றி விளக்குவதே இந்த கருடபுராணம் அப்படிப்பட்ட தண்டனைகளையே திரைப்படங்களில் இயக்கியிருப்பார் இயக்குனர் சங்கர்.கருடபுராணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழில் ஒரு தளம் இயக்குகிறது அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்.

Friday, February 24, 2012

ஓம் சிவ சிவ ஓம் சொல்லியதால் இறைவன் எனக்கு வழங்கிய பரிசு

ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல்ல முடியவில்லை.சமீபத்தில் சிவராத்திரியன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றிருந்தேன் சிவராத்திரியன்று ஏதாவது சித்தர்கள் மகான்களின் ஜீவசமாதியில் உட்கார்ந்து ஓம் சிவ சிவ ஓம்
சொல்லுவதால் உண்டாகும் நன்மைபற்றி வீரமுனி அண்ணன் பல கட்டுரைகளில் விளக்கியிருந்தார்.சிவராத்திரியன்று வெளியிடப்பட்ட சிறப்புக்கட்டுரையிலும் விளக்கியிருந்தார்
சிவராத்திரியன்று சங்கரன்கோவில் அருகே பாம்புகோவிலுக்கு வந்து ஓம்சிவ சிவ ஓம் சொல்லும்படி கேட்டிருந்தார்.நான் அங்கு செல்வது தூரம் என்பதால் என் ஊருக்கு மிக அருகில் உள்ள ராமேஸ்வரத்திலே சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என முடிவுசெய்து
கோவிலுக்கு சென்றிருந்தேன்.கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.கூட்டத்தில் வரிசையில் சாமி
தரிசனம் செய்தேன் ராமநாதருக்கு பல வித அபிசேகங்கள் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தது
நான் கையோடு கொண்டு சென்று இருந்த ஓம்சிவ சிவ ஓம் நோட்டிஸ்களை வந்திருந்த அனைவருக்கும் வழங்கினேன்.அப்படியே அருகிலிருந்த பர்வதவர்த்தினியம்மனையும் வணங்கிவிட்டு நேராக நடராஜர் சன்னதிக்கு பின்புறமுள்ள பதஞ்சலி முனிவர் பீடத்திற்க்கு
சென்றோம்.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி இது.இங்கு உட்கார்ந்து ஓம் சிவ சிவ ஓம் சொல்வது என முடிவு செய்து மஞ்சள் துண்டு விரித்து மஞ்சள் ஆடை அணிந்து உட்கார்ந்து சொல்லதுவங்கினேன்.அரைமணிநேரம் சொல்லி முடித்தேன் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார் நீங்கள்தானே அங்கு நோட்டீஸ் கொடுத்தது என பேச்சை ஆரம்பித்தார் .ஆமாம் என்றேன் அவரும் ஆன்மிகக்கடல் படிப்பேன் ஓம் சிவ சிவ ஓம்


நானும் தினமும் சொல்லிகொண்டுவருகிறேன் எனவும் சொன்னார்.அந்த நண்பருக்கு ஒரு 28 வயதே இருக்கும்.அந்த இளைஞர் திருச்சூரை பூர்விகமாக கொண்ட மலையாளி.தாங்கள் மூன்று தலைமுறைக்கு முன் வந்து ராமேஸ்வரத்தில் டீக்கடை நடத்திவருவதாக குறிப்பிட்டார்.அந்த அன்பருக்கு ஆன்மிகத்தில் அளவுக்கதிகமாக ஈடுபாடு உண்டு.ராமேஸ்வரத்தில் பொய் சொல்லி
காசு பார்க்கும் ஆட்டோக்காரர்களையும்,யாத்திரை பணியாளர்களையும்,இல்லாதவர்களிடம் கூட காசைபிடுங்கி ஹோமம் நடத்தி ஒரு நாளைக்கு 10ஆயிரம் 15 ஆயிரம் சம்பாதிக்கும் இரக்கமற்ற அர்ச்சகர்களையும் நினைத்து மிகவும் கோபப்பட்டு வருந்தினார் அந்தக்காலத்தில்
காய்கறிகளையும் சிறிதளவு பணத்தையும் வாங்கிகொண்டு ஹோமம்,திதி முதலியவற்றை
சிறப்பாக செய்துகொடுத்தனர் இன்றோ கலிமுத்தி விட்டதால் காசுக்காக கடமைக்கு மந்திரம்
சொல்பவர்கள் பெருகிவிட்டார்கள்.அவர்கள் மந்திரம் சொல்லும்போதேஇறை சிந்தனையை விட‌ காசு சிந்தனைதான் அவர்களுக்கு மேலோங்குகிறது.எப்பொழுது ஹோமம்  செய்து விட்டு
வீட்டிற்க்கு காசு வாங்கி செல்வது என்றே அவர்கள் நினைக்கின்றனர்.இதனால் ராமேஸ்வரத்திற்க்கு கஷ்டப்பட்டு வந்து முன்னோர் திதி தர்ப்பணம் செய்பவர்கள் முழுமன திருப்தி இல்லாமல் செல்கின்றனர்.மேலும் அவர்கள் திதி கொடுத்த ஆத்மாக்கள் சரியாக மனச்சாந்தி அடையாமல் அவர் குடும்பம் துன்பத்தில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது என வருத்தப்பட்டார்.இறை சிந்தனையுடைய நல்ல பிராமணர்களும்சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
எனவும் குறிப்பிட்டார்.

