Saturday, March 23, 2013

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்


தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் அருகில்  உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் ழங்கும் அருள்மிகு மகா முத்துமாரியம்மன்
தல வரலாற்றில் தனிபுதுமை
1986ம் வருடம் என் வயலில் மிளகாய் வைத்து பயிர் செய்து வந்‌தேன். தினம் 50 பெண்கள் வேலை செய்வார்கள். அந்த வயலில் அமைந்திருந்த ஒர் வேப்பமரமும் அதனடியில் ஒர் புற்றும் இருந்தது. அவ்விடம் வரும் பெண்களில் யாருக்காவது ஒருவர் மேல் சாமி வந்து ஆடி அந்த இடத்தில் கோயில் கட்ட சொல்வார்கள். இது தினமும் நடக்கும் வாடிக்கையாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் நான் கடவுளை நம்ப மறுத்தவன். 1976-ம் ஆண்டு தஞ்சையில்  உள்ள திரு. பேச்சிமுத்து சுவாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்க எனது தம்பி  திரு. தட்சிணமுர்த்தி என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறும் போதுஉன்னுடைய வயலில் ஒர் வேப்பமரமும் அதனடியில் புற்றும் இருக்கிறது. அந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்ட கேட்டு அம்பாள் வந்திருப்பதாக கூறி அவளுக்கு ஒர் கல் நிறுத்தி வணங்கி வந்தால் வேறு தெய்வம் இல்லைஎன்று கூறி இருந்தார்.
ஒர் முறை கை‌ரேகை பார்ப்பவர் நீங்கள் எவ்வளவுதான் சாமியை பற்றி மறுத்து பேசினாலும் நீங்களே ஒரு கும்பாபிசேகம் செய்வீர்கள்என்று அடித்துக் கூறினார். இன்று ஒர் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் அன்று பங்கு பெறுகின்றனர். அம்பாள் இயற்கையாக - சுயம்புவாக தேன்றிய இடம் இது. - ஆடியார் சண்முகனார்
சுசிலா என்கிற ஹரிஐனப் பெண்ணின் ஆ‌வேசம்
ஓர் நாள் படிக்காத அந்த அம்மாள் சாமி ஆடிஅந்த வருடம் அவனுக்கு மிளகாய் விற்பனையில் அதிக வருமானம் கொடுத்‌தேன், நான் இப்படி அள்ளியள்ளி கொடுக்கும் போது எனக்கு ஒரு விளக்‌கேற்ற பயப்படுகிறான் என்று சாமி ஆடினாள்.
இதை கேள்விப்பட்ட நான் அந்த வேப்பமரம் நடு வயலில் இருப்பதால் யாரும் அவ்விடம் வந்து வணங்க மாட்டார்கள் என்று கருதி வேண்டுமானால் சாலையோரம் சின்ன கோயிலாகக் கட்டி விட்டல் போவோராவது சாமி கும்பிடுவார்கள் என்று வெளியல் ஒருவரிடம் கூறி‌னேன். மறுநாள் அந்த அம்மாள்என்னை கி‌ழக்கே கொண்டு போகலாமா, மேற்கே ‌‌கொண்டு போகலாமா என்று வயல்காரன் நினைக்கிறான்.

எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்று அந்த இடத்தைச் சுற்றி ஒடி வந்ததாக கூறினார்கள். பிறகு 200 கல்லை கொண்டு விளக்கு ஏற்ற சிறிய மண்டபமாக கட்ட‌‌யோசித்தேன். மறுநாள் அந்த பெண் சாமியாடி ”நான் அவனுக்கு லட்சம் லட்சமாக வினளவிக்கிறேன், எனக்கு கோயில் கட்டி அபிசேகம் செய்தால் பால் பொங்குவது போல் குடும்பம் சுபிட்சத்தால் ‌‌பொங்கும்என்று கூறினார். கோவில் கட்ட வசூலுக்கு செல்ல வெட்கப்பட்டு என் பொருளாதாரத்துக்கேற்ப 5 அடிக்கு, 5 அடி என்ற கணக்கில் ஓர் சிறிய கோயிலாக கட்டினேன்.
மகன் உருவில் மகமாயி ஆடினாள்
கோயில் திருப்பணியில் ஓர் கொத்தனார், ஓர் சித்தாள், நான் ஆக மூன்று பேர் மட்டும் கட்டுவோம். என் மகன் மகாலிங்கம்17 வயதுடையவன்.ஒரு நாள் எனக்கு காசு கொண்டு வந்து கொடுத்துவிட்டு கோயில் கட்டுமிடத்தில் நின்று கொண்டிருந்தவன் திடி‌‌ரென்று சாமி ஆடினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை! ”நான் தஞ்சாவூர் மகமாயி 20 வருடமாக இந்த புற்றை ஸ்தாபிதமாக்கிக்‌‌கொண்டு இருந்து வருகிறேன்.
