Tuesday, November 8, 2011

உத்திரகோசமங்கை



இந்த கோவிலில் மங்களநாதர்,மங்களாம்பிகையும் காட்சியளிக்கின்றனர் பிரதோஷத்தன்று
இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.சிதம்பரம் கோவில்
தோன்றியதற்கு முன்பே இக்கோவில் தோன்றியதாக வரலாறு.இங்கு முக்கியமான விஷயமே
இங்கு உள்ள மரகதநடராஜர் சன்னிதி சிறப்பு வாய்ந்தது ஆசியாவிலே எங்கும் மரகத நடராஜர்
கிடையாது இங்கு மட்டும்தான் உள்ளது.மரகதத்துக்கு அதிர்வை தாங்கும் வசதியில்லையாதலால் இங்கு மேளம் அடிக்கப்படுவதில்லை வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் மார்கழியில் வரும் திருவாதிரை அன்று மட்டுமே மரகத நடராஜர் சிலையை
தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் சந்தனம் பூசிய நடராஜரைத்தான் தரிசிக்க முடியும்.இங்கு மற்றுமொரு ஆதிகாலத்து வராஹி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.இன்னும் இந்த வருடம் மார்கழி
மாத திருவாதிரை அன்றுமரகதநடராஜரை தரிசித்து வாழ்வில் ஏற்றம் பெறுக.

குறிப்பு: திருவாதிரை அன்று கோவிலில் அதிக‌ கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகதநடராஜரைப்பார்க்கலாம்.இரவு 3மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும் அதனால் இரவு சாமி தரிசனம்
செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல்
இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு இந்த ஏமாற்றத்தை
தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம் வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மேற்ச்சொன்ன நேரத்திற்க்கு வருவது சாலச்சிறந்தது.ஏனென்றால் மார்கழி மாத கடுமையான பனியாதலால் கூட்டத்தில் குளிரை
தாங்கி கொண்டு நிற்பது சிரமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இக்கோவில் உள்ளதால் நானும்
இதற்கு 8கிமீதொலைவில் உள்ள திருப்புல்லாணியில் உள்ளதால் அனுபவத்தில் சொல்கிறேன்.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்


செல்வது எப்படி;ராமநாதபுரம் வந்து அங்கிருக்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி உத்திரகோசமங்கைக்கு பஸ் உண்டு விழா நாளான‌ திருவாதிரை 
அன்றுஅதிக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதுண்டு.


Monday, November 7, 2011

ஒம் சிவ சிவ ஓம்



இப்பிறப்பை பூமியில் எடுத்த நாம் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம் கடுமையான‌
பாவங்களை முற்பிறவியில் செய்ததால் இப்பிரச்னைகளுக்கு ஆளாகின்றோம் கடுமையான‌
பிரச்சினைகளின் துயரத்தை போக்கவே எனது நண்பரும் ஆன்மிகக்கடல் இணையதளம் வைத்திருப்பவருமான ஆண்டாள் பிறந்த srivilliputthur
ஐ பிறப்பிடமாக கொண்ட நண்பர் வீரமுனி அவர்களின் குருவுமாகிய புளியங்குடி திரு.சிவ.மாரியப்பன் அவர்களின் குரு திரு.மிஸ்டிக் செல்வம் அய்யாவின் ஆன்மிக ஆராய்ச்சியில் உருவான மந்திரமே இந்த மந்திரம் இந்த மந்திரம் பற்றி முழுவிளக்கத்தை இந்த‌
நோட்டீஸை பார்த்து தெரிந்து கொள்க இந்த நோட்டீஸை அப்படியே பிரிண்ட் எடுத்தோ 1000,2000,
நோட்டீஸாகவோ அச்சடித்து உங்கள் ஊரின் பழமையான சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ நாட்களிலும் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கொடுத்தால் பகலவனை
கண்ட பனி போல நம் பிரச்சினைகள் அனைத்தும் பனியாய் கறைந்து விடும் வாருங்கள் சிவ சேவையில் பங்கெடுங்கள் நோட்டீஸ் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இருக்கும் விஷயங்களை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்


