Monday, November 14, 2011

மங்கள நாயகி கண்ணகி கோயில்





மதுரையை அழித்த கண்ணகி ஆக்ரோஷத்துடன் சென்றாள் அப்படி சென்றவள் ஒரு மலைப்பாங்கான இடத்தில் நின்றுகொண்டிருக்கும்போது வானில் இருந்து கோவலன் வந்து
ஒரு ரதத்தில் கண்ணகியை ஏற்றிக்கொண்டு வானுலகம் சென்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில ஆதிவாசிகள் இளங்கோவடிகளிடம் கூறி அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அந்த இடமே பின்னாளில் கண்ணகி கோவிலாக‌
மாறிப்போனது சுமார் 2000ம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழக கேரள எல்லையில்
உள்ளது.சமீபகாலமாக தமிழ்நாட்டிற்க்கு சொந்தமான இந்தகோவிலை கேரளா தனக்குத்தான்
சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது.வருடத்திற்கு ஒருமுறைசித்ரா பவுர்ணமிஅன்று மட்டுமே திறக்கப்படுகிறது இந்தகோவில் .3நாட்கள் ஆரம்பத்தில் கொண்டாடி வந்த இந்த விழா
இப்போது கேரளா அரசின் கெடுபிடிகளால் 1நாளாக குறைந்துவிட்டது,நீங்களும் ஒரு வருடம்
கண்ணகி கோவிலுக்கு சென்று கண்ணகி அருள் பெற்று இன்புற வாழுங்கள்

செல்லும் வழி:தேனி மாவட்டம் கூடலுரிலிருந்து பளியன்குடி என்ற இடத்திலிருந்து 7கிமீ மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும் கடுமையான பயணத்திற்க்கு பிறகே இக்கோவிலை
அடைய முடியும்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...