Skip to main content

உத்திரகோசமங்கைஇந்த கோவிலில் மங்களநாதர்,மங்களாம்பிகையும் காட்சியளிக்கின்றனர் பிரதோஷத்தன்று
இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.சிதம்பரம் கோவில்
தோன்றியதற்கு முன்பே இக்கோவில் தோன்றியதாக வரலாறு.இங்கு முக்கியமான விஷயமே
இங்கு உள்ள மரகதநடராஜர் சன்னிதி சிறப்பு வாய்ந்தது ஆசியாவிலே எங்கும் மரகத நடராஜர்
கிடையாது இங்கு மட்டும்தான் உள்ளது.மரகதத்துக்கு அதிர்வை தாங்கும் வசதியில்லையாதலால் இங்கு மேளம் அடிக்கப்படுவதில்லை வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் மார்கழியில் வரும் திருவாதிரை அன்று மட்டுமே மரகத நடராஜர் சிலையை
தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் சந்தனம் பூசிய நடராஜரைத்தான் தரிசிக்க முடியும்.இங்கு மற்றுமொரு ஆதிகாலத்து வராஹி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.இன்னும் இந்த வருடம் மார்கழி
மாத திருவாதிரை அன்றுமரகதநடராஜரை தரிசித்து வாழ்வில் ஏற்றம் பெறுக.

குறிப்பு: திருவாதிரை அன்று கோவிலில் அதிக‌ கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகதநடராஜரைப்பார்க்கலாம்.இரவு 3மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும் அதனால் இரவு சாமி தரிசனம்
செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல்
இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு இந்த ஏமாற்றத்தை
தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம் வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மேற்ச்சொன்ன நேரத்திற்க்கு வருவது சாலச்சிறந்தது.ஏனென்றால் மார்கழி மாத கடுமையான பனியாதலால் கூட்டத்தில் குளிரை
தாங்கி கொண்டு நிற்பது சிரமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இக்கோவில் உள்ளதால் நானும்
இதற்கு 8கிமீதொலைவில் உள்ள திருப்புல்லாணியில் உள்ளதால் அனுபவத்தில் சொல்கிறேன்.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்


செல்வது எப்படி;ராமநாதபுரம் வந்து அங்கிருக்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி உத்திரகோசமங்கைக்கு பஸ் உண்டு விழா நாளான‌ திருவாதிரை 
அன்றுஅதிக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதுண்டு.


Comments

  1. I had been to Thiruppullani sometime ago. Have you written about Aadhi Jagannathar also?

    ReplyDelete
  2. நன்றியுடன், சந்திரசேகரன், திருச்சி, chitham musical

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2