அப்போது சிலர் ராமநாதசுவாமிக்கு அபிசேகம் செய்வதற்காக குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.அவர்களையும் நினைத்து அந்த நண்பர் பரிதாபப்பட்டார்,ராமேஸ்வரத்தில் அட்டகாசம் செய்பவர்களில் இவர்கள் நம்பர் ஒன் .பல வித தொழில்கள் செய்து பணக்காரர்களாக உள்ளதால் இவர்களுக்குத்தான் கோவிலில் முதல் மரியாதை என வருத்தப்பட்டார்.நான் அந்த நண்பரிடம் சொன்னேன் இறைவனுக்கு யாருக்கு எப்போது
எதைகொடுக்கவேண்டும் என்று தெரியும் இதுபோல அநியாயங்கள் பல செய்து சிவராத்திரி அன்று மட்டும் சுவாமிக்கு அபிசேகம் செய்வதால் எந்த பலனும் இல்லை அவரவர்களுக்குரிய‌
பலன்களை நேரம் காலம் வரும்போது அவரவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறினேன்.தாம்
ஒரு இஞ்சினியரிங் பட்டதாரி என்றும் தனக்கு நிறைய சிவன் கோவில்களை தரிசிக்கும் எண்ணம் இருப்பதாகவும் சரியான வேலை இல்லாமல் அப்பாவிடம் பணம் கேட்டு தன்னால்
சிவஸ்தலங்களை தரிசிக்கமுடியாமல் சொந்த ஊரான ராமேஸ்வரம் கோவிலிலேயே கிடப்பதாக வருத்தப்பட்டார்.ராமேஸ்வரம் அருகில் உள்ள ஊர் என்பதால் நான் அடிக்கடி செல்வதுண்டு சென்றவுடன் அங்கு
முதலில் இருக்கும் ஆஞ்சனேயர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விநாயகர்,ராமநாதர்.பைரவர்,முருகர்,பர்வதவர்த்தினியை தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு பஸ் ஏறிவிடுவேன்.