Saturday, November 5, 2011

அய்யப்பவிரதமும் சில அயோக்கிய பக்தர்களும்

இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் துவங்கி விடும் கார்த்திகை துவங்கிவிட்டாலே அய்யப்பனுக்கு மாலை போடும் கூட்டம் அதிகரித்துவிடும்.ஒரு காலத்தில் தேகசுத்தியுடனும்
ஒழுக்கத்துடனும் கடைபிடிக்கப்பட்டு வந்த அய்யப்ப பூஜை .தற்போது போலிகள் நிறைந்துவிட்ட‌
இவ்வுலகத்தில் கேலிக்கூத்தாகிவிட்டது.சிறந்த ஒழுக்கமான அய்யப்ப பக்தர்கள் நிறைய பேர்
தற்காலத்தில் அதிகம் பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.சென்ற வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி தூங்கி எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் சாமியே போலிச்சாமிதான் வருடம் முழுவதும் தண்ணி அடிக்கின்றனர் பான்பராக்,குட்கா,சிகரெட்,பீடி
போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கின்றனர்.அடுத்தவன் நிலத்தை அபகரித்து ரியல்
எஸ்டேட் தொழில் செய்கின்றனர் கந்துவட்டிக்குபணம் கொடுத்து பல ஏழைகள் வயிற்றில்
அடிக்கின்றனர்,கட்டியமனைவி,பிள்ளைகளை விட்டுவிட்டு அடுத்தவர்களோடு கள்ளத்தொடர்பு
வைத்துக்கொள்கின்றனர்.ஆடு,கோழி இல்லாமல் ஒரு நாளும் இவர்கள் சாப்பிடுவதில்லை
இந்த லட்சணத்தில் இவர்களெல்லாம் மாலைபோட்டால் எப்படியிருக்கும்.ஆனால் மேற்கூறிய‌
காரணம் உடையவர்கள் தான் முதலில் மாலை போடுகின்றனர். மேற்கூறிய‌
குற்றங்களை விரத காலம் முழுவதும் செய்யாமல் இருக்கும் பக்தர்களும்சிலர் இருக்கின்றனர்.

ஆனால் மாலைபோட்டபிறகும் உரிய விரதத்தை அனுஷ்டிக்காமல் தண்ணி அடிப்பது சிகரெட் அடிப்பது என எதற்காக மாலைபோட்டோம் அய்யப்பன் என்றால் யார் என்று அய்யப்பனின் மகத்துவம் பற்றி அறியாமல் பேஷனுக்காக மாலை போடுபவர்கள் தான் தற்போது அதிகம்.
சில ஒயின்ஷாப்புகள் ஒருபடி மேலே போய் இங்கு சாமிகளுக்கு தனி கிளாஸ் உண்டு என‌
பத்திரிக்கைகளிலும் டிவிக்களிலும் பார்க்கும் செய்திகண்டு அதிர்ச்சியுற்றேன்.இரண்டுமாதங்கள் உங்களை கட்டுபடுத்தி உங்களால் இருக்கமுடியவில்லையென்றால் நீங்களெல்லாம் எதற்கு மாலை போட்டு இந்துக்களின் மானத்தை வாங்குகிறீர்கள்.இதற்க்கு மேல்
சில பக்தர்கள் மாலை போட்டு செல்லும் வழியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கெல்லாம்
செல்கின்றனர் கோவிலில் வரிசையில் நின்றும் சாமி தரிசனம் செய்வதில்லை வயதானவர்களையும் குழந்தைகளையும் இடித்து தள்ளிக்கொண்டு குறுக்கு வழியில் சென்று
சாமிதரிசனம் செய்யவேண்டும் என்று அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர்.எங்கே சென்று
கொண்டுள்ளது நாடு எனப்புரியவில்லை.இந்துமதத்திற்க்கு எதிரி வெளியில் இல்லை இவர்கள்
போன்ற சிலர்களால்தான் உள்ளது.ஜேசுதாஸ் ஒரு மிகச்சிறந்த பாடகர் மாற்றுமதத்தை சேர்ந்தஇவர் ஒவ்வொருவருடமும் 48நாட்கள் விரதமிருந்து மிகச்சிறந்த முறையில் அய்யப்ப பூஜை
செய்கின்றார் கோவிலுக்கு தவறாமல் வருகிறார் தெய்வீக உணர்வுடன் அவர் பாடும் பாடலை
பாருங்கள் மாலை போடும் சில போலிச்சாமிளே இவரைப்பார்த்தாவது திருந்துங்கள்.

