Wednesday, November 30, 2011

சிவன் வானில் தோன்றும் காட்சி



தமிழ்நாட்டின் கோவில்கள் அதிகம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த வீடியோ வீடியோ தரம் தெளிவாக இல்லாவிட்டாலும் யூ ட்யூப்பில் பரபரப்பாக பார்க்கப்படும்
வீடியோவாக இது உள்ளது சிவனின் கண்கள் உலகத்தை பார்ப்பது போல் அமைந்துள்ளது
இந்த வீடியோ.

Tuesday, November 29, 2011

முருகப்பெருமான் கூறும் பூர்வஜென்ம கர்மாக்கள்



சென்றவாரம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டதால் தொடர்ந்து பதிவிடமுடியவில்லை .சிலநாட்களுக்கு முன் இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தபொழுது
நர்மதா பதிப்பகம் வெளியிட்ட ஆவியுலகக்கடவுள் முருகனுடன் ஒரு அட்வகேட்டின் அனுபவங்கள் என்ற நூலைப்பார்க்கமுடிந்தது.இலவச தரவிரக்கம் இந்தபுத்தகத்திற்க்கு கிடையாது காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும்.இந்தபுத்தகத்தை வாங்கியே ஆகவேண்டும்
என்று எங்கள் ஊர் ராமநாதபுரத்தில் உள்ளபுத்தககடையில் சென்றுகேட்டேன் அங்கு அந்த புத்தகம்
இல்லை ஆர்டர் கொடுங்கள் ஒருவாரத்தில் வாங்கித்தருகிறேன் என்று கடையில் கூறியதால்
ஆர்டர்கொடுத்துவிட்டுவந்தேன்.சென்றவாரம் திருவண்ணாமலை செல்வதற்காக சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸை பிடிப்பதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது
ஒரு அழைப்புவந்தது.நீங்கள் கேட்டபுத்தகம் வந்துவிட்டது வந்துவாங்கிகொள்ளுங்கள் என்று
புத்தககடையில் இருந்து கூப்பிட்டார்கள்.ரயில்வருவதற்க்கு ஒருமணிநேரம் இருந்தது.புத்தகத்தை வாங்கிவிட்டால் ரயிலில் படித்துக்கொண்டே செல்லலாம் என்றெண்ணி
புத்தகத்தை வாங்கசென்றுவிட்டேன் பத்து நிமிடத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு ரயில்நிலையம்
வந்தேன் ரயில்வந்தவுடன் ஏறிஉட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே சென்றேன் .முருகப்பெருமானின் அதிசயங்களை வரலாற்றில்தான் கேட்டிருக்கிறோம்.ஆனால் முருகப்பெருமான் நேரடியாகவந்து பேசி அருள்வாக்கு சொன்னவற்றையும்.அவரிடம் பிரச்னைக்கு காரணம் கேட்கும் மனிதர்களிடம் அவரின் கர்மாக்களை கூறுகிறார் படிக்க படிக்க
பரவசமாகவும் அதிசயமாகவும் இருந்தது.எதோ மர்மநாவலைபடிப்பது போன்று விறுவிறுப்பாக‌
சென்றதால் விடிந்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததே தெரியவில்லை கடவுள் மீது வெறுப்பில் உள்ளவர்கள்,கடவுள் மீது அரைகுறை நம்பிக்கையுள்ளவர்கள் என அனைவரும்
படிக்கவேண்டிய புத்தகம் பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படித்தவர்கள் படித்தால்
நூற்றுக்கு நூறு கடவுளை நம்பிவிடுவார்கள்.இந்த புத்தகத்தை எழுதியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வக்கீல் ஞானவேல் என்பவர் ஆவார் இவர் ஆவியுலகக்கடவுள் முருகனிடம் அற்புதமாக பேசி நம் முன் ஜென்ம கர்மாக்களையும் அதனால் நாம் இப்பிறவியில்
கஷ்டப்படுவதையும் அதற்க்கு முருகப்பெருமான் கூறும் காரணங்களையும் செய்யவேண்டிய‌
பரிகாரங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த இமேஜை க்ளிக் செய்து ஒரு சிறு பகுதியை மட்டும் படிக்க‌
புத்தகம் வேண்டுவோர் நர்மதா பதிப்பகம் சென்னையில் வாங்கலாம் வி.பி.பியிலும் வாங்கலாம்
குறிப்பு; இமேஜை ரைட் கிளிக் செய்து சேவ் இமேஜ் அஸ் செய்து ஜூம் செய்து படிக்கவும்


Sunday, November 20, 2011

ராகவேந்திர சுவாமிகளின் ஆவி

வள்ளிமலை முருகன்


கோவில் கிரிவலப்பாதையில்

பாம்பன் சுவாமிகள் அவர்களின் ஆன்மா தோன்றிய புகைப்படத்தை பார்த்து

பரவசமுற்றேன் .இதை பார்த்தவுடன்

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தில் உள்ள சில தெய்வீக ஆன்மாக்களை

பற்றி பகிர்ந்து கொள்ளவேண்டும்

என்று ஆசைப்பட்டு இதை எழுதுகிறேன்.