அன்று நான் சந்தித்த அன்பர் நான் கோவிலை சுற்றிக்காட்டுகிறேன் என்றார்.நான் நினைத்தேன்
நாம் பலமுறை சுற்றிப்பார்த்த ராமேஸ்வரம் கோவில்தானே எல்லா இடமும் நாம் அறிந்ததுதானே என தவறாக நினைத்தேன்.அந்த அன்பரின் அழைப்பை ஏற்று அவருடன் சென்றேன். நீங்கள் திருவண்ணாமலையிலோ.ராமேஸ்வரத்திலோ பிரகாரங்களில் சுற்றி வருப்போது நிறைய லிங்கங்கள் இருக்கும் சில லிங்கங்களை கேட்பாரற்று கோவில் நிர்வாகம்
போட்டிருக்கும் அப்படி உள்ள லிங்கங்களை சுத்தம் செய்வதை ஒரு பணியாக செய்து வருகிறார்
அந்த இளைஞர்.அன்றும் அப்படித்தான் ஒரு லிங்கம் இருக்கும் சன்னதிக்கு கூட்டிசென்றார் நீலேஸ்வரர் எனப்பெயரிடப்பட்ட இந்த லிங்கம் பல நூறு வருடங்கள்  பராமரிப்பு இல்லாமல்
தூசி பிடிக்கப்பட்டு கிடந்தது.இந்த நண்பரின் சொந்த முயற்சியில் சிவராத்திரியன்றாவது
அதை சரி செய்யவேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் அந்த சின்ன சன்னதிக்குரிய‌
சாவியை கொடுங்கள் என்று அந்த சன்னதியை சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வைத்திருந்தார்.இன்னொரு சிறப்புத்தகவல் ஒன்றையும் சொன்னார் இந்த லிங்கத்தை இவ்வளவு சிறப்பாக நான் கவனிக்கவேண்டும் நினைத்ததற்க்கு காரணம் இந்த லிங்கம்தான் பல வருடங்களுக்கு முன் தற்போதுள்ள ராமநாதர் சிலைக்கு பதிலாக‌
இருந்த மூலவர் லிங்கம் இவர்தான்.இதை இந்த ஊரிலே இருந்தாலும் யாரும் தரிசித்தது இல்லை
அதற்குரிய பிராப்தம் இருந்ததனால் உங்களுக்கும் எனக்கும் அந்த யோகம் கிடைத்துள்ளது என்றார்.இவ்வளவு பழமையான லிங்கத்தை தரிசித்ததற்க்கு ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்ததுதான் காரணம் என்று நிறைவான ஒரு காரணத்தை சொன்னார்.மேலும் ஒரு பழமையான உப்புக்கல்லால் செய்யப்பட்ட லிங்கத்தையும் காண்பித்தார்.பல வருடங்களாக அந்த உப்புலிங்கம்
அப்படியே கரையாமல் உப்புக்கல்லாகவே இருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.
அங்கு யாருக்குமே சரியாக தெரியாத சேதுமாதவர் சன்னதிக்கு கூட்டிசென்றார் கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவரை வணங்கினால் கடுமையான பிதுர்தோஷத்தை நீக்குகிறார் எனக்குறிப்பிட்டார்.

எப்போதும் நான் முதலில் வணங்கி விட்டு செல்லும் ஆஞ்சனேயரை கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியில் இருந்து சிலையை பார்க்காமல் மனதில் நினைத்து கும்பிட்டுவிட்டு
திரும்பும்போது கும்பிடலாம் என நினைத்தேன்.விடிய விடிய கோவிலில் ஆஞ்சனேயரை வணங்காமல், அதை மறந்து விட்டு தூங்காமல் இருந்ததால் காலையில் ஊருக்கு கிளம்பி விட்டேன்.அடுத்த நாள் தூங்கும்போது ஒரு கனவு ராமாயணக்கதைக்கும் இந்த ராமநாதர் கோவில் உருவாவதற்க்கு
நானும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்டாயே என்னை வணங்காமல் வந்துவிட்டாயே என்று
கனவில் அசரீரி போன்ற ஒரு குரல் என்னால் நம்பவே முடியவில்லை .ஆஞ்சனேயரின் சக்தியை நினைத்து அளவற்ற ஆச்சரியமடைந்தேன் இரண்டொரு நாட்களில் அங்கு மறுபடியும் செல்லலாம் என நினைத்துள்ளேன்

Sunday, February 19, 2012

மஹாசிவராத்திரியில் சிவனை வழிபடுவதால் விருப்பங்களே இல்லாத உயர்ந்த நிலையை அளிக்கும்.


சிவராத்திரி மகிமை பற்றி கூறும் ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரி தினத்தன்று சிவன் பார்வதி இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அந்த மரத்திலிருந்த குரங்கு ஒன்று
தானும் தூங்காமல் விழித்துகொண்டிருந்தது.தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து