Friday, November 4, 2011

ஹிப்னாடிசத்தில் வெளியெறிய ஆவியுடல்




மீடியமாக உள்ள ஒருவரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி ஆவியுலகில்
சஞ்சரிக்க வைத்து ஒரு ஆராய்ச்சி 08.04.84அன்று
கோவையில் மீடியம் திரு ரத்தினசாமி,திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்,திரு
ஹிப்னாடிஸ்ட் டாக்டர்
ஆர்.எம்.சோமசுந்தர் ஆகியோர் பங்கேற்றனர் மீடியமாக யுவராஜ் அவர்கள் பங்கேற்றார் .

யவராஜின் ஆவியுடல் ஆவியுலகத்தில் சஞ்சரித்து நேரடியாக கொடுத்த பதில்கள்.

கேள்வி;இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
பதில்;அதிவேகமாக பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து கொண்டு இருக்கிறேன்.
கேள்வி;அந்த இடத்தை பற்றி கூற முடியுமா
பதில்:இங்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான ஒளியை காண்கிறேன் வெப்பம்
இல்லை குளிர்ச்சி இல்லை
துக்கம் துயரம் எதுவும் எனக்கு தெரியவில்லை இங்கு இருப்பது எனக்கு
மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது.
கேள்வி:அங்கு வேறு எதுவும் உங்களுக்கு தெரிகிறதா?
இங்கு கூட்டம் கூட்டமாக ஆவியுருவங்கள் மிதக்கின்றன சில வெண்மை நிறமுடனும்
சில சிகப்பு நிறமாகவும்
காட்சி தருகின்றன‌.
கேள்வி:அவைகளை கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா
பதில்:அவைகளை கண்டு எனக்கு பாசம் ஏற்படுகிறது
கேள்வி:வேறு ஏதாவது கூற முடியுமா?
பதில்:சற்று பொறுங்கள் ஒரு ஆவி மட்டும் என்னை நோக்கி வருகிறது
அது என் பாட்டி என்று உணர்கிறேன் பூமியில் இருந்ததை போன்று தெரியவில்லை இளமையோடும்
புதுப்பொழிவோடும் இருக்கிறார்கள் கவலையற்று என்னிடம் பழகுகிறார்கள் என்னை
ஆசிர்வதிக்கிறார்கள்
ஹிப்னாடிசத்தில் ஆழ்த்தப்பட்டு இங்கு வந்து இருக்கிறாய் நீ அதிகநேரம்
இங்கு இருக்கமுடியாது என கூறுகிறார்கள்
இங்கு பூமியை போன்ற சூழ்நிலை இங்கு இல்லை சூரியன் இல்லாதாதால் வெப்பம்
இல்லை நிலவு இல்லாதால்
குளிர் இல்லை மனம் பரவசமாக சாந்தி அளிப்பதாக உள்ளது இந்த நிலையில்
தொடர்ந்து இருந்திட மனம்
விரும்புகிறது.
கேள்வி;சுற்று சூழ்நிலையில் வேறு எதுவும் தெரிகிறதா?
இருள் சூழ்ந்த இடம் ஒன்று தெரிகிறது அங்கு செல்ல உனக்கு இப்போது அனுமதி
இல்லை என கூறுகின்றனர்
இப்போது என் அருகில் சில வெண்மை நிறம் கொண்ட ஆவிகள் வருகின்றன.அவை
பூமியில் இருந்த போது
நான் பார்த்து பழக்கப்பட்ட உருவங்களாக‌ தெரிகின்றன.
கேள்வி:கடவுளை பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முடிகிறதா?
அது அருள் ஒளி அன்பு ஒளி,பேரொளி நீ இப்போது காண முடியாது அதற்க்கு நேரம்
வரவேண்டும்.என்கின்றனர்
எனது வேலை முடிந்துவிட்டதால் நான் பூமிக்கு திரும்பிகொண்டிருக்கிறேன்
மதியம்2மணி 10நிமிடங்களுக்கு ஆவியுலகம் சென்ற மீடியம் யுவராஜ்
உடல்2மணி40நிமிடங்களுக்கு தன் உடல்
அடையபெற்று சுய உணர்வு பெற்றார்.