ராகவேந்திர சுவாமிகள் சமாதி அடைந்துள்ள மந்திராலயத்தையும் அதனை சார்ந்த

இடத்தையும் திரும்ப‌

பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தாமஸ் மன்றோ என்ற ஆங்கில கவர்னரை

அனுப்பியது .மன்றோ

பிருந்தாவனத்தை நெருங்கியதும் அவர் எதிரே ராகவேந்திரசுவாமிகள் ஆவியுடலில்

வெளிப்பட்டார்

சில நிமிடங்கள் மன்றோவுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் இந்தசம்பவம் மன்றோவின் மனதை

மாற்றிவிட்டது ராகவேந்திரசுவாமிகள் ஆவி வடிவில் காட்சி அளித்ததை அவரே

தன் கைப்பட எழுதி

வைத்துள்ளார்



அன்வாரிமாதவராவ் என்ற முன்னாள் எம்.பி ஒரு சமயம் அமெரிக்காவில்

நியுயார்க் நகரில் தங்கி இருந்தபோது

அவருக்கு மார்புவலிகண்டது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்

பிழைக்கமாட்டார் என்று முடிவு செய்து

விட்டனர்.இப்படி கைவிடப்பட்ட கேஸ்களை ஒதுக்கிவைத்து ஒரு அறையில்

போட்டுவிடுவார்கள்.இவரது

உடலும் அவ்வாறு கிடத்தப்பட்டது.நள்ளிரவில் கண்விழித்த மாதவராவ் தாம்

பிணங்களின் நடுவே இருப்பது

கண்டு அதிர்ச்சி அடைந்தார் துக்கம் தாங்காமல் ராகவேந்திர சுவாமிகளை

நினைத்து பிரார்த்தித்தார்.பாதுகைகளின்

ஒளி கேட்டு நிமிரந்த மாதவராவ் தன் முன்னே ராகவேந்திரர் நேரில் வருவதை

கண்டு மகிழ்ச்சி அடைந்தார்

சுவாமிகள் அவரது உடலை மூன்று முறை தடவி கொடுத்து நோய் குணமாகி விடும் என்று சொல்லி

அபயம் அளித்துவிட்டு மறைந்துவிட்டார்.மறுநாள் அறையில் ஆரோக்கியமான நிலையில் இருந்த‌

இவரை பார்த்துவிட்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர் இந்த விஷயத்தை இன்றும் நோய்

தீர்த்த தென்னிந்திய மகான் என்ற தலைப்பில் மருத்துவமனை பதிவேட்டில்

எழுதிவைத்துள்ளனர்.

THANKS;NARMADHA PIRASURAM AVIGALUDAN NANGAl

BOOK.

Thursday, November 17, 2011

அதிசயங்களை நிகழ்த்தும் மதுரை பாண்டி கோவில்



மதுரை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சிஅம்மன் கோவில் அதையும்
தாண்டினால் அழகர்கோவில் அதையும் தாண்டி மதுரைக்கு புகழ்சேர்க்கும் கோவில் பாண்டி முனீஸ்வரர் கோவில்.



. பாண்டியமன்னன் நெடுஞ்செழியன்  இங்கே முனியாக மாறி நின்றுவிட்டதாகவும்  அங்கேயே தமக்கு கோவில் அமைத்து மக்களை காக்க‌
வகைசெய்யவேண்டும் என்று கோரியது.அதே இடத்தில் கோவில் அமைக்கப்பட்டு இன்றளவும்
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களான திண்டுக்கல்,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,தேனி மாவட்டங்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.தங்கள் குலதெய்வம் அறிய முடியாதவர்கள் இவரையே குல தெய்வமாக வணங்குகின்றனர்.எல்லா நாட்களும் இங்கு உள்ள‌
மண்டபங்கள்.தங்குமிடங்கள் நிறைந்தே காணப்படுகின்றன.முகூர்த்தநாட்களில் ட்ராபிக் ஜாம் ஆகி விடும் அளவிற்கு இங்கு கூட்டம் கூடும்.
கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில்பஞ்சம் பிழைப்பதற்காக  முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

சிறப்புகள்: ஏற்கனவே கூறியபடி இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்மமுனீஸ்வரராக‌
இருந்து ஆட்சி புரிகிறார் அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமல்லாது
அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை
நடத்துவார்.இப்பொழுதும் அதிகம் பேர் இவரை நேரில் பார்த்துஇருப்பதாக சொல்கிறார்கள் வயதானவர் வேடத்தில்தான் இவர் அதிகம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர் துயரங்களோடு
வரும் உண்மையான பக்தர்களுக்கு இவர் வெறும் சிலையாக மட்டுமல்லாமல் நேரிலே வந்து
பிரச்சினைகளை தீர்த்துவைப்பவர்.இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால்
வெற்றிநிச்சயம்.

