Tuesday, November 20, 2012

நம் தலையெழுத்தை மாற்றியெழுதும் திருப்பட்டூர் பிரம்மன் ஆலயம்

இங்கு ஜாதகம் வைத்து வழிபடுவது சிறப்பு பிரதோஷ நாட்கள் வழிபாடும்
கையின் பிரச்சினைகளையும் அவர்கள் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் வந்து அதிலிருந்து மீண்டதையும் பலரின் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார்கள் பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.
அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

விகடன் பிரசுரம் இக்கோவிலைப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளது








தினமலரில் வெளிவந்த மற்றொரு கட்டுரை

பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.நன்றி : தினமலர்

Tuesday, October 30, 2012

புலிப்பாணி முனிவர் வரலாறு






இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர்
மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:

ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார்
என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும்
கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி
(தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக
கூறப்படுகிறது
பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர்
புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி
சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை
கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில்
அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது.
போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு
தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது
முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும்
அளித்தார் என்று கூறப்படுகிறது.

இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும்
சொல்லப்பபடுகிறது.அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும்
அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து
தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில்
ஆளையல்லவா கொன்றுவிடும்.என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது.

இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார்.மக்கள் மீது புலிப்பாணிக்கு
இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும்
ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம்
என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம்
சம்பவிக்கும் என்பது உண்மையே.ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு
அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை
பெறும்.மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு
பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில்
அங்கேயே இருக்கும்
அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர்


மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து
பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது.போகர் இறந்த பிறகு
அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை  வழக்கமாக வைத்திருந்தார்.புலிப்பாணியை
மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக
சொல்லப்படுகிறது.இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே
சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.

தியானச் செய்யுள்:
மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

Saturday, October 27, 2012

உங்கள் வாழ்க்கையின் அவயோகங்கள் மாற ஒரு அற்புதமான வழிபாடு



உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்கள்,அவ யோகங்கள் இருந்தாலும் அவைகள் அடியோடு நீங்கி பெரும் செல்வச் செழிப்போடு வாழ ஒரு சுலப வழிபாடு இருக்கிறது.நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலுக்குச் செல்லவேண்டும்.சென்று அங்கு சுப்ரபாத தரிசனம் செய்ய வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் (11 மாதங்கள்) சுப்ரபாத தரிசனம் செய்தால்,பெரும் செல்வ வளத்தின் அதிபதியாகிவிடுவீர்கள்.


இந்த சனிக்கிழமை சுப்ரபாத தரிசனத்தை ஒரு தவமாக,ஒரு யாகமாக,ஒரு லட்சியமாகச் செய்ய வேண்டும்.எப்பேர்ப்பட்ட இடர்ப்பாடுகள் வந்தாலும்,48 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்யும் வரை விடாமல் செய்ய வேண்டும்.






அப்படி திருப்பதிக்கே செல்ல இயலாத,ஆனால் வறுமையிலிருந்து அடியோடு நீங்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ விரும்புவோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.அவர்கள்,தமது வீட்டிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5 மணிக்குள் எழுந்து குளித்து தயாராகிவிடவேண்டும்.5மணிக்கு திருப்பதி வெங்கடாஜபதி படத்திற்கு மாலை அணிவித்து சுப்ரபாத கேசட்டை ஒலிக்கச் செய்ய வேண்டும்.சுப்ரபாத கேசட் ஒலித்து முடியும் வரை திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தின் முன்பாக தியானத்தில் அமர்ந்து மனப்பூர்வமாக நமது தேவை என்ன என்பதை வேண்ட வேண்டும்.சுப்ரபாதம் முடிந்ததும்,திருப்பதி வெங்கடாஜபதிக்கு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.



அதன்பிறகு,வீட்டுக்கு அருகில் இருக்கும் பசுவுக்கு இரண்டு வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும்;வாழைப்பழங்கள் கொடுத்தப்பின்பே,காலை உணவு அருந்த வேண்டும்.இப்படி 48 சனிக்கிழமைகள் செய்தால்,செல்வ வளம்மிக்கவர்களாக மாறுவது உறுதி!

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...