Wednesday, July 27, 2011

ஆடி அமாவாசை



எதிர்வரும் 30.8.2011 சனிக்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது பிதுர் தோஷம் பிதுர்சாபம் முன்னோர்களுக்கு
செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரியாகசெய்யாதோர் ராமேஸ்வரம்,சதுரகிரி,சேதுக்கரை,போன்ற இடங்களில்
சென்று செய்துகொள்ளலாம் ஏன் என்றால் முன்னோர்களின் ஆசிதான் நம்மையும் நம் குடும்பத்தையும் நன்றாக‌
வாழவைக்கும்.

இருப்பிடம் ராமேஸ்வரம்;மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்திலிருந்து 160 கிமீ தூரம் 5 நிமிடத்திற்க்கு ஒரு பஸ்ஹ்
உண்டு

சேதுக்கரை;மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் ஏறி ராமநாதபுரத்தில் இறங்கி அங்கு இருந்து
திருப்புல்லாணி செல்லும் பேருந்தில் செல்லவேண்டும்

சதுரகிரி;மதுரையிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏறி அங்கிருந்து கிருஷ்ணன்கோவில் நிறுத்தத்தில் இறங்கி
அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கு இருந்து மினி பஸ் ஆட்டோ போன்றவற்றில் தாணிப்பாறை அடைந்து
அங்கு இருந்து 7கிமீ மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும்

Wednesday, July 20, 2011

திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதபெருமாள் கோவில்

என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அள்ளி கொஞ்ச ஒரு குழந்தை இல்லாமல் நிறைய‌
பேர் உள்ளனர் இவர்கள் அனைவரும் ராமநாதபுரத்திலிருந்து 8கிமீ தொலைவில் உள்ள திருப்புல்லானி ஆதிஜெகனாதபெருமாள் கோவில் சென்று இங்கு இருக்கும் பெருமாளையும்
பத்மாஸனித்தாயாரையும் வணங்கி காலையில் கோவிலில் படைக்கப்படும் பிரசாதமான‌
பாயாசமும் சாப்பிட்டு விட்டு சென்றால் அந்த பெருமாளின் கருணையினால் கண்டிப்பாக‌
குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்து சரியாகதவர்கள் இங்கு வந்து வணங்கி செல்லலாம்

Tuesday, July 19, 2011

கொளஞ்சியப்பர் திருக்கோவில்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து அருகில் உள்ளது மணவாளநல்லூர் இங்கு  கொளஞ்சியப்பர்
கோவில் உள்ளது கோவிலைச்சுற்றி மூன்று முனிஸ்வரர் காவல் காக்கின்றனர் இவர்கள்தான் மணவாளமா
முனிகள் என அழைக்கப்படுகின்றன இங்கு கொளஞ்சிமரங்கள் முன்பு அதிக அளவில் இருந்ததால் இந்த பெயரில்
அழைக்கப்படுகிறது.இங்கு முருகன் அமர்ந்து அருள்பாலிக்கிறார் எந்த குறை என்றாலும் இங்கு உள்ள கோவிலில்
முருகன் சன்னதியில் ப்ராது கொடுக்கும் முறை இன்றளவும் பிரசித்தம் ப்ராது கொடுப்பவர்களின் பிரச்சினைகளை
உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார் முருகன் ஒரு பேப்பரில் நம் குறைகளை எழுதி முருகனுக்கு பூஜை செய்து நாம்
எழுதிய ப்ராதை கோவிலில் கட்டி தொங்கவிட்டு வந்தால் வீடு வருவதற்க்கு முன்பு கூட நம் பிரச்சினையை
முருகன் தீர்த்து வைக்கிறார்

Thursday, July 14, 2011

கோட்டைபிடாரி அம்மன் மருதாந்தை கிராமம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் மருதாந்தை கிராமம் அமைந்துள்ளது
இங்கு அமர்ந்து அருள்பாளிக்கிறாள் இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் இந்த கோவிலில் பிராமணபெரியவர்
ஒருவர் (பார்ப்பதற்க்கு காஞ்சி பெரியவர் போலவே இருப்பார்)மக்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார் கடும் மாந்த்ரீகம்
பேய் பிசாசு போன்றவைகளுக்கு அம்பாளின் அருளால் உடனே தீர்த்து வைக்கிறார் மனதுக்கு மிகவும் அமைதியான‌
கோவில் .அந்தபெரியவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் தட்சிணை வாங்கமாட்டார். வியாழக்கிழமை மட்டும்
தான் அருள்வாக்கு சொல்வார் ஒருவர் சென்றவுடனே ச்ரியாக சொல்லிவிடுவார் இவரின் பேச்சும் செயலும் காஞ்சி
பெரியவரை நினைவுபடுத்தும்
குறிப்பு வியாழன் மற்றும் வெள்ளி மட்டுமே கோவில் நடை திறக்கப்படும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...