இரவு நேரத்தில் இவ்வழியாக வந்த ஒருவரின் வண்டி ஏதோ ஒரு காரணத்தால் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது.அவரும் அதிக நேரம் முயற்சி செய்துவிட்டு சோர்வடைந்து விட்டார்
அந்த நேரத்தில் இங்கு வந்த ஒரு வயதான பெரியவர் என்னப்பா வண்டி ஸ்டார்ட் ஆகலையா
என கேட்டிருக்கிறார் ஆம் என இவர் சொல்ல வண்டிச்சாவியை கீழே போட்டு எடு என சொல்லி
இருக்கிறார் வண்டிச்சாவியை மண்ணில் போட்டு எடுப்பதற்குள் அவரை காணவில்லை
இப்பொழுது வண்டி எந்த சேட்டையும் பண்ணாமல் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது  இது போல பல‌
அதிசயங்களை தினமும் நிகழ்த்திகொண்டிருக்கிறார்.இன்றும் கரூரில் இருந்து வந்தவர்களின்
வம்சாவழிகளே கோவிலில் பூஜை செய்கின்றனர்,இந்தகோவிலுக்கு ஒருமுறை சென்று உங்கள் மனபாரங்களை கொட்டுங்கள் உங்கள் துயரங்களில் இருந்து உங்களை நிச்சயம் அந்த‌
பாண்டிமுனீஸ்வரர் காப்பார்

செல்லுமிடம்:மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம்,திருநெல்வேலி செல்லும் பாதையில் இந்த கோவில் உள்ளது. ஆட்டோவில்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்றால் 50 ரூபாய் கேட்பார்கள்

Wednesday, November 16, 2011

பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில் தோன்றும் காட்சி



வழக்கக்கம்போல் மீண்டுமொரு அதிசயசெய்தியை தருகிறேன் கடவுள் இருக்கிறார் என்பதை
நிரூபிக்கும் அற்புதங்கள் ஏராளம் நடந்துவரத்தான் செய்கிறது.முருகன் மீது பல பாடல்கள் பாடியவரும் 85 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில்
தோன்றியதைத்தான் கீழே பார்க்கிறிர்கள்.  நண்பர் ரிஷி அவர்கள் லைவிங் எக்ஸ்ட்ராவில் இது பற்றி ஒருகட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள் அதைப்பார்ப்பதற்க்கு இங்கு சொடுக்குக‌

Tuesday, November 15, 2011

யாகத்தில் தெரியும் வராஹி அம்மன் உருவம்






காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர்ணமிதோறும் நடத்தும் யாகம்
இப்பகுதியில் பிரசித்தம் இவர் கோரக்கசித்தரின் அருள்கொண்டு இந்த யாகத்தை நடத்துகிறார்
இந்த யாகத்தீயில் எல்லா தெய்வங்களும் எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது.குறிப்பாக வராஹி
அம்மன் உருவம் எழுந்தருளியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்கள்
எவ்வளவு கடுமையான தோஷக்குறைபாடு உள்ளவர்களும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.முதலில் முன் அனுமதி பெற வேண்டும் இதற்கென பிரத்யேகமாக உள்ள வெப்சைட் லிங்குக்கு இங்கு சொடுக்குக

Monday, November 14, 2011

பிரதோஷ நேரத்தில் அம்மா என்றைழைத்த நந்தி



பரந்து விரிந்த இந்த உலகத்தில் ஆன்மிக அதிசயங்களுக்கு பஞ்சமில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படிப்பட்ட அதிசயங்களுள் ஒன்றுதான் தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகேயுள்ள அழகிய பொன்னாக்குடி
என்ற ஆலயம்.இங்கு சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.இந்த கோவில்
வழியாகத்தான் நாம் தெய்வமாக கும்பிடும் பசுவை கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு
செல்வது வேதனைக்குறியது.இதைப்பார்க்காமல் இந்த கோவிலில் இருக்கும் நந்திக்கே மனது
பொறுக்கவில்லையோ என்னவோ கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி நடந்த சனிப்பிரதோஷத்தின் போது அம்மா என்று இந்த கோவிலில் உள்ள நந்திவாய்விட்டு கத்தியதாக இங்குள்ள மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் .இப்போது அந்த கோவில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.இந்த கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
திருப்பணிக்கு உதவுபவர்களும் மேலும் இந்த கோவில் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் இங்கு சொடுக்குக அடுத்த லிங்குக்கு இங்கு சொடுக்குக‌
யாகத்தில் தெரிந்த நந்தி பற்றி அடுத்து ஒரு பதிவில் பார்ப்போம்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...