Skip to main content

பெருகிவரும் குற்றங்களும் குறைந்து வரும் ஜீவகாருண்யமும்

தற்போது எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,கள்ளக்காதல்,அரா
ஜகசெயல்கள்
அதிகமாகிவிட்டன அரசும் என்னதான்
சட்டதிட்டம் போட்டாலும் இவற்றையெல்லாம் ஒழிக்கவே முடியவில்லை.காம
உணர்ச்சிகள் அளவோடு இல்லாமல்
பேருந்தில்வைத்து மாணவியை கொடூரமாக கற்பழிக்கும் அளவிற்க்கு
சென்றுவிட்டது.இலைதழைகளை அணிந்து கிடைக்கும் விலங்குகளை அடித்து
சாப்பிட்டவன் ஆதி மனிதன்.தற்போது அதிபயங்கரமான விஞ்ஞான வளர்ச்சியில்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் விஞ்ஞான வளர்ச்சிக்காக நாம்
சந்தோஷப்பட்டாலும் மேலே சொன்ன மிருக உணர்ச்சிகளோடுதான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் விஞ்ஞானம் வளர்ந்து என்ன செய்வது.ஒரு பத்து
இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த அமைதியான வாழ்வு தற்போது
கிடையாது.எப்போதும் குழந்தைகளை கம்ப்யூட்டருடனும் வீடியோ
கேம்களுடனும்விட்டுவிடுகிறார்கள் பெற்றோர்கள்.செல்போன் கள் வேறு
மிச்சமிருக்கிற கலாச்சாரத்தையும்
கெடுத்துகொண்டிருக்கின்றன.குழந்தைகளை நல்ல மனிதர்களாக வளர்க்கும்
பொறுப்பு பெற்றோருக்குத்தான் அதிகம் உண்டு இப்போதிருக்கும் பெற்றோர்
பலருக்கு அவை இருப்பதாக தெரியவில்லை.ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி
எங்கே பாடு என்று அம்மா சொல்கிறார் இரண்டு வயதுதான் இருக்கும் மகனுக்கு.
கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்துல இவளை போல இன்னொருத்தி
பொறந்ததில்ல என்று பாடுகிறான் என்னவிதமான அர்த்தம் என்று தெரியாமலே
இதுபோன்ற பாடல்களைபாடுகிறார்கள்பெற்றோர்களும் ஊக்கப்படுத்துகிறார்கள்
நாளை அந்தகுழந்தை எப்படி வளரும்.இப்போதிருக்கும் பெற்றோர்களில் எத்தனை
பேர் குழந்தைகளை கதை சொல்லி தூங்கவைக்கிறார்கள் என்றால் விரல்விட்டு
எண்ணிவிடலாம்.பஞ்ச்தந்திரகதைகள்,ஈசாப் நீதிக்கதைகள்,தெனாலிராமன்
கதைகள்,மரியாதை ராமன் கதைகள்
முல்லா கதைகள் எல்லாம் எத்தனை பெற்றோருக்கு தெரியும்.சிறுவர்களுக்காகவே
வந்த காமிக்ஸ் புத்தகங்களும்
அம்புலிமாமா போன்ற புத்தகங்களும் இப்போது வருவதாகவே தெரியவில்லை.மனிதனின்
மனமாற்றத்திற்க்கும் கோபத்திற்க்கும் வேறு சில கொடூரமான காரியங்களுக்கும்
முக்கியகாரணம் சினிமா என்பது மறுக்கமுடியாத உண்மை.பல வருடங்களுக்கு
முன்பு வந்த பாசமலர்,பாவமன்னிப்பு,உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும் போன்ற
கருத்தாழமிக்க பல படங்கள் வந்தன.இன்று வரும் பெரும்பான்மையான படங்கள்
வணிக நோக்கில்
அதிக வன்முறையுடன் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரை பரபர
தடதடவென இருக்கவேண்டும் என்றவணிக நோக்கில் எடுக்கப்படுகிறது.

சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகமாதலால் இதைப்பார்த்து அப்படியே
வன்முறையாளராக வளர்ந்து விடுகின்றனர் இதனால்தான் சென்னையில் ஒரு ஆசிரியை
மாணவனால் கொல்லப்பட்டு
இறந்தார்.விருது நகரிலும் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்தினான்
சினிமா டிராமா என அதிகம் சுத்தாமல்
வீட்டில் இருக்கும் பெண்களும் சீரியல்கள் பார்த்து கெட்டுப்போகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட உணவுப்பழக்க வழக்கங்கள் முக்கியமானவையாக உள்ளன
காய்கறிகளில் இல்லாத சத்துக்களே கிடையாது.எல்லா காய்கறிகளிலும் உடலுக்கு
தேவையான அனைத்து விட்டமின் களும் உள்ளன அசைவ உணவு உடலுக்கு பலம்
என்றாலும் நம் கோபத்தை தூண்டிவிடும் பலவீனமும் அதுதான் காவல்துறை எஸ்.ஐ
கொலை,தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் போன்றவைக்கும் மனிதர்களின் மனதில்
ஏற்படும் மிருக உணர்ச்சிதான் காரணம்
உடல் பலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லோரும் விஜேந்தர் சிங் ஆகவோ
சுஷில்குமார் ஆகவோ ஆக முடியாது.

