Skip to main content

அய்யப்பவிரதமும் சில அயோக்கிய பக்தர்களும்

இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் துவங்கி விடும் கார்த்திகை துவங்கிவிட்டாலே அய்யப்பனுக்கு மாலை போடும் கூட்டம் அதிகரித்துவிடும்.ஒரு காலத்தில் தேகசுத்தியுடனும்
ஒழுக்கத்துடனும் கடைபிடிக்கப்பட்டு வந்த அய்யப்ப பூஜை .தற்போது போலிகள் நிறைந்துவிட்ட‌
இவ்வுலகத்தில் கேலிக்கூத்தாகிவிட்டது.சிறந்த ஒழுக்கமான அய்யப்ப பக்தர்கள் நிறைய பேர்
தற்காலத்தில் அதிகம் பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.சென்ற வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி தூங்கி எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் சாமியே போலிச்சாமிதான் வருடம் முழுவதும் தண்ணி அடிக்கின்றனர் பான்பராக்,குட்கா,சிகரெட்,பீடி
போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கின்றனர்.அடுத்தவன் நிலத்தை அபகரித்து ரியல்
எஸ்டேட் தொழில் செய்கின்றனர் கந்துவட்டிக்குபணம் கொடுத்து பல ஏழைகள் வயிற்றில்
அடிக்கின்றனர்,கட்டியமனைவி,பிள்ளைகளை விட்டுவிட்டு அடுத்தவர்களோடு கள்ளத்தொடர்பு
வைத்துக்கொள்கின்றனர்.ஆடு,கோழி இல்லாமல் ஒரு நாளும் இவர்கள் சாப்பிடுவதில்லை
இந்த லட்சணத்தில் இவர்களெல்லாம் மாலைபோட்டால் எப்படியிருக்கும்.ஆனால் மேற்கூறிய‌
காரணம் உடையவர்கள் தான் முதலில் மாலை போடுகின்றனர். மேற்கூறிய‌
குற்றங்களை விரத காலம் முழுவதும் செய்யாமல் இருக்கும் பக்தர்களும்சிலர் இருக்கின்றனர்.

ஆனால் மாலைபோட்டபிறகும் உரிய விரதத்தை அனுஷ்டிக்காமல் தண்ணி அடிப்பது சிகரெட் அடிப்பது என எதற்காக மாலைபோட்டோம் அய்யப்பன் என்றால் யார் என்று அய்யப்பனின் மகத்துவம் பற்றி அறியாமல் பேஷனுக்காக மாலை போடுபவர்கள் தான் தற்போது அதிகம்.
சில ஒயின்ஷாப்புகள் ஒருபடி மேலே போய் இங்கு சாமிகளுக்கு தனி கிளாஸ் உண்டு என‌
பத்திரிக்கைகளிலும் டிவிக்களிலும் பார்க்கும் செய்திகண்டு அதிர்ச்சியுற்றேன்.இரண்டுமாதங்கள் உங்களை கட்டுபடுத்தி உங்களால் இருக்கமுடியவில்லையென்றால் நீங்களெல்லாம் எதற்கு மாலை போட்டு இந்துக்களின் மானத்தை வாங்குகிறீர்கள்.இதற்க்கு மேல்
சில பக்தர்கள் மாலை போட்டு செல்லும் வழியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கெல்லாம்
செல்கின்றனர் கோவிலில் வரிசையில் நின்றும் சாமி தரிசனம் செய்வதில்லை வயதானவர்களையும் குழந்தைகளையும் இடித்து தள்ளிக்கொண்டு குறுக்கு வழியில் சென்று
சாமிதரிசனம் செய்யவேண்டும் என்று அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர்.எங்கே சென்று
கொண்டுள்ளது நாடு எனப்புரியவில்லை.இந்துமதத்திற்க்கு எதிரி வெளியில் இல்லை இவர்கள்
போன்ற சிலர்களால்தான் உள்ளது.ஜேசுதாஸ் ஒரு மிகச்சிறந்த பாடகர் மாற்றுமதத்தை சேர்ந்தஇவர் ஒவ்வொருவருடமும் 48நாட்கள் விரதமிருந்து மிகச்சிறந்த முறையில் அய்யப்ப பூஜை
செய்கின்றார் கோவிலுக்கு தவறாமல் வருகிறார் தெய்வீக உணர்வுடன் அவர் பாடும் பாடலை
பாருங்கள் மாலை போடும் சில போலிச்சாமிளே இவரைப்பார்த்தாவது திருந்துங்கள்.

Comments

  1. நல்லா சொன்னிங்க போங்க இந்த மாதரி மனிதர்கள் இருகக்தான் செய்கிறார்கள் என்ன செய்வது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2