Wednesday, March 7, 2012

பறந்து சென்றே சதுரகிரியிலும் கதிர்காமத்திலும் சுவாமி தரிசனம் செய்த சித்தர் முனியாண்டி சுவாமிகள்

மதுரைதிருமங்கலம் அருகே கே.ரங்கபாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சித்துவிளையாட்டுக்களில் கை தேர்ந்தவர் இவர் .இவர் சதுரகிரிமலைக்கு அடிக்கடி சென்று வருவார்.அங்குள்ள சுந்தரமகாலிங்கம் சன்னதியில் தனியாக சுவாமியுடன் பேசுவதில் வல்லமை பெற்ற சக்தி வாய்ந்த மகான் இவர்.இவர் சதுரகிரிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்க்கும் வடநாட்டில் உள்ள மதுராவிற்க்கும் ஆகாய பயணம் மேற்கொள்பவர்
இவரின் பக்தர் ஓய்வுபெற்ற டெப்டிகலெக்டர் விஸ்வநாதன் என்பவர் இவருடன் இருந்த‌அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒருமுறை நானும் சுவாமிகளும் திருமங்கலம் அருகேயுள்ள ரங்கபாளையம் கிராமத்தில் அமர்ந்து இருந்தோம்.அப்போது மணி 9மணி இருக்கும் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இந்நேரத்தில் அங்கு செல்வது மிகச்சிரமமான விஷயம் இங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரத்திற்க்கு சென்று அங்கிருந்து மலை ஏறுவதற்க்கு எப்படியும்
ஏழெட்டு மணிநேரம் ஆகிவிடும் பஸ்வசதியில்லாத காலம் வேறு .சுவாமிகள் சற்று நேரம் என்னை பார்த்தார் என் கையை பிடித்துகொள்ளுங்கள் சதுரகிரிக்கு 5 நிமிடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறேன் என்றார்.நானும் அரைநம்பிக்கையோடு அவர் கையைபிடித்தேன் ஏதோ மயக்கநிலையில் இருப்பதைபோல் உணர்ந்தேன்.அடுத்த 5 நிமிடத்தில் சுந்தரமகாலிங்கம் சன்னதியில் உட்கார்ந்து இருந்தேன் என்னால் அந்த சிலிர்ப்பான அனுபவத்தை இன்று வரை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார் இந்த விஸ்வநாதன்

எனது வாழ்க்கையில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ”ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விழ… எங்களுக்கு ஒரு சிறு அடி,காயம்

இல்லாமல் காப்பாற்றியது சித்தர் முனியாண்டிதான் “ என்று பெருமிதாய் கூறுகிறார் டெப்டி

கலெக்டர் கொ.வெ. விஸ்வநாதன்.

சித்தர் முனியாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவர் உடல் பாகங்கள் பிரிந்து சேருவதைப்

போலவே அவர் உடல் அமைப்பு மினுமினுப்பான நிலையில் இருக்கும். ஒரு சொட்டு தண்ணீர்

கூட அவர் உடல் மீது நிற்காது.அவர் கிணற்று நீரில் குதித்து மேலே வந்தால் அவர் உடலில்

ஒரு சிறு துளி நீரைக்கூட பார்க்க முடியாது. தலைமுடி உலர்ந்தது போலவே இருக்கும்.

சித்தர் முனியாண்டிக்கு மூலிகைகளைப் பற்றி இரகசியமும் தெரியும். காசநோய், புற்றுநோர்,

தீராத வயிற்று வலி என பல நோயாளிகளுக்கு கண்ணில் படும் மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கியிருக்கிறார். மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமையை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார். இது போல் தன்னை நாடிவரும் அன்பர்களை எப்போதும் கைவிடாமல் காப்பாற்றுவார்.

சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது.

ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்த போது ,ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ய அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள்.



சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா….,

முடியாது …? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார்.அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு

வந்து விழுந்ததாம்.

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள்.., அப்படியே விரட்டுவிடுங்கள்.. “ என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர்.ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டி
நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது.அடுத்த நொடி அவர்கள் கண் திறந்த போது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர்

முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “ என்ன பண்றது பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல்

உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க,. மனசைப் பாருங்க..” என்று

சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.சித்தர் முனியாண்டி இவரைப் போன்றஏ பலருக்கும் பலவித அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
1989 –ம் ஆண்டு சமாதி நிலை அடைந்த சித்தரின் சமாதி கே. ரெங்கபாளைத்தில் அவரது

நிலத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதிக்கு சென்று மனதார தொழுதால் நினைத்தது

நடக்கும் என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...