Tuesday, April 17, 2012

கோவிலுக்கு வருபவர்களுக்கு மயில்தோகை மூலம் சாமரம் வீசும் முதியவர்

படத்தில் இருப்பவர் பெயர் நடராஜன் என்பதாகும்.வயது 82இவர் கோவில்களில் மயிலிறகை வைத்து வந்துள்ள பக்தர்களுக்கு சாமரம் வீசுகிறார்.இவரிடம் பிள்ளையார்பட்டி கோவிலில் முதல் முதல் சாமரக்காத்து வாங்கினேன் பக்தர்களாக பார்த்து பிரியப்பட்டு கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்கிறார்.இவர் 12 வயதில் இருந்து இப்படி சாமரம் வீசி வருகிறார்.ஒரு முறை கோவிலில் விசிறி வைத்து வீசும் ஒரு முதியவர் வராததால் தான் இப்படி ஒரு மயில்தோகை விசிறி தயார்செய்து வீசி வருவதாக கூறுகிறார்.அம்பானி முதல் அத்வானி வரை பல பிரபலங்களுக்கு சாமரம் வீசி அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்காந்தி,நேரு,போன்றவர்களுக்கும் வீசியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவரை அடிக்கடி இவரை பார்க்கலாம்.10 வருடங்கள் மீனாட்சி கோவிலிலேயே வீசியவர்.திங்கள் செவ்வாய்களில் திருப்பரங்குன்றத்திலும், புதன்கிழமை பழனி,
வியாழன் திருச்செந்தூர்,வெள்ளி மற்றும் ஞாயிறு மீனாட்சி அம்மன் கோவில் சனிக்கிழமை திருச்செந்தூர்,அமாவாசையன்று ராமேஸ்வரத்திலும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையிலும் இவர் மயில் சாமரம் வீச வந்து விடுகிறார் என் உயிர் இருக்கும்வரை இந்த வேலையை செய்வேன் கடவுள் கிருபையால் நன்றாக இருக்கிறேன் என்கிறார்.இவரின் தெய்வசேவை போற்றுதலுக்குரியது.இவர் 5 ராமேஸ்வரம் கோவில் கும்பாபிசேகத்தையும்
5 மீனாட்சி கோவில் கும்பாபிசேகத்தையும் பார்த்தாக சொல்கிறார்.இவர் போல மனிதர்களால்தான் கொஞ்சமாவது நல்ல மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.

1 comment:

  1. இவரின் தெய்வசேவை போற்றுதலுக்குரியது.

    ReplyDelete

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...