Skip to main content

நாத்திகரை ஆத்திகராக மாற்றிய சந்திரசூடேஸ்வரர்.
ஓசூர் நகரின் மையத்தில் மலைமேல் சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. சந்திரசூடேஸ்வரர்
உடன் அம்பிகை மரகாதாம்பிகையாக காட்சி தருகிறாள்.இந்த கோவில் 1500 ஆண்டு பழமையானது.பொதுவாக சதுரகிரி,பர்வதமலை,திருவண்ணாமலை போன்ற மலைக்கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதுண்டு.இந்த கோவில்களை பற்றி சில‌
அதிசய சம்பவங்கள் கூறப்படுவதுண்டு.இந்த கோவில்களைபோலவே மலை மேலிருக்கும் சந்திர சூடேஸ்வரர் சிவன் கோவிலும் சில அதிசயங்களை நிகழ்த்திய கோவில். சில வருடங்களுக்கு முன் அதாவது 73அல்லது 74ம் வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
எனது தாத்தா[அம்மாவின் அப்பா] வீரப்பன் நடமாடிய காட்டுப்பகுதிகளான தாளவாடி தர்மபுரி
,கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் அரசு டெபுடி சர்வேயராக பணியாற்றி
84ம் ஆண்டு ஓய்வுபெற்றவர்.சிறுவயதிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தீவிர‌
நாத்திகவாதியாக இருந்தவர்.நாத்திகவாதியாக இருந்தாரே ஒழிய மிக அமைதியான நல்ல மனிதர்.ஒருமுறை முகத்தில் சின்னக்கட்டி ஒன்று ஏற்பட்டிருக்கிறது சாதாராண கட்டி என்று
தாத்தாவும் விட்டுவிட கட்டி மிகவும் பெரியதானது.டாக்டரிடம் காண்பித்ததற்க்கு அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்.நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த என் தாத்தா
சம்பளத்தை இதற்க்கு செலவழித்துவிட்டால் இந்த மாதம் தேவகோட்டையில் இருக்கும்
தனது வீட்டுக்கு எப்படி பணம் அனுப்புவது.இந்த மாதசம்பளத்தை நம்பி வீட்டில் காத்திருப்பார்களே என எண்ணி கவலையோடு தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு
சென்று இருக்கிறார்.அப்போது பக்கத்தில் உள்ள ஒரு பெரியவர் இவர் முகவாட்டத்தை வைத்து
என்ன கவலையாக இருக்கிறீர்களே எனக்கேட்டுள்ளார்.எனது தாத்தா விஷயத்தை சொல்ல,அந்தபெரியவர் கேட்டிருக்கிறார் இவ்வளவு நாள் கிருஷ்ணகிரியில் இருக்கிறீர்களே
என்றைக்காவது ஓசூர் மலையில் இருக்கும் சந்திரசூடேஸ்வரரை சென்று வணங்கியுள்ளீர்களா
என கேட்டுள்ளார்.எனது தாத்தாதான் நாத்திகம் பேசுபவராயிற்றே இல்லை என பட்டென்று எனது
தாத்தா சொல்ல .உடனே அந்தபெரியவர் ஒரு நாட்டுமருந்தின் பெயரைசொல்லி உடனே அதை
தேடி அந்த மருந்தை உபயோகியுங்கள்.உடனடியாக சென்று ஓசூரில் இருக்கும் சந்திர சூடேஸ்வரர் கோவிலை வணங்கும்படி சொல்லிவிட்டு அடுத்து உனக்கு பிறக்கும் குழந்தைக்கு
அவர் பெயரையே வை எனக்கூறிவிட்டு அடுத்து வந்த பஸ்ஸ்டாப்பில் சட்டென அந்த பெரியவர்
இறங்கிவிட்டாராம்.இதை முழுவதும் நம்பாத எனது தாத்தா கோவிலுக்கு  அரைகுறை மனதுடன் சென்றிருக்கிறார்.சென்று விட்டு வந்து அடுத்தநாள் காலையில் ஆச்சரியத்தக்க‌
வகையில் வீக்கம் குறைந்திருந்தது.இதைப்பார்த்ததும் தாங்கமுடியாத ஆச்சரியம் எனது
தாத்தாவுக்கு.அத்தோடு நிற்காமல் அவர் சொன்ன மருந்தையும் உபயோகித்து எண்ணி 5 நாட்களில் எந்த வித அறுவை சிகிச்சையில்லாமல் முற்றிலும் குணமடைந்து விட்டார்
அத்தோடு நாத்திகம் பேசுவதற்கு முழுக்குபோட்டுவிட்டு தீவிர ஆத்திகராக மாறிவிட்டார்
அத்தோடு கடைசியாக பிறந்த என் மாமாவுக்கு சந்திரசூடேஸ்வரன் எனப்பெயர் வைத்தார்
தென்மாவட்டங்களில் இந்த பெயர் அதிகம் அறியப்படாத பெயர் என்பதால் பெயருக்கான‌
விளக்கம் கேட்டு என் தாத்தா எனக்கு சொன்னகதை இது.தற்போது தள்ளாடிய நிலையில் 87வயது ஆகும் என் தாத்தா இந்த வயதிலும் காலையில் எழுந்து குளித்துவிட்டு அதிக நேரம்
பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டுத்தான் காலை உணவைத்தொடுவார்.சந்திரசூடேஸ்வரர் பெயரைக்கொண்டஎனது மாமாவும் தற்போது சிங்கப்பூரில் நல்ல நிலையில் சம்பாதித்து நல்ல நிலையில் உள்ளார் நடந்த அந்த நிகழ்ச்சியை இன்னும் ஒரு தெய்வச்செயலாகவே நினைக்கிறார்எனது தாத்தா
.அந்த சிவபெருமான்
நம்பியவரை மட்டுமல்ல ஆண்டவன் படைப்பில் அனைவரும் ஒருவரே என்ற கொள்கைகேற்ப ஆண்டவனை நம்பாத எனது தாத்தாவையும் கைவிடவில்லை எல்லாம்
வல்ல அந்த ஈசன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2