நன்றி:நர்மதா பதிப்பகம் திரு ரத்தினசாமி எழுதிய ஆவிகளுடன் நாங்கள்

Thursday, November 3, 2011

சகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்


http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இந்த லிங்கிற்க்கு சென்று தொடுகுறிசக்கரத்தை மனதில் இறைவனை நினைத்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு
பிடித்த கட்டத்தை
நினைத்துக்கொண்டு தொடுங்கள்.ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று திறக்கும் அதில் ஒற்றை எழுத்து ஒன்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் நினைத்த காரியம் பற்றி சித்தர் பாடல்
போல் ஒரு பாடல்
வரும் அது ஓரளவிற்க்கு அனைவருக்கும் புரியும்.இதற்கு இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலவி
பயன்படுத்த வேண்டும் மற்ற உலவிகளை பயன்படுத்தினால் சைனீஸ் எழுத்துக்கள் போல‌
தெரியும்
குறிப்பு ;  ஒரு நாளைக்கு           காலையில் குளித்து முடித்து விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கவும் அடிக்கடி பார்த்தால் பலன்கள் சரியாக இருக்காது   

சகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்


http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இந்த லிங்கிற்க்கு சென்று தொடுகுறிசக்கரத்தை மனதில் இறைவனை நினைத்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு
பிடித்த கட்டத்தை
நினைத்துக்கொண்டு தொடுங்கள்.பயன்படுத்தி பார்க்கவும்ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று திறக்கும் அதில் ஒற்றை எழுத்து ஒன்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் நினைத்த காரியம் பற்றி சித்தர் பாடல்
போல் ஒரு பாடல்
வரும் அது ஓரளவிற்க்கு அனைவருக்கும் புரியும்.இதற்கு இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலவி
பயன்படுத்த வேண்டும் மற்ற உலவிகளை பயன்படுத்தினால் சைனீஸ் எழுத்துக்கள் போல‌
தெரியும்
குறிப்பு ;  ஒரு நாளைக்கு           காலையில் குளித்து முடித்து விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கவும் அடிக்கடி பார்த்தால் பலன்கள் சரியாக இருக்காது   

பழனியில் போகரின் ஆவி



எத்தனையோ சித்தர் பெருமக்களையும் மகான்களையும் திருவண்ணாமலை,சதுரகிரி,பழனி
போன்ற இடங்கள் நமக்கு கொடுத்துள்ளன.அவற்றில் பழனி இன்றும் எத்தனையோ சித்தர்கள்
வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதுண்டு.18சித்தர்களில் ஒருவரும் பழனி முருகன் சிலையை செய்த போகரின் ஆவி ஒரு பெண்ணின் உடலில் இருப்பதாக நம்பப்படுகிறது கீழ்வரும் காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...