Skip to main content

முருகப்பெருமான் கூறும் பூர்வஜென்ம கர்மாக்கள்சென்றவாரம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டதால் தொடர்ந்து பதிவிடமுடியவில்லை .சிலநாட்களுக்கு முன் இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தபொழுது
நர்மதா பதிப்பகம் வெளியிட்ட ஆவியுலகக்கடவுள் முருகனுடன் ஒரு அட்வகேட்டின் அனுபவங்கள் என்ற நூலைப்பார்க்கமுடிந்தது.இலவச தரவிரக்கம் இந்தபுத்தகத்திற்க்கு கிடையாது காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும்.இந்தபுத்தகத்தை வாங்கியே ஆகவேண்டும்
என்று எங்கள் ஊர் ராமநாதபுரத்தில் உள்ளபுத்தககடையில் சென்றுகேட்டேன் அங்கு அந்த புத்தகம்
இல்லை ஆர்டர் கொடுங்கள் ஒருவாரத்தில் வாங்கித்தருகிறேன் என்று கடையில் கூறியதால்
ஆர்டர்கொடுத்துவிட்டுவந்தேன்.சென்றவாரம் திருவண்ணாமலை செல்வதற்காக சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸை பிடிப்பதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது
ஒரு அழைப்புவந்தது.நீங்கள் கேட்டபுத்தகம் வந்துவிட்டது வந்துவாங்கிகொள்ளுங்கள் என்று
புத்தககடையில் இருந்து கூப்பிட்டார்கள்.ரயில்வருவதற்க்கு ஒருமணிநேரம் இருந்தது.புத்தகத்தை வாங்கிவிட்டால் ரயிலில் படித்துக்கொண்டே செல்லலாம் என்றெண்ணி
புத்தகத்தை வாங்கசென்றுவிட்டேன் பத்து நிமிடத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு ரயில்நிலையம்
வந்தேன் ரயில்வந்தவுடன் ஏறிஉட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே சென்றேன் .முருகப்பெருமானின் அதிசயங்களை வரலாற்றில்தான் கேட்டிருக்கிறோம்.ஆனால் முருகப்பெருமான் நேரடியாகவந்து பேசி அருள்வாக்கு சொன்னவற்றையும்.அவரிடம் பிரச்னைக்கு காரணம் கேட்கும் மனிதர்களிடம் அவரின் கர்மாக்களை கூறுகிறார் படிக்க படிக்க
பரவசமாகவும் அதிசயமாகவும் இருந்தது.எதோ மர்மநாவலைபடிப்பது போன்று விறுவிறுப்பாக‌
சென்றதால் விடிந்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததே தெரியவில்லை கடவுள் மீது வெறுப்பில் உள்ளவர்கள்,கடவுள் மீது அரைகுறை நம்பிக்கையுள்ளவர்கள் என அனைவரும்
படிக்கவேண்டிய புத்தகம் பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படித்தவர்கள் படித்தால்
நூற்றுக்கு நூறு கடவுளை நம்பிவிடுவார்கள்.இந்த புத்தகத்தை எழுதியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வக்கீல் ஞானவேல் என்பவர் ஆவார் இவர் ஆவியுலகக்கடவுள் முருகனிடம் அற்புதமாக பேசி நம் முன் ஜென்ம கர்மாக்களையும் அதனால் நாம் இப்பிறவியில்
கஷ்டப்படுவதையும் அதற்க்கு முருகப்பெருமான் கூறும் காரணங்களையும் செய்யவேண்டிய‌
பரிகாரங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த இமேஜை க்ளிக் செய்து ஒரு சிறு பகுதியை மட்டும் படிக்க‌
புத்தகம் வேண்டுவோர் நர்மதா பதிப்பகம் சென்னையில் வாங்கலாம் வி.பி.பியிலும் வாங்கலாம்
குறிப்பு; இமேஜை ரைட் கிளிக் செய்து சேவ் இமேஜ் அஸ் செய்து ஜூம் செய்து படிக்கவும்


Comments

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2