நான் வெளிவர வேண்டிய நேரம் வந்து விட்டது. நானே இந்த திருக்கோயிலை உருவாக்கி மக்களுடைய குறைகளை போக்குவேன்.” என்று கூறி பாம்பு போல் நெளிந்து நெளிந்து சுமார் 2 மணி நேரம் ஆடினான். ஆனால், அவனுடைய பழக்கத்திற்கும் அன்று ஆடும் போது பேசும் பேச்சுக்கும் சம்மந்தா சம்மந்தம் இல்லமால்ஓர் ஞான விளக்கமாக‌வே தேன்றியது. உண்மையில் அங்கு கூடும் கூட்டத்தில் சமபாகம் வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்தான்! நான் உள்பட!
அம்பாளின் சக்தி வெளிபடுதல்
ஓரு நாள் பையன் மீது சாமி ஆவாகனம் ஆகி ஆடிக்கொண்டு இருந்த போது சேண்டிருப்பு தெருவைச் சேர்ந்த சிலர் சந்துரு என்பவரை கேள்வி கேட்க சொல்லி அ‌ழைத்து வந்திருந்தார்கள். அவர் கிண்டலாக சில கேள்விகளை கேட்டபொழுது என்னிடம் யாரும் விளையாடாதிர்கள், தவறு செய்தால் முறித்துவிடுவேன் என்று எச்சரித்தது.
எல்லோரும் இதை கேட்டு சிரித்து விட்டார்கள். ஆனால் சிரித்து ஓய்வதற்குள் கேள்வி கேட்டவர் அடிப்பட்ட பாம்பு துடிப்பது போல் துடித்து ஒரு முறுக்கு முறுக்கி மேலெ‌ழுந்து பக்கத்திலிருந்த பள்ளத்தில் விழுந்து பேச்சுமுச்சற்று கிடந்தார். இதை கண்ட அனைவரும் அந்த இடத்தை விட்டு ஒடி விட்‌ டோம். பிறகு எங்களில் ஓருவரை கூப்பிட்டு அவன் நெற்றியில் விபூதி இடுமாறு விபூதி கொடுத்தது. இட்டவுடன் அவன் தூங்கி எழுந்தவன் போன்று உடம்பை தடவிக் ‌‌கொண்டு எ‌ழுந்து வந்தான்.
அன்று முதல் இன்று வர‌ை யாராவது கோயில் சாமியை கிண்டல் செய்தால் அவர்கள் முறிக்கப்படுவது உலகில் எங்கும் காணாத நிக‌ழ்ச்சி. பேய்பிடித்தவர்கள் இங்கு வந்தவுடன் தானாக ஆடி விபரம் கூறுவதும், விபூதி கொடுத்தவுடன் அவர்கள் அதன் பிடியில் இருந்து விடுபடுவதும் பத்து நிமிடங்களில் முடிந்து விடும். அம்பாள் தன் விபூதியாலேயே எத்தனையே பேர்களை பில்லி சூன்யங்களில் இருந்து விடுபட வைக்கிறாள்இதற்காக எந்த கட்டணமோ, அன்பளிப்போ வாங்கக்கூடாது என்பது அம்பாளின் கண்டிப்பான உத்தரவு!
அம்பாள் அடியாருக்கு காட்சியளித்தல்
ஒரு நாள் இரவு என் மகனுக்கு உடல் நலமில்லாமல் கண்கள் நிலையாக நின்று இறந்து வி்ட்டவன் போல் தோன்றினான். வீட்டிலிருந்த அனைவரும் அழுதுக் ‌‌கொண்டிருந்தார்கள்.
நான் மிக்க வேதனையுடன் எங்கள் வீட்டில் ஸ்தாபிதம் செய்வதாற்காக வைத்திருந்த அம்மன் சிலையை கட்டிப் பிடித்து கொண்டு வாயில் வந்ததை‌யெல்லாம் சொல்லி வைதேன்! உடனே எனக்கு அம்பாளின் சுய உருவம் தெரிந்ததுநான் உன் மகனை காப்பாற்றித் தருகி‌றேன் நீ நிம்மதியாக தூங்குஎன்று கூறியது.
