Friday, March 23, 2012

நினைத்ததை நினைத்தபடி முடித்துத்தரும் சக்திவாய்ந்த காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்



இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் என்ற இடத்தில்
உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு அங்கு இருக்கும் உறவினர் ஒருவர் அழைத்ததற்காக சென்று இருந்தேன்.சென்ற வருடமே இந்த கோவில் விழாவுக்கு முதன் முதலில் சென்றிருந்தேன்.அப்போது வேலையின்மையால் சிறிது நேரம் சாமி தரிசனம் செய்துவிட்டு
வந்துவிட்டேன்.இந்த வருடம் கொஞ்சம் வேலையில்லாததால் இந்தகோவிலுக்கு அதே உறவினர் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன்.எனக்கு தற்போது 31வயதாகிறது என்னுடைய வயதிற்க்கு இப்படி ஒரு கூட்டத்தை மதுரை சித்திரைதிருவிழாவில் கூட கண்டது கிடையாது
சித்திரைவிழாவை கூட கூட்டம் அதிகமாகத்தான் வருகிறது.பல லட்சம் பால்குடங்கள் வருகிறது
மற்ற கோவில்களில் காலையில் விழா ஆரம்பித்து இரவு 1மணிவரை சிறப்பாக நடக்கிறது
இதுபோக தொடர்ந்து கோவிலில் காப்புகட்டுதலில் ஆரம்பித்து 36 நாட்கள் ஆடல் பாடல் அம்மன் வீதியுலா அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் என மிகப்பிரம்மாண்டமாக நடக்கிறது.குறிப்பிட்ட பால்குடதிருவிழா மிகப்பிரம்மாண்டமாக நடக்கிறது.

இந்த அம்மனை இவ்வளவு சிறப்பாக வழிபடுவதற்க்கு முக்கியகாரணம் .மற்ற கோவில்களுக்கு
உள்ள வரலாறு போல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு அல்ல.சில பல வருடங்கள்தான் ஆகிறது இக்கோவில் 1960களில்தான் உருவானது இதோ அதன் வரலாறு.

1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை.திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது சிறுமி இறக்கும் தருவாயில் கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை.சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார் தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள்.உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது அதில் ஒரு தக்காளிபழத்தை எனக்கு கொண்டுவந்துதா என சொன்னாள்
வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார்.நான் சொன்ன இடத்தில் சென்றுபார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்றுபார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம் பழத்தை எடுத்துகொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார்.அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது.அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள் உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள் அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக இவளிருக்கிறாள்.வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு
இந்த அம்மனை பற்றி நான் சொல்வதை விட நீங்களே வந்து இந்த அம்மனின் சக்தியை நேரில் உணர்ந்தால் நன்றாக இருக்கும் .நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நல்ல வழியை நிச்சயம் ஏற்படுத்திகொடுக்கிறாள் என்பதை இங்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை வைத்தே உணரமுடியும் என்பது நிச்சயமான உண்மை.

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...