இருபது வருடங்களுக்கு முன்பு இவ்வளவு பிராய்லர் கடைகள் கிடையாது
பல்வேறுவிதமான வளர்ச்சியின் காரணமாக இன்று மூலைக்கு மூலை
கோழிக்கறிக்கடைகள் பெருகிவிட்டன மின்சாரம் மூலம் செயற்கையாக
உருவாக்கப்பட்ட கோழிகளே தற்போது பெரும்பாலான கடைகளில் விற்பனையில் உள்ளது
ஒரு காலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைதான் என்ற நிலை போய்
தற்போது எல்லாம் நினைத்தவுடன் குறைந்த விலையில் பிராய்லர் கோழி இறைச்சி
கிடைக்கிறது.இதுபோல ஆடு மாடுகளுக்கும் இதே கதிதான்.அடி மாடுகள் என்று
சொல்லக்கூடிய நோயுற்ற மாடுகளை மொத்தமாக லாரிகளில் ஏற்றி நிற்கக்கூட
இடமில்லாமல் கொண்டு செல்கின்றனர் போகும் வழியிலேயே மாடுகள் நெருக்கடியில்
சில மாடுகள் இறந்துவிடுகின்றன இதை எதற்கு சொல்கிறேன் என்றால் யானையை
புத்துணர்வுமுகாமுக்கு
கொண்டு செல்வது கூடாது சொல்லும் சமூக ஆர்வலர்கள் இந்த அவலத்தையெல்லாம
கண்டு கொள்வதில்லை.இதை விட பெரிய அவலம் என்னவென்றால் நோயுற்ற மாடுகளை
லாரிகளில் இருந்து இறக்குகிறேன் என்று லாரிகளில் இருந்து
ஈவிரக்கமில்லாத மனிதர்கள்
தூக்கி வீசுவது அந்த மாடு கதறுவது பார்க்க கூட முடியாத கொடுமை இது
தினமும் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடக்கும் சம்பவம் அரசு
சம்பந்தப்பட்ட பிராணிகள் நல வாரியம் இதையெல்லாம் கண்டும் காணாமல்
இருப்பது ஏன் என்று தெரியவில்லை.இப்படிப்பட்ட இறைச்சியை நாம் ஏன் விருப்ப
உணவாக ஆர்வமுடன் சாப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை.தென் மாவட்டங்களில்
கல்யாணம்,சடங்குகள்,இறந்த வீட்டின் காரியங்கள் முடிந்த மறு நாள்
போன்றவைகளில் கறி விருந்து இடம்பெறவில்லையானால் அதை நடத்துபவ்ர்
பலரிடம்வசை சொற்களை வாங்கி கட்டிக்கொள்வார்.இப்படி மனிதனுக்குள்
மிருககுணத்தை விதைப்பதிலும் காமம் குரோதம் ,விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல
குணங்களை குறைப்பதில் அசைவ உணவு முக்கிய பங்கு வகிக்கிறதுசமுதாயத்தில்
குற்றச்செயல்கள் அதிகரிக்க மதுவும் மாமிசம் மட்டுமே போதும் இந்த இரண்டு
கடைகளும்தான் தற்போது எங்கும் அதிகம் இருக்கின்றன.பொதுவாக குழந்தைகள்
காய்கறிகளை விரும்புவது கிடையாது இதை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு
சிக்கன் ப்ரைடு ரைஸ்,சிக்கன் நூடுல்ஸ்,உணவுகளை அதிகம்
கொடுக்கின்றனர்.விடுமுறை நாட்களில் தன் பிள்ளைகள் இன்றுதான் வீட்டில்
இருக்கின்றனர் என்று நினைத்துக்கொண்டு
ஆடு,கோழி என விருந்து வைத்து அசத்துகின்றனர்.இவை குழந்தைகள் மனதில்
வன்மம்,கோபம்,பொறாமை வளர முக்கிய காரணம் ஆகும்.

என் மகன் சிக்கன் 65தான் விரும்பி சாப்பிடுவான் என்று பெருமையாக
கூறிக்கொள்ளும் தாய்மார்களே அதிகம் .அறிவு
உணர்ச்சிதான் நம்மை மேலும் மெருகேற்றும் வெறும் உடல் வலிமையை
வைத்துக்கொண்டு ரவுடியாகத்தான் மாறமுடியும் உடல் வலிமை,மனவலிமை,நல்லறிவு
கிடைப்பதற்க்கு சரியான தீர்வு காய்கறிகள்தான்.திருவரங்கத்தில் இருந்து
திரும்பும் வழியில் ஒரு இறைச்சிக்கடையை பார்த்தேன் கடையின் பெயர் அன்பு
மட்டன் ஸ்டால்.அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இல்லாமல் வைத்த பெயர்தான் இது.அன்பே இல்லாமல் ஒரு
உயிரைப்பறித்து விட்டு க்டைக்கு பெயர் அன்பு மட்டன் ஸ்டாலாம்.


  அசைவ உணவுகளை குறைத்து காய்கறிகள் அதிகம் சாப்பிட்டு கோப தாபமின்றி
அமைதியான நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்

Comments

  1. கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2