Skip to main content

அதிசயங்களை நிகழ்த்தும் மதுரை பாண்டி கோவில்மதுரை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சிஅம்மன் கோவில் அதையும்
தாண்டினால் அழகர்கோவில் அதையும் தாண்டி மதுரைக்கு புகழ்சேர்க்கும் கோவில் பாண்டி முனீஸ்வரர் கோவில்.. பாண்டியமன்னன் நெடுஞ்செழியன்  இங்கே முனியாக மாறி நின்றுவிட்டதாகவும்  அங்கேயே தமக்கு கோவில் அமைத்து மக்களை காக்க‌
வகைசெய்யவேண்டும் என்று கோரியது.அதே இடத்தில் கோவில் அமைக்கப்பட்டு இன்றளவும்
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களான திண்டுக்கல்,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,தேனி மாவட்டங்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.தங்கள் குலதெய்வம் அறிய முடியாதவர்கள் இவரையே குல தெய்வமாக வணங்குகின்றனர்.எல்லா நாட்களும் இங்கு உள்ள‌
மண்டபங்கள்.தங்குமிடங்கள் நிறைந்தே காணப்படுகின்றன.முகூர்த்தநாட்களில் ட்ராபிக் ஜாம் ஆகி விடும் அளவிற்கு இங்கு கூட்டம் கூடும்.
கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில்பஞ்சம் பிழைப்பதற்காக  முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

சிறப்புகள்: ஏற்கனவே கூறியபடி இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்மமுனீஸ்வரராக‌
இருந்து ஆட்சி புரிகிறார் அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமல்லாது
அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை
நடத்துவார்.இப்பொழுதும் அதிகம் பேர் இவரை நேரில் பார்த்துஇருப்பதாக சொல்கிறார்கள் வயதானவர் வேடத்தில்தான் இவர் அதிகம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர் துயரங்களோடு
வரும் உண்மையான பக்தர்களுக்கு இவர் வெறும் சிலையாக மட்டுமல்லாமல் நேரிலே வந்து
பிரச்சினைகளை தீர்த்துவைப்பவர்.இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால்
வெற்றிநிச்சயம்.

இரவு நேரத்தில் இவ்வழியாக வந்த ஒருவரின் வண்டி ஏதோ ஒரு காரணத்தால் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது.அவரும் அதிக நேரம் முயற்சி செய்துவிட்டு சோர்வடைந்து விட்டார்
அந்த நேரத்தில் இங்கு வந்த ஒரு வயதான பெரியவர் என்னப்பா வண்டி ஸ்டார்ட் ஆகலையா
என கேட்டிருக்கிறார் ஆம் என இவர் சொல்ல வண்டிச்சாவியை கீழே போட்டு எடு என சொல்லி
இருக்கிறார் வண்டிச்சாவியை மண்ணில் போட்டு எடுப்பதற்குள் அவரை காணவில்லை
இப்பொழுது வண்டி எந்த சேட்டையும் பண்ணாமல் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது  இது போல பல‌
அதிசயங்களை தினமும் நிகழ்த்திகொண்டிருக்கிறார்.இன்றும் கரூரில் இருந்து வந்தவர்களின்
வம்சாவழிகளே கோவிலில் பூஜை செய்கின்றனர்,இந்தகோவிலுக்கு ஒருமுறை சென்று உங்கள் மனபாரங்களை கொட்டுங்கள் உங்கள் துயரங்களில் இருந்து உங்களை நிச்சயம் அந்த‌
பாண்டிமுனீஸ்வரர் காப்பார்

செல்லுமிடம்:மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம்,திருநெல்வேலி செல்லும் பாதையில் இந்த கோவில் உள்ளது. ஆட்டோவில்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்றால் 50 ரூபாய் கேட்பார்கள்

Comments

  1. என்னை ஆளும் பாண்டி அய்யாவே சரணம்

    ReplyDelete
  2. பாண்டி அய்யாவே சரணம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2