Skip to main content

கோவிலுக்கு செல்பவர்கள் ஆன்மிக அன்பர்கள் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான பதிவு

கோவில் நமக்கு எவ்வாறு புத்துணர்வு தருகிறது

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள் அப்படியென்றால் தெய்வம் கோவிலில் மட்டும்தான் குடியிருக்கிறதா என்று கேட்பவர்கள் உண்டு.கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை.கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லாம்.சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோவில்கள்.பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாக பாயும் இடத்தின் அமைகின்றன ஊர்க்கோடியிலோ,ஊர் நடுவிலோ,மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக்காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான் இந்த உயர்காந்த அலைகள் அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பகிரகம் அமைக்கப்படுகிறது.அதனால்தான் கர்ப்பகிரகத்தில் மூல விக்கிரகத்தில் அடியில் யந்திரங்கள் பதித்தார்கள்.சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்.பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப்பாய்ச்சுகிறது.இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தை கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகபடுத்துகின்றனர்.கர்ப்பகிருகத்தை பிரதட்சணமாக சுற்றும் பக்தர்களின் உடலில் தானாகவே இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது இந்த சக்தி பூரணமாக பக்தர்களை சென்றடைவதற்காகவும் மூலஸ்தானம் மூன்றுபக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது.இதனால் கர்ப்பகிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்தசக்தி முழுதாக பாயமுடிகிறது மூலஸ்தானத்தின் ஏற்றப்படும் விளக்குகள் உஷ்ண சக்தியை வெளிச்சசக்தியை பாய்ச்சுகிறது கோயிலில் ஒலிக்கும் மணிச்சத்தமும் பூஜை மந்திரங்களும் நல்ல எனர்ஜியை தருகிறது
கற்பூரத்தின் மணமும் கடவுளுக்கு சூடும் மலர்களின் மணமும் ரசாயன சக்தியை தருகிறது இவை காந்த சக்தியுடன் இணைந்து பக்தர்களுக்கு மிக உன்னதமான சக்திகளை அளிக்கிறது.கோயில் கர்ப்பகிருக பூஜை சாமான்களை பாருங்கள் செம்பினாலான செம்பு கலந்த பாத்திரங்கள் ஆகவே உள்ளன காந்த சக்தி விரைவாக பாய்வதற்க்கு இந்த பாத்திரங்களும் உதவிபுரிகின்றன பூஜை முடிந்ததும் பக்தர்களுகு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய்,துளசி,கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன.இந்தப்பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால் தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது.பெருமாள் கோவிலில் மஞ்சளும் குருவாயூரப்பன் கோயில் சந்தனமும் சிவன்கோவில் திருநீறும் அம்மன் கோவில் குங்குமமும் பிரசாதாமாக கொடுக்கப்படுகின்றன.இவை எல்லாமே மருத்துவகுணமுடையவை

பெருமாள் கோவிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைகற்பூரம் உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால் செப்டிக் ஆகாமல் இருப்பதற்க்கு தடவுவோமே பென்சாயின் அது இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது

கர்ப்பகிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளை பெற்றுக்கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.பொதுவாக பெண்கள் அணியும் தங்கநகைகள் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி கிடைக்கிறது

கோவிலை 11 முறை 108 முறை என்று அவரவர் தேக செளகரியத்துக்கு ஏற்ப பிரதட்சணம் செய்யும்போது நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது.அந்தக்காலத்தில் கோவிலுக்கு சென்று பிரதட்சணம் செய்ததாலே சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பெருமளவில் குறைந்தன.சுலோகங்களும் வேத கோஷமும் கேட்கும்போது இன்னும் மனது வலுவடைகிறது

அந்த காலத்தில் கோவில் சமுதாயக்கூடங்களாகவும் நாட்டியம் .சங்கீதம் இலக்கியம் போன்ற கலைகளை போன்ற கலைகளை ஊக்குவிக்கும் கலைக்கூடங்களாக இருந்தன கோவில் என்பது ஒரு இடம் மட்டுமல்ல ஒரு இன்ஸ்டியூசனும் கூட.

நன்றி

திரிசக்தி மாத இதழ் ராஜரிஷி எழுதிய சொன்னது நம்மாளு


Comments

  1. அற்புதமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2