சிறிது நேரத்தில் அவன் உடம்பில் அசைவு தெரிந்தது. ஆடியார் அருள் பெற்ற அற்புதம். மறுநாள் முதல் நான் ஏதோ ஒரு சக்தியால் கட்டுண்டவன் போல் இருந்தேன். சிறிது நாள் சென்றவுடன் அருள்வாக்கு சொல்லும் அனுக்கிரகத்தைப் பெற்றேன்! இப்பொழுதும் தேவைப்பட்டால் யாருக்காவது சொல்வதுண்டு. அம்பாளின் விளக்கப்படி ” தெய்வம் அருபமானது, அது யாரை கருவியாகப் பயன்படுத்த வேண்டுமோ அவனை பயன்படுத்தும். அவன் இறந்துவிட்டால் அவன் உடல் அழிந்துவிடும். ஆத்மா வேறு இடத்தில் ஐக்கியமாகி விடும்அவன் படத்தை மாட்டி வழிப்பட்டால் எந்தப் பலனும் கிடையாதுஎன்று விளக்கியது.
காவிரியில் விழுந்த தாலி
குத்தாலம் சர்மான்ய தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவரின் தாயார் காவிரியில் குளிக்கும்போது மாங்கல்யம் தண்ணீரில் விழுந்து விட்டது. அவர்கள் கோயிலில் வந்து அம்பாளிடம் கேட்டப்‌பொழுது அவள் குளித்த இடத்திலிருந்து நான்கடி கிழக்கே கிடக்கிறது என்றாள். அவர்களும் அதன் படி சென்று பார்க்கும் பொழுது முதல் கை மணலிலேயே மாங்கல்யம் கிடைத்தது.
அம்பாள் வா‌ழ்த்திய அதிசய திருமணம்
கடலூர் வெங்கடகப்பன் என்றவர் வீட்டுகல்யாணம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்யாணத்துக்கு இரண்டு வாரம் முன்பாக மாங்கல்யம் கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி அர்ச்சனை செய்து அம்மாவே வந்து கல்யாணத்தை வாழ்த்தி அருள வேண்டு‌மென்று வேண்டினார்கள்.
அம்மாவும் வருவதாக வாக்களித்தாள் வருவதனால் எந்த உருவில் வருவாய் என்று கேட்க, நீ ஏற்றுக் கொள்வதனால் எச்சிலை தின்னும் கன்றாக வருவேன் என்றாள்அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வோம் என்று வாக்களித்ததோடு, எல்லாக்கன்றும் இலையை தின்னும் போது, நீதான் அந்த கன்று என்று எப்படி நாங்கள் தெரிந்துக் கொள்ள முடியும் என்றனர். அதற்கு மணப்பந்தல் வரை வந்து ஆசிர்வதிப்பதாக கூறியனுப்பியது.
சொல்லியபடி அன்று காலை திருமண நேரத்தில் ஓரு கன்று வாசலில் வந்து நின்றது. அவர்கள் வாசல் கதவை திறந்து விட்டு அமைதியாக கவனித்தனர்உட‌ னே அந்த கன்று உள்ளே வந்து நேராக மணவரை வரை சென்று நின்றது. அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு லட்டு, பழம் கெடுத்து கற்பூறம் செய்தனர், அதன் பிறகு அது தானாக திரும்பிச்சென்று விட்டது.
காளிதாஸின் அருள் மொழிக்கு விளக்கம்.
காளிதாஸ் என்பவர், ஒர் பொண்ணுக்கு க‌ணவனை பிரிந்து வாழும் நீ இன்னும் ஒரு வருடத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ்வாய் என்று அருள் கூறினார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் அவள் நான் சொல்படி நடக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள்.
அம்மா இதற்கு காரணம் என்ன என்று கேட்க, ராமன் கால்பட்டுத்தான் விமோசனம் கிடைக்கு‌மென்று இருக்கஅந்தக்கல்லைக் கொண்டு ராமன் காலடியில் போட்டு ராமா இதில் ஏறி நில், உட‌ னே விமோசனம் கிடைக்க வேண்டுமென்றால் முடியாது. ஆது போல் நேரம் வரும் போது நடக்கும். இருவர் மனமும் ஓத்துவரும் சூழ்நிலையை உருவாக்கி நானே அனுப்பிவைப்பேனென்றாள்.
திடீரென்று ஒரு நாள், யார் அந்தப் பெண்னை அடித்து துன்புறுத்தி தாயார் வீட்டுக்கு துரத்தி விட்டாளோ, அ‌தே நாத்தனார் உன் குடும்பத்தை நீ‌யே நடத்து, தனியாக குடும்பம் நடத்த ஏற்பாடு செய்துத் தருகி‌றேன் என்று கடிதம் போட்டு, இப்பொழுது அந்தப் பெண்காயத்திரி என்பவள்  கொடுங்கையூரில் தன் கணவனுடன் மனமொன்றி வசித்து வருகிறாள்.