தூங்காமல் சிவன் மேலும் பார்வதி மேலும் வீசிக்கொண்டிருந்தது சிவராத்திரியில் 4காலங்களிலும் குரங்கு வீசிய வில்வ இலைகளை ஏற்று குரங்கை முசுகுந்த சக்கரவர்த்தியாய் பிறக்க அருள்புரிந்தார். குரங்கும் சிவபூஜை செய்து தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு தான் இந்த குரங்கு முகத்துடனே இருக்கவேண்டும் என சிவனிடம் கோரியது.அவரும் அதை ஏற்றுகொள்ள அந்த குரங்கு சோழமன்னன் முசுகுந்த சக்கரவர்த்தியாய் பிறந்து ஆட்சி  புரிந்ததை நமக்கு சிலப்பதிகாரம்,மணிமேகலை,கலிங்கத்துபரணி, முதலான நூல்கள் காட்டுவதால் சிவராத்திரி மகிமையை அறியலாம் இதே போல் எமன்,மன்மதன்,இந்திரன்,அக்னி,சந்திரன் ,குபேரர், என இன்னாளில் சிவனை வழிபட்டு நன்னிலை அடைந்தோர் அதிகம். சிவராத்திரி அன்று வழிபடுவோரின் எண்ணங்களை நிறைவேற்ற பார்வதி தேவி சிவனிடம் வேண்டினார் இதுபோலவே சிவன் சிவராத்திரியன்று வழிபடுவோரின் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறார்.

Wednesday, February 15, 2012

சிவபெருமான் இமயமலையில் தோன்றிய காட்சி



சிவபெருமான் இமயமலையில் தோன்றியதாக இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்

Tuesday, February 14, 2012

சிவராத்திரிஅன்னதானம் சிறப்புக்கட்டுரை

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர் சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானின் அக்னித்தலமான நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். மற்ற ஊர்களில் இல்லாத அளவிற்க்கு திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வர் அதற்க்கு ஒரு சிறப்புக்காரணம் இருக்கிறது

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் என்பவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தோன்றியவர்.அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்றவர் ஸ்தம்பனம்,மோகனம்,வசியம்,உச்சாடனம்,மாரகம்,உத்வேஷணம்,கல்பம்,மகா உத்தி போன்ற எட்டுவித உத்திகளின்படி பல அரியமருந்துகளை தயாரித்து மக்களின் தீராத நோய்களை போக்கியவர்.அந்த வகையில் இவர் கிரிவலம் வரும்போது தூல,சூக்கும,பாவன்,அரூப வடிவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வருகிறார் கிரிவலத்தின்போது பக்தர்கள் காலில் விழுந்து நசுங்கிய எறும்புகளுக்கும் சிகிச்சை செய்தவர் இவர்.ஒருமுறை சிவபெருமான் கிரிவலத்தின்போது மானிடவடிவில் வந்து தனக்கு அடங்கா கோரபசி ஏற்படுவதாகவும் இந்த வியாதியை தாங்கள் போக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.சித்தர் மானிட வடிவில் வந்திருக்கும்
சிவனின் கைநாடியை பிடித்து பார்த்தார் கோடியில் ஒருவருக்கே வரும் வாள[நாடி]துடிப்பு அது.இந்த வாளத்துடிப்பால் அடங்காத பசி ஏற்படும். இதை தீர்க்கவேண்டுமென்றால் அண்ணாமலையில் பல கோடி பேர்களுக்கு அன்னதானம் பண்ணியவரின் கரங்களால் உணவு சமைத்து எடுத்து வந்தால் அதில் நான் தரும் பெருவாளபஸ்பத்தினை கலந்து மருந்தாக சாப்பிட்டல் இந்த நோய் தீரும் என்கிறார்.உடனே சிவபெருமான் கோடிபேருக்கு அன்னதானம் இட்டவர் பற்றிய விவரம்பைரவரிடம் கேட்கவே அக்னி பகவான் ஒருவரே மனிதவடிவில் கிரிவலம் வந்து
பல கோடிபேர்களுக்கு அன்னம் இட்டவர் என்று அவரை அங்கு அழைத்து வந்து விட்டார்.


சிவனுக்கு ஆகுதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் வேள்விக்கு ஆதாரமாய் நின்று பங்கு கொண்டமையால் தன்னுடைய அக்னிப்பிரகாசம் குறைந்ததால் அதற்க்கு பரிகாரம் தேடி கிரிவலம் செய்து கோடிக்கணக்காணவர்களுக்கு அன்னதானம் செய்துவருவதாக அக்னிபகவான்
கூற பைரவரும் மானிடராக வந்த சிவ்னை யாரென சொல்லாமல் அவருக்கு உணவாக்கிதரும்படி சொல்ல அக்னி பகவானும் ஒப்புக்கொண்டார்.அன்னபூரணி அரிசி வார்க்க‌