கும்பகோணம் நீலகண்டன்என்பவர் மனைவி, கணவனை விட்டு பிரிந்து சுமார் 14வருடம் வாழ்ந்த பின் அம்பளை வேண்டியதால் உட‌னே சேர்ந்து வாழும் அற்புதத்தை அம்மா செய்தாள்.
ஊமை பேசிய அதிசியம்
குத்தாலத்திற்கு அருகில் உள்ள ராஜ‌கோபாலபுரத்தில் உள்ள ஒரு அம்மையார் கோவிலுக்கு வந்து தன்னுடைய 8 வயது பெண் பிறவியிலிருந்து ஊமையாய் இருக்கிறாள். அவளுக்கு பேசும் சக்தி வரவேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது வேண்டினார். அந்த குழந்தை நிலைக்கண்டு அம்மா அருள் பாவித்து 15 நாட்களுக்கு அங்க பிரதட்சணம் செய்தால் பேச்சு வரும் என்று கூறியருளினாள்.
அந்த அம்மாவும் அங்ஙனமே தினம் காலையில் அம்பளை வேண்டி அங்க பிரதட்சணம் செய்தார்கள்அதன் முடிவில் திரு. மகாலிங்கத்தின் மீது அருள் வந்து ஊமை பெண்ணின் நாவில் விபூதியை தடவி அம்மா என்று கூறச் சொல்லவும் அந்த பெண்ணும் அம்மா! அம்மா! என்று பேசியது.
அதன் பிறகு படிப்படியாக பேசும் திறமை கூடி தற்சமயம் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறாள். இது‌போல் பலர் பேசும் திறமை பெற்றுள்ள அதிசயம் நடந்துள்ளது.
அம்பாள் கொடுத்த கால்கள்
முள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பழனிசாமி என்பவரின் 10 வயது பெண் தனக்கு ஏற்பட்ட நோய் காரணமாய் இரண்டு காலும் பாதிக்கப்பட்டு நடக்கமுடியவில்லை.எழுந்து நின்றாள் கீழே விழந்து விடுவாள்.
அவளை மருத்துவரிடம் காட்டி இரண்டு முறை அறுவை சிகிக்சை செய்தும் கால் நடக்கமுடியவில்லை. அவளுடைய தந்தை அந்தப் பெண்னை கோவிலுக்கு தூக்கி வந்து குறை நீங்க வேண்டினார். அவர் குரலுக்கு அம்மா மனமிரங்கி 10 நாட்கள் கோவிலை வலம் வந்தால் காலை சுகமாக்கித் தருவதாய் அம்மா அருளியது.
தினமும் அந்தப் பெண் தத்தித்தத்தி கோவிலை வலம் வந்தாள். அப்படி வரும் பொழுது 3 நாளிலே அவள் நடக்கும் சக்தியைப் பெற்று தன்னுடைய வீட்டிலிருந்து கோவிலுக்கு (2 கி.மி) நடந்தே வந்தாள்இந்த அதிசயத்தைக் கண்ணுற்ற பலர் அம்பாளின் அருளை போற்றி வணங்கினார்கள்
.
தடைப்பட்ட திருமணம் நடந்தது!
மயிலாடுதுறையை சேர்ந்த அன்பர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார்.
ஆனால் எந்த வரனும் கைகூடவில்லை. மிகவும் பிரபலமான உள்ள அருள் மேடையி்ல் கூறிய படியும் நடக்கவில்லை. சோதிடரைக் கேட்டால் இன்னும் முன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் நடை பெறும் என்று கூறி விட்டார்.
மிகவும் மனம் சோர்வடைந்த அவர் இங்கு வந்து அம்பாளை வேண்டி திருமணத்தை முடித்துத் தரும்படி பிராத்தித்தார். அம்பாளும் அவர் கோரிக்கைக்கு மனமிரங்கி கோயிலுக்கு 7 வாரம் வந்து விளக்கு போட்டு வந்தால் கல்யாணம் முடியும் என்று அருளியது. முகவரி :
அருள்மிகு மகா முத்துமாரியம்மன் ஆலயம்,
52
வில்லியநல்லுர்,
குத்தாலம்,
சேண்டிருப்பு கிராமம்.
மயிலாடு‌துறை வட்டம்,
நாகை  மாவட்டம்,
தமி‌ழ் நாடு,
இந்தியா.
பின் கேடு   -  609801.
கோயில் போன் நம்பர் : 91 – 04364 – 234351
Mr. Mahalingam. Cell : 919443980608சேண்டிருப்பு முத்து மாரியம்மன் கோவில்
மயிலாடுதுறையில் இருந்து 7 கி,மி, ‌‌தொலைவில் உள்ளது, இதன் அருகில் திருமணஞ்சேரி, குத்தலாம், சூரியனார் கோவில் உள்ளது

thanks:sendhiruppumariyamman.wordpress.com

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...