சாகம்பா தேவி பொருட்களை அரிந்து தர பிரம்மா வேதாக்னி தந்திட உணவு தயாராயிற்று
தயாராக இருந்த பஸ்பத்தை உணவில் சிவப்பெருவாளர் கலந்து சிவனின் பசி என்னும் கொடியநோயை தீர்த்துவைத்தார். அப்போது அருணாசலப்பெருமான் அசரீரியாய் சித்தரை நோக்கி எமை ஜோதியாய் அடைவீர் அருளி அவரை ஆட்கொண்டார். மிக அபூர்வமான கிடைத்தற்கரிய சிவனின் திருவடியில் மாதா அன்னபூரணியே சிவப்பெருவாளரை ஆசிர்வதித்த கிரிவலப்பாதையில் மஹா சிவராத்திரி அன்று அன்னதானம் செய்தால் கல்வி
வேலை,பதவி,ஆரோக்கியம்,குடும்ப நன்மை,வழக்கு,திருமணம் இவற்றில் இருந்த பிரச்சினை
நீங்கி சுபம் உண்டாகும்.மேலும் ஊழ்வினைப்பயனால் சாப்பிடமுடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் நோய் உள்ளோர் ஹோட்டல்,காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு
மிகச்சிறப்பாக இருக்கும் நாமும் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை செல்ல முடியாவிட்டாலும் உள்ளூரில் இருக்கும் சிவன்கோவிலிலாவது அன்னதானம் செய்து அந்த சிவனருள் பெறுவோம். நாளை சிவராத்திரியின் சிறப்புக்களை பார்ப்போம்

Sunday, February 12, 2012

சிவகங்கை மலை மருந்தீஸ்வரர், முனிநாதர் கோயில்

 சிவகங்கையில் இருந்து 23 கி.மீ., தூரத்தில் உள்ளது ஏரியூர். இங்குள்ள மலை மருந்தீஸ்வரர், முனிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. மலையை சுற்றி அரிய மூலிகைகள் இருப்பதால், மருந்தீஸ்வரர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இதன் வரலாறு குறித்து பல கருத்துக்கள் உண்டு. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் போது, அதில் இருந்து விழுந்த சிறு துண்டு தான் இந்த மலை என்றும்;அந்த மலை மீது ஈஸ்வரன் குடிகொண்டதால், இக்கோயிலில் மலைமருந்தீஸ்வரராக காட்சியளிக்கிறார். இரவு ஒளிரும் ஜோதி விருட்சக தலம் என போற்றப்படுகிறது. இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பு. இக்கோயில், மருதுபாண்டியர்கள் காலத்தில் திருப்பணி நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில், 1978ல் கும்பாபிஷேகம் நடந்தது.  பார்வையற்ற ஒருவர், சுயம்பாக இருந்த மருந்தீஸ்வரரை மிதித்து விட்டதாகவும், அந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்ததாகவும், மிதித்தது இறைவன் என தெரிந்து வருந்திய அவருக்கு, சுவாமி காட்சி கொடுத்து, பார்வை அளித்ததாகவும் கூறுகின்றனர்இங்கு சுவாமி சிலைகள் அனைத்தும் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. மலையை சுற்றி பல நீர்நிலைகள் உண்டு. இதில் சேங்காய் தெப்பம் புனிதம் மிக்கது. கோயில், கிராமத்தின் முக்கிய விழாக்களுக்கு இங்கிருந்து தான் நீர் எடுக்கின்றனர். இக்கிராமத்திற்கு திருமணம் ஆகி வரும் பெண்கள், இங்கு நீர் எடுத்து, முதல் சமையலை துவங்குகின்றனர். மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட, தெப்பத்தை யாரும் அசுத்தம் செய்வது இல்லை. இரவில் சித்தர்கள் வந்து மலையில் உள்ள மூலிகைகளை எடுத்து செல்வதாக நம்பப்படுகிறது.காரைக்குடி நகரத்தார்களின் கண்காணிப்பில் இந்த கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது .இங்கு தற்போது கிரிவலப்பாதை அமைக்கப்பட்டு கிரிவலமும் செல்லப்படுகிறதுநாமும் ஒருமுறை இந்த கோவில் சென்று அந்த ஈசனின் அருள்பெறுவோம்.

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...